அவன் அவள் unlimited



ஒழுக்கம் இயற்கைக்கு எதிரானது?

நமக்குப் பிடிக்காதவர்கள் மீது மட்டும் நாம் கைக்கொள்ளும்
தந்திரத்துக்குப் பெயர்தான் ‘ஒழுக்கம்’!
- ஆஸ்கர் வைல்டு

ஒரு சிம்பிள் கதை. சிங்கம் 1, சிங்கம் 2 மாதிரி... இது சிங்கம் 10 கதை. ஒரு காட்டில் பத்து ஆண் சிங்கங்கள் ஒரே சீராகப் பருவ வயதை எட்டியிருந்தன. என்ன அதிசயம்! அதே காட்டில் 10 பெண் சிங்கங்களும் சம வயதில் கட்டழகுக் கன்னிகளாக வளர்ந்திருந்தன. பெண் சிங்கங்களில் எது சூப்பர் ஃபிகரோ அதற்குத்தான் நம்பர் ஒன் இடம். அதே கவர்ச்சி அடிப்படையில் நம்பர் 2, நம்பர் 3 என... ஒரு டாப் 10 ஹீரோயின் வரிசையை உருவாக்கி வைத்திருந்தன ஆண் சிங்கங்கள்!

இப்போது ஆண் சிங்கங்களில் டாப் 10 வரிசையை பெண் சிங்கங்கள் நிர்ணயிக்க வேண்டும். வழக்கம்போல பெண்ணினம் ஆணினத்தை அழகு அடிப்படையில் தேர்ந்தெடுக்காது. வலிமை, ஆதிக்கம்... இதை நிரூபிக்க ஆண்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகத்தான் வேண்டும். இந்த மேட்டிங் போட்டியில் எந்த சிங்கம் மற்ற ஒன்பது சிங்கங்களை ஓட ஓட விரட்டுகிறதோ... அதுதான் தன்னிகரில்லா ‘தல’. தனக்குக் கீழிருக்கும் எட்டு சிங்கங்களை தட்டி வைக்க முடிந்தால், அந்த சிங்கத்துக்கு நம்பர் 2 இடம். இப்படியே வலிமையால் ஒரு டாப் டென் ஆண் சிங்கம் லிஸ்ட் அமைந்துவிட்டது.

டாப் 10 மணமகள்கள் - மணமகன்கள் ரெடி. அப்புறமென்ன? ஒரே மேடையில் பத்து கல்யாணம்தான் என்கிறீர்களா?

அதுதான் இல்லை. காட்டுக்கே அரசனான சிங்கம் நம்பர் ஒன், ஒரே ஒரு பெண் சிங்கத்துடன் திருப்தி அடைந்துவிடுமா என்ன? அதுமட்டுமின்றி, அந்தத் தன்னிகரற்ற தலைவனை பெண்கள் குழாமில் அட்லீஸ்ட் ஐந்து பேராவது விரும்பியிருப்பார்கள். அவர்களின் வோட்டுதான் அவனுக்கு நம்பர் ஒன் இடத்தைத் தந்திருக்கும். ஸோ, சிங்கம் நம்பர் ஒன் ஐந்து பட்டத்தரசிகளோடு பட்டாயா ஸ்டைலில் பட்டையைக் கிளப்பப் போய்விட்டான்.

என்ன கொடுமை சார் இது! இரண்டாவதாய் இருக்கும் நம்பர் 2 சிங்கத்துக்கே ஆறாவது அழகி தான் அவைலபிள். அவனுக்கு மட்டும் ஒரே ஒரு மனைவி போதுமா? வரிசையில் அடுத்தடுத்து இருந்த மூன்று பெண் சிங்கப் பேரழகிகளை அவன் பெயர்த்துக்கொண்டு போய்விட்டான். மிச்சமிருப்பது பெண் சிங்கம் நம்பர் 9 மற்றும் 10தான். அவர்களையும் ஆண் சிங்கம் நம்பர் 3 வளைத்துக்கொண்டான். அவ்வளவுதான்... ரேஷனில் சர்க்கரை தீர்ந்த மாதிரி, அங்கே ஹீரோயின்கள் தீர்ந்துவிட்டார்கள்.

