ஜோக்ஸ்



இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சரி... எரிமலை வெடித்துச் சிதறினா குழம்புதான் வருமே தவிர, ரசமோ, பொரியலோ வரவே வராது.
- மு.மதிவாணன், அரூர்.

‘‘என்னோட மெடிக்கல்
ரிப்போர்ட் என்ன
 சொல்லுது நர்ஸ்..?’’
‘‘ரூபாய் 8500 பீஸ் பாக்கின்னு சொல்லுது..!’’
- சி.சாமிநாதன்,
கோவை.

‘‘எங்கே
போனாலும்
ஹெல்மெட்
போட்டுக்கிட்டுத்தான்
போக வேண்டியதிருக்கு...’’
‘‘போலீஸ்காரங்க கெடுபிடியா..?’’
‘‘இல்லை... கடன்காரங்க
கெடுபிடி!’’
- கா.பசும்பொன், மதுரை.

‘‘என்ன... ‘லேக் வியூ’ அபார்ட்மென்ட்னு சொன்னீங்க! ஏரியையே காணோம்?’’
‘‘அந்த ஏரி மேலேதான் சார் இந்த அபார்ட்மென்ட்டே இருக்கு!’’
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

‘‘கட்சி தாவிட்டு தலைவர் பண்ற அலப்பறை
தாங்கலை...’’
‘‘என்ன பண்றார்?’’
‘‘அவருக்குக் கார் வேணாமாம். மெட்ரோ ரயில் வேணும்ங்கறார்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் ‘பக்திமானா’ இருந்தாலும், அவர் வீட்டு மைசூர்பாகுல ‘நெய்மணம்’தான் கமழுமே தவிர
‘பக்திமணம்’ கமழாது!
- ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டே ‘ஸ்வீட்டாக’
சிந்திப்பவர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.


‘‘டாக்டர்! ரொம்ப நேரமா யோசனை பண்றீங்களே... என்ன விஷயம்?’’
‘‘பார்மஸியில ஏதோ ஒரு மருந்து
விற்காம இருக்குன்னு சொன்னாங்க... அதோட பெயர் மறந்துடுச்சு!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.