ஜோக்ஸ்



‘‘எனக்கு உடம்பு இப்ப பரவாயில்லைன்னு டாக்டர்கிட்ட தெரியாம சொல்லிட்டேன்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’‘‘நிஜமாவான்னு பார்க்கறதுக்கு திரும்பவும் ஃபுல் டெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டாரு..!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

தலை சுத்தறதை மருந்து கொடுத்து நிறுத்தலாம்; பூமி சுத்தறதை மருந்து கொடுத்து நிறுத்த முடியுமா?
- மருந்தில்லா உலகம் படைக்க நினைப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் பெண்கள் மட்டுமே கலந்துக்கிற விழாவா இருந்தாலும், அதைத் ‘திருமதி’ விழான்னு சொல்ல முடியாது; அதையும் ‘திரு’விழான்னுதான் சொல்லியாகணும்!
- திருமதிகளின் எதிர்ப்புக்கு பயந்து தத்துவ விழா எடுக்கத் தயங்குவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்துல இருக்கேன்... இப்ப எதுக்குய்யா கூப்பிடறே..?’’
‘‘நம்ம 5 வருஷ ஆட்சி முடிஞ்சிருச்சு தலைவரே..!’’
- சி.சாமிநாதன், கோவை.

‘‘தலைவரோடு குரூப் போட்டோ எடுத்துக்க ஆசைப்படறாங்களே... யார் அவங்க?’’
‘‘அவரோட ஒண்ணா ஜெயில்ல இருந்தவங்களாம்..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘நான் வீட்ல வடிவேலு... வெளியில விஜய்...’’
‘‘என்ன சொல்றே?’’
‘‘வீட்ல ‘எலி’, வெளிய ‘புலி’ப்பா!’’
- பாலா சரவணன்,
சென்னை-128.

‘‘கெட்ட நேரம் போறதுக்குள்ள உங்களை சந்திக்கணும்னு சொல்றாங்க தலைவரே...’’
‘‘யார்யா அது..?’’‘‘உங்களை அரெஸ்ட்
பண்ண வந்திருக்கிற போலீஸ்தான்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.