பட், ஆண் சிங்கம் நம்பர் 4க்கும் 5க்கும் கவலை இல்லை. தங்களுக்குக் கீழிருக்கும் 5 சிங்கங்களை வெல்லும் அளவுக்கு அவர்களிடம் வலிமை இருக்கிறது... வசீகரமும் இருக்கிறது. இப்போது மேட்டிங் போயிருக்கும் 10 பெண் சிங்கங்களில் யாராவது இவர்களை இரண்டாம் பட்சமாகவாவது நேசித்திருப்பார்கள்.

 ஸோ, அந்தப் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு துரோகம் செய்து தன்னிடம் வருவார்கள் என இவர்கள் காத்திருக்கலாம். இவர்கள் இப்படி ‘ஒழுக்க மீறலின்’ மூலமே தங்கள் மரபணுவை விதைத்து, விருத்தி செய்ய வாய்ப்பிருக்கிறது.பாவம், கடைசி 5 ஆண் சிங்கங்களுக்குத்தான் பெப்பே! ‘ஃப்ரீயா சுத்தும்போது ஃபிகரு இல்லையே... பிடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரீயா இல்லையே’ என ஃபீலிங் சாங் பாடியபடியே அவை ஒரு டாஸ்மாக் மீட்டிங் போட்டன.

‘‘சே... பலம் இல்லைன்னா நமக்கெல்லாம் வாழ்க்கையே இல்லையா? அநியாயம்பா இது!’’ எனப் புலம்பியது சிங்கம் நம்பர் 6.‘‘அதான் பாஸ் இயற்கை. வலிமையுள்ளதுதான் இங்கே உயிர் வாழும். வலிமையுள்ளவன் மட்டும் இனப்பெருக்கம் செஞ்சாதான் வருங்கால சிங்கங்கள் இன்னும் இன்னும் வலிமையாகிட்டே போகும். இது டார்வினோட நேச்சுரல் செலக்ஷன் தியரி!’’ என்றது சிங்கம் நம்பர் 9.‘‘அப்போ நம்ம தலைமுறை அவ்வளவுதானா? நாம தின்னு, தூங்கி சாக வேண்டியதுதானா?’’ - சிப்ஸ் பாக்கெட்டைக் கசக்கி, கண் கலங்கியது சிங்கம் நம்பர் 7.‘‘இதை மாத்த என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு...’’ என்றது சிங்கம் நம்பர் 10. எல்லோரும் அதை உற்றுக் கவனித்தார்கள்.

‘‘நல்லா கேட்டுக்கங்க. இதுக்குப் பேரு ‘ப்ராஜெக்ட் ஒழுக்கம்’. நாளையில இருந்து நம்ம காட்டுல இருக்குற எல்லா சிங்கங்கள்கிட்டயும் ஒழுக்கம்னு ஒண்ணை சொல்லிக் கொடுப்போம். வாழ்க்கை முழுக்க ஒரே பெண் சிங்கத்தோடதான் வாழணும். வலிமை இருந்தாலும் இன்னொரு சிங்கத்தை அடிக்கக் கூடாது.

தான் வேட்டையாடின இரையை வலிமையில்லாத மத்த சிங்கங்களுக்குக் கொடுத்து சாப்பிடணும்னு அதுல ரூல்ஸ் போடுவோம். எல்லாரும் இதை ஃபாலோ பண்ணிட்டா, அதுக்கப்புறம் நம்ம ஒவ்வொருத்தருக்குமே ஒவ்வொரு ஜோடி கிடைக்கும். உணவும் கிடைக்கும். எல்லாருமே இனப்பெருக்கம் பண்ணலாம். சந்ததியை வளக்கலாம்!’’

விசிலடித்து கைதட்டின எல்லா சிங்கங்களும். சிங்கம் நம்பர் 8க்கு மட்டும் திடீரென ஒரு டவுட். ‘‘ஆனா, இது இயற்கைக்கு எதிரானது இல்லையா? வலிமையில்லாத நாமெல்லாம் இனப்பெருக்கம் பண்ண ஆரம்பிச்சிட்டா, வருங்கால சிங்க இனத்துல வலிமையில்லாத சந்ததி பெருகிடாதா? சிங்க இனமே பலவீனமான விலங்காகிடாதா?’’இதைக் கேட்டு சிங்கம் நம்பர் 10 அதிர அதிரச் சிரித்தது.

