facebook வலைப்பேச்சு



காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் நேரு குடும்பத்தினருக்கு இடமில்லை. ஆனால் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு இடம். # மேனகா சஞ்சய்காந்தி - ஆர்.முத்து குமார்

என்ன பேசுகிறேன் என்பதற்கு மட்டுமே நான் பொறுப்பு... எப்படி அதை விளங்கிக் கொள்
கிறாய் என்பதற்கல்ல!
- மஞ்சுபாஷினி
ஜெகதானந்தன்

பன்னிரெண்டாம் தேதி அமலாபாலுக்கு கல்யாணமாம். பதினான்காம் தேதி எனக்குப் பிறந்த நாள். ‘ஏன்தான் இந்த உலகத்தில பிறந்தேன்’னு இரண்டு நாட்கள் புலம்ப வச்சுட்டாங்க!
-விநாயக முருகன்

நாம சாக்கடையில விழுந்துட்டா சோப் போட்டு சுத்தமாகிடலாம்; ஆனா அந்த சோப்பே சாக்கடையில விழுந்துட்டா?
- கிருஷ்ணா கிட்டு

தீவிரவாதத்தைப் பற்றி கவலைப்படுபவன், நிச்சயம் திருமணம் செய்யாதவனாகத்தான் இருப்பான்!
- ஜெயந்த் பிரபாகர்

பசி நேரத்தில் அவிழ்க்க முடியாத சாம்பார் பொட்டலத்தைக் கட்டியவனும், என்னைப் பொறுத்தவரை ‘சாடிஸ்ட்’தான்!
- செய்யாறு பாலு சிக்கன் குழம்பு கேட்ட கணவனை கழுத்தில் வெட்டிக் கொன்ற மனைவி!
# இப்பதான் வீட்ல ‘சிக்கன் வாங்கிட்டு வரவா’ன்னு கேட்கலாம்னு இருந்தேன்... ஜஸ்ட் மிஸ்
- அப்துல் வகாப்

உசுரோட இருக்கற கோழியப் பார்க்கும்போதெல்லாம் சிக்கன் ஞாபகம் வந்து சப்புக் கொட்டுனா நீ அசைவம்; சிக்கனை பார்க்கும்போதெல்லாம் செத்துப் போன (!) கோழி ஞாபகம் வந்து உச்சுக் கொட்டுனா நீ சைவம்!
# அம்புட்டுத்தேன் ஆங்ங்
- ஸ்ரீதேவி செல்வராஜன்

+2 ரிசல்ட் வந்த அன்று, ‘படிப்பும் மதிப்பெண்களும் முக்கியமே இல்லை. குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் வாழ்க்கையில் வசந்தம் கிடைக்கும்’ என்ற நண்பர்கள்தான், இன்று பட்டம் படிக்காத ஒரு பெண்மணி கல்வி அமைச்சர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்!
- ம.ராம்ஜி யாஹூ

அந்தக் காணாமல் போன மலேசியன் ஃப்ளைட் என்னய்யா ஆச்சு?
# நாம வேற மறந்து தொலைக்கிறோம்!
- சால்வாடி கோகுல்

மீன் வாங்கி வெட்டக் கொடுத்திட்டு ஸ்மார்ட் போனை நோண்டிக்கிட்டு இருந்தா, பாதி மீன்தான் வீடு வந்து சேரும்.
- ப்ரபின்ராஜ்

அன்று கண்ட எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டன. இன்று வரை மாறாத ஒன்று... ஊரடங்கின பின் கேட்கும் குல்பி ஐஸ் வண்டியின் மணி சப்தம்
- வித்யா சுப்ரமணியம்

‘‘மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே வெளி
யேறுவேன்’’னு சொன்ன தேவ கவுடா‘டெல்லி’
யில் மோடி பதவியேற்பு விழாவில் உட்கார்ந்திருக்காரு!
# மானஸ்தன்?!
- ஈரோடு கதிர்

twitter வலைப்பேச்சு

@iamVINISH   
முட்டாள்னு யாருமில்ல... அவன் வேற துறைல அறிவாளியா இருப்பான்!

@IamRajmuthu   
மரியாதை கொடுக்குறதே நமக்கு திரும்பக் கிடைக்கத்தான்னு பல பேருக்குப் புரியறதில்ல!

@VenkysTwitts 
  வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு கொடுக்கும் அதிகபட்ச மரியாதை, வரும்போது டி.வியை
ஆஃப் பண்ணி வைப்பதுதான்!

  @sudarkodii
இல்லாத உலகத்தை உருவாக்குவதுதான்
காதல்!

@FrancisPichaiah   
அப்பாவின் குறைகளை எல்லாம் அவர் ரிடையர் ஆன
பிறகுதான் அம்மாவும் பிள்ளைகளும் கண்டுபிடிக்கிறார்கள்!

@Kaniyen   
ஜன் லோக்பாலை வலுவாக நிறைவேற்ற மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே
# ஆ... ஊ...ன்னா தாத்தாவுக்கு அஜீரணக் கோளாறு வந்திடுது!

 @iRexArul   
‘மருமகள்’ (?) டிவி சீரியலில் நடித்தவர் இன்று மந்திரி. இனிமேல் யாராச்சும் பொம்பளைக டிவி சீரியல் பாக்கறத நக்கல் அடிப்பீங்க?

  @arasu1691
  ‘அதே இடத்தில் இரண்டாம் தடவை மூழ்கினாலும், நீ மூழ்குவது அதே ஆறு அல்ல! # யாரோ

  @RMnandhini
  வரப் போறது ஒத்த ஐந்நூறு ரூபாய் நோட்டு, அதுக்கு ரூபாய் எண்ணுற சத்தம் வேற!
# ஏடிஎம் அக்கப்போர்கள்

  @shivafreedom 
இந்த துணியெல்லாம் துவைத்து முடிக்கிறதுக்குள்ள... அப்பப்பா! அடுத்த பிறவியிலாவது ஆதிவாசியா பிறக்கணும் சாமியோவ்!

@kekkepikkuni 
உண்மை சுடும். ஆனா, வடையைச் சுடுமா உண்மை?

 @Kaniyen 
  14 தொகுதிகளில் நின்ற தே.மு.தி.க, 7 தொகுதியில் நின்ற பா.ஜ.கவுடன் எப்படி இணையும்: சந்திரகுமார்
# நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில்ணே, அவங்க ஏழாம் கிளாஸ் பாஸ்!

 @bommaiya   
என்னோட வண்டி திருடு போச்சுன்னா வண்டி ரொம்ப சந்தோஷப்பட்டுக்கும்... தூக்குனவன் கண்டிப்பா நம்மள சுத்தமா நீட்டா வச்சிப்பான்னு!