ஜோக்ஸ்



‘‘இங்க அட்மிட் ஆனா அவ்வளவு சீக்கிரத்தில் வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க போலிருக்கே..?’’
‘‘எதை வச்சு அப்படிச் சொல்றீங்க..?’’
‘‘நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால் காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘குற்றப் பத்திரிக்கையை படிச்சிட்டு தலைவர் என்ன சொல்றார்..?’’
‘‘கொஞ்சம் ஓவராத்தான் விளையாடிட்டேன் போலன்னு ஃபீல் பண்றார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் நோட்சில் இருப்பதாகக் கூறி பள்ளிக்கூட நோட்ஸ்களை எங்கள் தலைவரின் தலையில் கட்டி ஏமாற்றிய கயவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

உப்பளத்துல உக்காந்துக்கிட்டு அப்பளத்தை சாப்பிடலாம். அப்பளத்துல உக்காந்துக்கிட்டு உப்பளத்தை சாப்பிட முடியாது!
- அப்பள எண்ணெயில் சூடான தத்துவங்களைப் பொரிப்போர் சங்கம்
- பி.கோபி, கிருஷ்ணகிரி.

எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு...’’
‘‘ஏன்..?’’
‘‘தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க!’’
- சுப.தனபாலன், முத்துப்பேட்டை.

‘‘தலைவர்
தான் ஒரு பத்திரிகையாளர்ங்கிறதை நிரூபிச்சிட்டார்..!’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘பெயில்ல வந்ததும் சிறை விமர்சனம் எழுதிக்கிட்டிருக்கார்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவருக்கு போதை ஏறிடுச்சின்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘அடுத்த தேர்தல்ல செவ்வாய் கிரகத்திலேர்ந்து பிரசாரத்தை ஆரம்பிக்கப் போறேன்ங்கிறார்!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.