‘‘அடப் பைத்தியக்காரா! நாமெல்லாம் வலிமை இல்லாதவங்கதான். ஆனா, இப்படி ரவுண்டு கட்டி ஐடியா யோசிக்கிற அளவுக்கு புத்திசாலிங்கடா. நம்ம சந்ததிக்கு வலிமை இல்லாட்டியும் அறிவு அதிகம் இருக்கும். அடுத்தடுத்த தலைமுறை இன்னும் இன்னும் அறிவாளியாகும். யாரு கண்டது?

எதிர்காலத்துல அறிவாளி சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாலும் விடலாம்!’’ என்றது அது.அதிர்ஷ்டவசமாக இப்படியொரு மீட்டிங்கை சிங்கக் கூட்டம் இதுவரை போடவில்லை. சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு குரங்குக்கூட்டம்தான் இப்படி மீட்டிங் போட்டது. அதன் விளைவுதான் நாம்!

‘‘உலக வரலாற்றில் மனித இனம்ங்கறது ஒரு தனிப்பட்ட விபத்து’’ - ‘எந்திரன்’ படத்தில் சுஜாதா எழுதிய வசனம் இது. மனிதனைத் தோற்றுவித்த அந்த விபத்து இப்படியும் நிகழ்ந்திருக்கலாம் என்பது மானுடவியல் பார்வை. இந்தக் கதையை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

1. ஒழுக்கம் என்பது இயற்கைக்கு மாறானது. அது பலவீனமானவர்களின் ஆயுதம். தோற்றுப் போனவர்களின் கண்டுபிடிப்பு!
2. அறிவிலிருந்து பிறந்தது ஒழுக்கம். அதுதான் மானுடத்தின் தொடக்கம். இயற்கையை எதிர்க்க எதிர்க்கத்தான் மனிதன் மனிதனானான்!இந்த இரண்டுமே உண்மைதான். ஆனால், இவை இருவேறு கொள்கைகளாகிவிட்டன. உலகில் இந்த இரு கட்சியினர் பாதிக்குப் பாதி இருக்கிறார்கள். இன்று வரை எந்த சச்சரவாக இருந்தாலும் அதன் அடிநாதமாக, ‘இயற்கைக்கு ஆதரவானது - எதிரானது’ என்ற இரு கொள்கைகள்தான் மோதிக்கொள்ளும்.

சமீபத்தில் வந்த ‘சூது கவ்வும்’ படம், மனிதனின் நன்னடத்தைகளை வேறு கோணத்தில் பார்த்தது. ‘நல்லவர்கள்’ எனப்படுகிறவர்களின் சூழ்ச்சியையும், ‘கெட்ட’ செயல் செய்பவர்களின் அப்பாவித்தனத்தையும் அதில் பதிவு செய்த இயக்குநர் நலன் குமரசாமியிடம் பேசினோம்...‘‘ஒழுக்கம் தேவைதான் தலைவரே. ஆனா, இங்க ரூல்ஸை ஃபாலோ பண்றதுதான் ஒழுக்கம்னு நினைக்கிறாங்க. மனுஷனுக்கு மனுஷன் கரிசனம் காட்டுறதுதான் ஒழுக்கம்.

திருட்டுத் தொழில் பண்றவன்கிட்ட கூட அடிப்படை இரக்கம் இருக்கு. ஆனா, கண்ணை மூடிக்கிட்டு ரூல்ஸை ஃபாலோ பண்றவன்கிட்ட இல்ல. ரூல்ஸும் மனுஷனுக்காக உருவானதுதான். ஆனா, அது காலத்துக்கு ஏத்த மாதிரி மாறுறதில்ல. அதனால அதுல நிறைய ஓட்டைகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் வந்துடுது. நல்லவன்னு சொல்லிக்கிற சில பேர் இந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி மனுஷங்களை வதைக்கிறாங்க.

அப்போதான் வேற வழியில்லாம நாம ‘சூது கவ்வு’றதை ரசிக்க வேண்டியிருக்கு!’’ என்றார் அவர். அப்படி என்னங்க ரூல்ஸ்ல ஓட்டை? இப்படியொரு ‘டாஸ்மாக்’ மீட்டிங்கை சிங்கக் கூட்டம் இதுவரை போடவில்லை. குரங்குகள்தான் போட்டன. அதன் விளைவுதான் நாம்!டேய் உனக்காகத்தான்டா அப்பா கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிக்கிறேன். தண்ணி, பொண்ணுங்கன்னு கெட்டுப் போயிடாம, ஒழுக்கமா நடந்துக்க. நீயெல்லாம் நல்லா வருவடா! சரிப்பா!

தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்