இளம் காதல் ஜோடி பரபரப்பாக ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் இன்ஸ்பெக்டரம்மா ஆர்த்தியின் குண்டு உடலில் பயம் துளிர்த்தது.‘நிச்சயம் வேற வேற ஜாதியாத்தான் இருக்கும். பேரன்ட்ஸ் எதிர்க்கிறதால நம்மளை நாடி வந்திருக்காங்கபோல. மேரேஜ் பண்ணி வச்சா ரெண்டு சமூகத்து ரவுடிகளும் சேர்ந்து நம்மளை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே..!’

‘‘நான் வட்டச் செயலாளர் வடிவேலுவோட மகன்ங்க...’’ என்று அந்தப் பையன் ஆரம்பித்ததுமே ஆர்த்திக்கு ஈரக்குலை கிடுகிடுத்தது. ‘ஐயோ... அந்த ரவுடி மகனா..?’
சரியாக அவள் செல் அலறியது.அந்த ரவுடியேதான்!‘‘இன்ஸ்பெக்டரம்மா, எம் மவனுக்கு அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிடாதீங்க! பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க... நான் வந்துடறேன்!’’ஆர்த்தி மென்று விழுங்கினாள்.
‘‘அவங்க ரெண்டு பேருமே மேஜர்னு நெனைக்கிறேன். அப்பிடியிருக்கும்போது...’’அவர் குழைவுடன் சொன்னார்... ‘‘பயப்படாதீங்க இன்ஸ்பெக்டரம்மா. நான் அடாவடி பண்ண வரல. என் உறவுகளையும், மீடியாக்காரங்களையும் அழைச்சுட்டு வரத்தான் டைம் கேட்டேன். எலெக்ஷன் வரப் போகுது... வடிவேலு ஜாதி பேதம் பார்க்காம தன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சார்னு நியூஸ் ஃபிளாஷ் ஆனாத்தானே எனக்கு அந்த சமூக ஓட்டுகளும் கொட்டும்!’’ஆர்த்தியின் பல்ஸ் நார்மலானது.
சுபமி