‘‘குடும்பம்னா நாலும் இருக்கும்தான்டி... பொறுத்துப் போடி!’’
‘‘அது சரி... குடும்பமே நாலு இருந்தா என்னடி பண்றது?’’
- பி.பாலாஜி கணேஷ்,
கோவிலாம்பூண்டி.

‘‘என்னய்யா இது... கூட்டம் கை தட்ட மாட்டேங்குது?’’
‘‘கை தட்டணும்னு பேசி கூட்டிட்டு வரலையாம் தலைவரே!’’
- அ.ரியாஸ், சேலம்.
‘‘நேத்து பேசின மேடையில தலைவர் மேல அரதப் பழைய செருப்புகள் விழுந்ததாம்...’’
‘‘வரலாற்றுச் செருப்பு மிக்க கூட்டம்னு சொல்லு!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.
என்னதான் சாட்டிலைட் படம் எடுத்து அனுப்பும்னாலும், அது ஹீரோ, ஹீரோயினை எல்லாம் படமெடுத்து அனுப்பாது!
- பலான படம் பார்த்து
பாழாய்ப் போனோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘தலைவர் குட்டிக்கதை சொல்றதுக்கு பதிலா ஒன்லைன்
சொல்றாரே... ஏன்?’’
‘‘அவர் இப்ப சினிமாவுக்குப் போயிட்டாரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘தலைவருக்கு எப்பவுமே கோர்ட் ஞாபகம்தான்...’’
‘‘எதை வச்சு சொல்றே..?’’
‘‘மேடையில் பேச்சை ஆரம்பிக்கும்போதே ‘நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ங்கிறாரே!’’
- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ஒருத்தருக்கு அறிவுப் ‘பசி’ இருந்தாலும் பேப்பரை தின்னா அந்தப் பசி தீராது, படிச்சாதான் தீரும்!
- பசித்திருந்து தத்துவத்தை ருசித்திருப்போர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.