நியூஸ் வே



ஃபேமிலியோடு நியூசிலாந்து சென்றபோது விமான நிலையத்தில் தனது லக்கேஜை தொலைத்துவிட்டார் மாதவன். தீவிரமாக ட்ராக் பண்ணிய சில மணி நேரங்களில் மீண்டும் லக்கேஜ் அவரது கைக்குக் கிடைத்திருக்கிறது. இதைத் தாண்டி மாதவனை கவலையடைய வைத்த விஷயம், விமானத்தில் சைவ உணவு இல்லாமல் போனதுதானாம்!

விக்ரம்குமார் - சூர்யா காம்பினேஷனில் எடுக்கிற படத்திற்கு ‘24’ என பெயர் வைத்துவிட்டார்கள். ‘யாவரும் நலம்’ வெற்றியடைந்த பிறகு தமிழுக்கு வருகிறார் விக்ரம்குமார். சயின்டிபிக் த்ரில்லர் வகையாம். கதை பிடித்துப் போய் தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார் சூர்யா.

காண்டம் நிறுவனம் ஒன்று தனது விளம்பரத்திற்காக காஜலை அணுகியிருக்கிறது. 2 கோடி ரூபாய் வரை தர அவர்கள் முன்வந்திருக்கிறார்கள். இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா எனக் குழம்பிப் போயிருக்கிறார் காஜல். சன்னி லியோன், பிபாஷா பாசு பாதையில் போவாரா காஜல்? 

நியூ இயர் கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் செலிபரேட் பண்ணுவது எமியின் ஹாபி. கடந்த 2014 நியூ இயரை லாஸ் வேகாஸிலும், அதற்கு முந்தைய வருடத்தை கோவாவிலும் கொண்டாடிய பொண்ணு, இந்த நியூ இயரை மும்பையில் பந்த்ரா பகுதியில் உள்ள புது வீட்டில் தனது அம்மாவுடன் கொண்டாடியிருக்கிறார்.

ட்ரக் டிரைவராக விக்ரம், சமந்தாவுடன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் சமந்தா. ‘முண்டாசுபட்டி’யில் முனீஸ்காந்தாக நடித்த ராமதாஸ், இதில் விக்ரமுடன் ஃபுல் லெங்க்த் காமெடி செய்திருக்கிறார்.

‘வாலு’வை சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியிட புரொடியூசர் துடிக்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பே தராமல் சிம்பு குடும்பத்தோடு மலேஷியா டூர் அடித்திருக்கிறார். அடுத்த வருஷம் வந்தாச்சுங்க, முழிச்சிக்குங்க!

சினிமா என்பது க்ளாமர் மீடியா என்பதை புரிந்து வைத்திருப்பவர்களில் டாப்ஸியும் ஒருவர். இந்தியில் இப்போது அக்ஷய்குமாருடன் ‘பேபி’யில் தனி ஹீரோயினாக நடிக்கும் டாப்ஸி, இன்னொரு இந்திப் படத்தில் ஆக்ராவில் வாழும் இஸ்லாமியப் பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ஆக்ராவுக்கு ஒரு விசிட் அடித்து வந்திருக்கிறார்.

‘மதகஜராஜா’வில் கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தார் ஆர்யா. அடுத்து ‘‘ஆம்பள’யில் எனக்கு ரோல் எதுவும் கிடையாதா?’’ என விஷாலின் ஃப்ரெண்ட் என்ற உரிமையில் சுந்தர்.சியிடம் ஆர்யா கேட்டிருக்கிறார். ‘‘நீங்க அவரோட நடிச்ச அந்தப் படமே இன்னும் ரிலீஸ் ஆகலை. இதாவது ரிலீஸ் ஆகட்டும்... விடுப்பா’’ என சுந்தர்.சி ஜாலியாகச் சொன்னாராம்.

ஆர்யாவுடன் தமன்னா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் சந்தானம் அடிக்கும் டைமிங் காமெடிகளால், சந்தானத்தின் ரசிகையாகி விட்டார் தமன்னா. இந்தப் படத்திலும், தான் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிலும் பரபரவென இருக்கிறார் சந்தானம்.

‘வல்லினம்’ ஹீரோயின் மிருதுளா பாஸ்கர், ராம்கோபால் வர்மாவின் ‘ஐஸ்க்ரீம் 2’வில் நடிக்கிறார். பெங்களூருவில் வசிக்கும் மிருதுளா, கிளாஸிகல் டான்ஸர் என்பதால், அங்கே டான்ஸ் ஸ்கூல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். மூன்று வயதிலிருந்து பரதநாட்டியம் ஆடுபவர் அவர்.

இப்போது ஒரு கிராமத்து சப்ஜெக்ட்டில் கதை நாயகியாக நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி, இன்னமும் ஃபிட்னஸ் மெயின்டெயின் பண்ணுகிறார். அதிகாலை 5 மணிக்கே எழுந்து வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மறுபடியும் நவ்யா நாயர் நடிக்க வருகிறார். ஆனால், கேரக்டர் ரோல்களில் மட்டும் நடிப்பாராம். ஆனால், அம்மா, அக்கா ரோல்களில் நடிக்கவே மாட்டாராம். அடுத்த குழந்தை பிறந்தால் இந்தத் தீர்மானம் இன்னும் இறங்கி விடும்.

தமிழ் சினிமாவின் ரட்சகராக மாறிவருகிறார் அஜித். அடுத்து ‘வீரம்’ சிவாவுக்காக ஒரு படம் செய்கிறார். தன் நண்பன் விஷ்ணுவர்தன் நலனுக்காக, அவரைத் தயாரிக்கச் சொல்லி நடிக்கிறார். அகத்தியனை மறந்துட்டீங்க தல!

பழைய நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நான்கைந்து படங்கள் ஹீரோயினாக பண்ணியிருந்தாலும், கோலிவுட்டுக்கு புதுசு. சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஜய்யின் டைரக்ஷனில் ஒரு படம் என நடித்து வருகிறார் கீர்த்தி. அமலாபாலும் கீர்த்தியும் கேரளாவிலேயே ஃப்ரெண்ட்ஸ் என்பதால், கணவர் விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தியை ரொம்பவே ஸ்பெஷலாக கவனிக்கிறார் அமலாபால்.

விஜய் ‘பிகே’ படத்தை இரண்டு தடவை வந்து பார்த்துவிட்டார். ஒரு தடவை தனியாக, இன்னொரு தடவை குடும்பத்தோடு. அவரை இரண்டு தடவை பார்த்தவர்கள், ‘இந்தப் படத்தை தமிழ்ப்படுத்தும் ஆர்வம் வந்துவிட்டதோ’ என கிசுகிசுக்கிறார்கள்.

இயக்குநர் பாலசந்தரின் 13வது நாள் அஞ்சலி நிகழ்வு, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்தது. பாலசந்தரின் குடும்பத்தினரும், அவரது நெருங்கிய உறவினர்களும் தவிர, திரைத்துறையிலிருந்து ரஜினி, கமல், மணிரத்னம், ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் தாணு, ராஜேஷ் என பலரும் வந்திருந்து சிகரத்தின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியது உருக்கமான நிகழ்வு.