facebook



ஆடின்னா கூட்டமா வர்றதும், ஜோடின்னா கூட்டமில்லா இடத்தைத் தேடறதும் சகஜம்தானே!
- சுரேஷ் ஆதித்யா

மோடி அரசு, இந்த ஏழை விஜய் மல்லையாவின் 400 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. நாம எல்லாம் கேஸ் சிலிண்டர் மானியத்தைத் தியாகம் செய்து, இந்தத் தியாகியையும் இந்தத் தியாகியோட குடும்பத்தையும் வாழ வைப்போம்!
- சுமி பி

என்னைத் திட்டிக்கொண்டே அறைக்குள் வரும்போது, கதவின் சட்டத்தில் முட்டி தலையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்...
# சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது.
- நாகராஜ் நடராஜ்

கிணற்றில் தொலைத்தால் தேடுவது எளிது எனவே உனக்குள் தொலைந்து போ- கலாப்ரியா

‘தொண்டையில் தேனா அல்லது தேனே தொண்டையா?’ - என்றேனும் ஒரு நாள் கேட்பேன் குயிலிடம்!
- முருகானந்தம் பாலகிருஷ்ணன்

பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், தெருவில் யாரெல்லாம் பொறுக்கிப் பசங்க என்று!
- தினேஷ்‬ அன்பரசன்

குடும்பத்தாரோட நட்சத்திரம், ராசி எல்லாம் தெரிஞ்சு வெச்சிக்கறாங்க. ஆனா அவங்க ப்ளட் குரூப் தெரியாதாம்...ஆபத்துன்னா ஆபரேஷன்தான் மொதல்ல பண்ணணும்; அப்புறம்தான் அர்ச்சனை பண்ணணும். என்ன நான் சொல்றது?
- செல்லி சீனிவாசன்

குஷ்பூவை இந்திராகாந்தியாக பார்க்கிறேன்: ஈவிகேஎஸ் விஜய்யின் உருவில் சிவாஜியைப் பார்க்கிறேன்: விஷால்‪#‎ ரெண்டு பேரும்‬ மொதல்ல வாசன் ஐ கேர பாருங்க...
- ராஜா அறந்தாங்கி

தியேட்டரில் முழு திருப்தியாக ஒரு படத்தைப் பார்த்து முடிப்பது என்பது, நமக்கு வாய்க்கும் முன் வரிசை சீட்காரரின் உயரத்தில்
இருக்கிறது!
- ஜான்ஸ் டேவிட் அன்டோ

தேர்தல் அறிக்கையில் ‘வாலு’ படத்தை ரிலீஸ் செய்வோம் என அறிவிக்கும் கட்சிக்கே இந்தத் தடவை ஓட்டுப் போட முடிவு செய்திருக்கிறேன்
- பூபதி கலைவாணன் அல்போன்ஸ்

சிலிண்டர் மானியம் வாங்க நாயா அலையணும்... ‘வேணாம்’னு சொல்ல சைபர அமுக்குனா போதுமாம்! நைஸ் பாலிசி...
 - ரிட்டயர்டு ரவுடி

மழை என்ற ஒற்றைச் சொல்லில் மொத்தக் கவிதையும் பெய்கிறது.
- ராஜா சந்திரசேகர்

என்னைக்கு காலிஃபிளவர்ல இலையைப் பிச்சிட்டு எடை போட்டுக் குடுக்கறாங்களோ, அன்னைக்குதான் நாடு வல்லரசாகுற சாத்தியம் இருக்கு...
- சுபா வள்ளி

டாஸ்மாக் கடையில் விற்பனை சரிவு, குடிமக்களுக்கு என்ன ஆனது என ஆய்வு - செய்தி.குடிமகன்கள் திருந்திட்டாங்கன்னு ஆய்வில் தெரிந்தால், வீட்ல இருந்து குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்து டாஸ்மாக்ல உட்கார வச்சி சரக்கு ஊற்றிக் கொடுப்பாங்களோ?!
- இளையராஜா டெண்டிஸ்ட்

twitter

@killernajath1 
பல்லில் விஷம் வைத்திருக்கும் ஜீவனை பாம்பு என்கிறோம்; சொல்லில் விஷம் வைத்திருக்கும் ஜீவனை மனிதன் என்கிறோம்!

@KirukuOfficial
டாஸ்மாக் கடைய மூடச் சொன்னா இவங்க 1700 அரசுப் பள்ளிகளை மூடப் போறாங்களாம்!

@Iamfakeid 
கொஞ்சம் மிஞ்சியிருக்குற தன்மானம்தான் பிரச்னை... இல்லைன்னா இந்த வாழ்க்கை இவ்ளோ கஷ்டமா தெரிஞ்சிருக்காது!

@vandavaalam 
வண்டி ஹெட்லைட்டை ஆன் செய்வதற்கு முன்பு வீடு வந்தடையும் வேலைதான் நிம்மதியான வேலை!

@paviparu31
இருபது ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பின்பும், கயிறை அறுத்துக்கொண்டு நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் பசு, தனிக்குடித்தனம் போவோர்க்கு சாட்டையடி!

@Kumaru_ 
பணம் சம்பாதிக்கும்போது மனுஷன மறந்திடுறோம்; மனுஷன சம்பாதிக்கும்போது பணத்த மறந்திடுறோம்.
# இதான் வாழ்க்கை!

@mrithulaM 
எதைச் சொல்லலாம்/சொல்லக் கூடாது என்பதை விட, எதை எவரிடம் சொல்லலாம்/சொல்லக் கூடாது என்பதைக் கற்றுக் கொள்வதே கடினம்!

@sheiksikkanthar
நாம செத்தா சாம்பலா மட்டும் போகக் கூடாது, மத்தவங்களுக்கு ஒரு சாம்பிளாதான் போகணும் :)

@SENTHIL_WIN 
செருப்பைத் தைத்த பெரியவருக்கு தர பர்சில் கிழிந்த நோட்டைத் தேடுபவனுக்கு பழுதானது செருப்பல்ல...

@Thiru_navu 
மெல்ல முடியாத அளவுக்கு மிக்சர் சிதறிக் கிடக்கிறது... அதில் வறுத்த வேர்க்கடலையை மட்டும் தேடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

@mathychandru75 
பறவையை வாங்கிக் கூண்டில் அடைப்பதைவிட ஒரு செடியை நடுங்கள். பறவைகள் கூட்டம் கூட்டமாக மரத்தில் கூடு கட்டும்!

@Kuzhapps 
கோயம்பேட்டிலிருந்து பெருங்களத்தூர் தாண்டியபின், புளூட்டோவுக்குக்கூட 4 மணி நேரத்தில் போய்விடும் இந்த ஆம்னி பஸ்...

@imayabharathi
இத்தனை நாள் மதுவிலக்கு பற்றி வராத சந்தேகம் கலைஞர் அறிவித்தவுடன் வந்திருக்கிறது... ‘வருமானத்தை எப்படி சரிக்கட்டுவீர்கள்’ என மெயினருவி
மணியன் கேள்வி!

@kaviintamizh 
மதுவிலக்கு வேண்டும்னு சொன்னவங்க, ‘நாங்க   கொண்டு வருவோம்’னு கலைஞர் சொன்னவுடனே ‘அதெப்படி சாத்தியம்’னு பேச ஆரம்பிச்சிட்டாங்க!
#  இதானுங்க நடுநிலை...

@IamDheena 
மதுவிலக்கு சாத்தியமானால் டைரக்டர் ராஜேஷின் நிலைமை என்னவாகும் :)