விக்ரம் திறமை ஹாலிவுட்டில் கூட இல்லை!



எமி ஜாக்சன்

எப்பொழுது ‘ஐ’ பார்க்கலாம் எனத் தமிழகமே காத்திருக்க, இதோ படம் ரெடி! லண்டன் ஃப்ரெஷ் பொக்கே எமி ஜாக்சன், இப்போது தமிழ்நாட்டு ஏஞ்சல். நமக்காக, ‘ணிஹ்மீ’யை மட்டுமல்ல... மனசையும் திறக்கிறார் எமி!

‘‘எப்படிங்க இருக்கு ‘ஐ’ ரிலீஸாகுற ஃபீலிங்?’’‘‘சரியான கேள்வி. அதுதான் என் மனசுக்குள்ளும் எப்பவும் ஓடிட்டு இருக்கு. ஒரே வித்தியாசம் என்னன்னா, நீங்க வெளியில இருந்து ‘ஐ’யைப் பார்க்குறீங்க. நான் உள்ள இருந்தே பார்க்குறேன். எங்க யூனிட்ல எல்லாரும் விரும்புன மாதிரியே படம் வந்திருக்கு. எனக்குக் கிடைச்சது யாருக்கும் கிடைக்காத, மற்ற ஹீரோயின்கள் எல்லாம் மனசில் வேண்டிக்கிட்டு இருக்கற வாய்ப்பு. நம்ம எல்லாருக்கும் ஃபேன்டஸி பிடிக்கும்.

நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு ஹீரோ இருக்கான். ஷங்கர் சாருக்கு அந்த ஹீரோயிஸமும் சமூகக் கனவும்தான் அடிப்படை. அதில் வெளுத்துக் கட்டுவதுதான் அவர் பாலிஸி. இதில் பல தடைகளைக் கடந்து எகிறியிருக்கார். ‘ஐ’ அவரோட பெரிய சைஸ் கனவு. அதனால் விக்ரம், நான் உட்பட அதில் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இது அழகான கனவுதான். இங்கே வந்து தமிழில் அறிமுகமாகி, இங்கிருக்கறவங்களைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, ஷங்கர் சாரோட ட்ராக் ரெக்கார்ட் ஆச்சரியமா இருக்கு. அப்படிப்பட்ட அவர் என்னைக் கூப்பிட்டப்போ, அதில் இருந்த த்ரில்லை அப்படியே வார்த்தைகள்ல சொல்றது கஷ்டம். வாவ்..!’’

‘‘இந்த ப்ராஜெக்ட்ல எப்படி வந்தீங்க?’’
‘‘பி.சி.ஸ்ரீராம் என்னை எடுத்துக் கொடுத்த சில ஸ்டில்ஸ்தான் அவரை இந்த முடிவுக்கு வரவழைச்சிருக்கணும். ஷங்கர் சார் என்னை தமிழ்ப் பொண்ணாவே பயிற்சி கொடுத்து மாத்திட்டார். நானே மனசுக்குள்ள தமிழ்நாட்டை சொந்த மண்ணா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கே என்னை ஃப்ரேமில் பார்த்தால், இங்கிலீஷ் பொண்ணா தெரியலை. இப்போ தமிழ் கத்துக்கணும்னு கூட ஆசை வந்திருச்சு.

இதில் எனக்கு, ‘தியா’ன்னு பெயர். எனக்கே எனக்காக சிறப்பான இடங்கள் படத்தில் நிறைய இருக்கு. மாடலாகவும் வர்றேன். எனக்கு ஷங்கர் சார் பெரிய ஆச்சரியம். இன்னொரு பக்கம் விக்ரம் சார். ஏற்கனவே அவரோட ‘தாண்டவம்’ செய்திருக்கேன். நான் பார்த்தவரைக்கும், இப்படி ஒரு நடிகர் எங்கேயாவது சாத்தியமான்னு மனசில கேட்டிட்டிருக்கேன்!’’
‘‘விக்ரமை இவ்ளோ தூரம் சொல்றீங்க?’’

‘‘சில கெட் அப்... பரவாயில்லையா அல்லது இப்பக்கூட சொல்லலாமான்னு தெரியலை. உடம்பை அவ்வளவு தூரம் இளைச்சிருக்கிற ஒரு பகுதி. ஏதாவது மேக்கப்பில் அந்த எஃபெக்ட் கிடைக்கிற மாதிரி பண்ணிடலாம். ஆனாலும் அவரே அப்படி ஆகுறேன்னு சொன்னார். டைரக்டர் ஷங்கர், ‘வேண்டாம்... உங்க உடம்பைப் பார்த்துக்குங்க’ன்னு சொன்னது எனக்குத் தெரியும். அப்படியும் மனம் உவந்து அதைச் செய்தார்.

நாங்க அவுட்டோர் ஷூட் பண்ணும்போது சில விஷயங்களை ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவோம். ஆனா, அவரைப் பார்க்கவே பாவமா இருக்கும். எதையும் செய்ய வேண்டியிருக்கேன்னு செய்யாமல், அவ்வளவு அருமையா ஈடுபாட்டோடு எடுத்துக்கறார். இப்படிப்பட்ட திறமையை ஹாலிவுட்டில் கூட பார்க்க முடியுமா தெரியலை!’’
‘‘தமிழ்ப் பொண்ணா மாறுவது... மாத்திக்கறது கஷ்டமில்லையா?’’

‘‘அப்படி ஒரு ரோலைக் கொடுக்கும்போது, நாம் அதுக்கு சரியா வரணுமில்லையா. நானே என்னை பெரு முயற்சி எடுத்து மாத்திக்கிட்டேன். எனக்கு நல்ல நல்ல சீன்கள் இருக்கு. நிறைய டயலாக்ஸ் உணர்ந்து பேசியிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘வெரிகுட்’ வாங்கியிருக்கேன். என்னிக்கும் நான் ஷங்கர் சாருக்கு நன்றியா இருக்கணும். அப்படி ஒரு மனசை கடவுள் எனக்குத் தரணும்!’’
‘‘கிளாமரில் பின்னுறீங்க?’’

‘‘படத்துல இன்டர்நேஷனல் மாடலா வர்றேன். பி.சி.ஸ்ரீராம் எவ்வளவு பெரிய லெஜன்ட். எல்லாத்திலும் அழகுணர்ச்சியா, நேர்த்தியா அவர் கேமரா பார்வை பட்டிருக்கு. இந்த வருஷம் மட்டுமில்ல... எந்த வருஷத்துக்கும் ‘ஐ’ பெரிய படம். தமிழ் சினிமா பக்கங்களில் அதற்கு தவிர்க்க முடியாத இடமிருக்கு. ஒரு சுவாரஸ்யமான படம் பார்க்கப்போறோம்னு சாதாரணமா வாங்களேன்... உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும் ஐ!’’

‘‘அடுத்து...’’‘‘உதயநிதியோட கிராமத்துப் பொண்ணா நடிக்கறேன். அடுத்து தனுஷ் சாருக்கு க்யூட் ஹீரோயின். தமிழ் மக்கள்தான் இனி எனக்கு ஃபேவரிட்!’’
‘‘கத்துக்கிட்ட தமிழ் வார்த்தை?’’‘‘நான் சந்தோஷமா இருக்கேன். நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?’’

- நா.கதிர்வேலன்
அட்டைப்படம்: கார்த்திக் ஸ்ரீனிவாசன்