ஜோக்ஸ்



‘‘தூங்கும்போது நல்லா கை, கால் எல்லாத்தையும் நீட்டிக்கிட்டு தூங்குங்க...’’
‘‘முடியாது டாக்டர்! எதிர்ல மேனேஜர் உட்கார்ந்திருப்பாரு...’’
-பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

பனி தாக்கினால் ஸ்வெட்டர் போட்டு விரட்டலாம்; சனி தாக்கினால் ஸ்வெட்டர் போட்டு விரட்ட முடியுமா?
- சனி பரிகார பூஜைக்கு இடையில் தத்துவம் யோசிப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

தத்துவம் மச்சி தத்துவம்

கோழி மாதிரி கிறுக்கி வச்சா அது டாக்டர் கையெழுத்து; கோழி மாதிரி சுருண்டு கிடந்தா அது குடிகாரன் தலையெழுத்து!
- கையெழுத்தையும் தலையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘எங்க வீட்டுக்கு வந்த திருடன்கிட்ட, உங்களுக்கு சேர வேண்டிய மாமூலை நான் வாங்கி வைச்சிருக்கேன் ஏட்டய்யா!’’
‘‘சட்டத்தை நீங்க எப்படி கையில எடுத்துக்கலாம்..?’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தன்னைத் தேடி வந்த சி.பி.ஐ. கிட்ட தலைவர் என்ன சொன்னார்..?’’
‘‘கூட்டணிக்கு இப்ப என்ன அவசரம்னு கேட்டார்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘இது அரசியல்வாதிகளுக்கான பிரத்யேக காலண்டர்னு எப்படிச் சொல்றே?’’
‘‘செருப்பு விழுந்தா என்ன பலன்னு போட்டிருக்காங்களே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘மகளிரணித் தலைவி ஏன் மேக்கப் இல்லாம
அலையறாங்க..?’’
‘‘அவங்க கட்சி தாவுற மூடுல இருக்காங்களாம்!’’
- அம்பை தேவா, சென்னை-116.