சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

“இனப்படுகொலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டாயா?’’
வழிமறித்துக் கேட்ட சார்வாகனரை சாந்தமான விழிகளுடன் ஏறிட்டார் பகவான் கிருஷ்ணர். ‘‘படுகொலைகளை தடுக்கத்தான் முயன்று வருகிறேன்...’’
‘‘எப்படி பாண்டவர்களையும், கௌரவர்களையும் மோத விட்டா?’’
‘‘க்ஷத்திரியர்களின் கடமை போர் புரிவது... நாட்டைக் காப்பது...’’
‘‘எனில், உன் கடமை அதில் குளிர் காய்வதா?’’

‘‘காமாலைக் கண்களுக்கு அனைத்தும் மஞ்சளாகத்தான் தெரியும்...’’
‘‘அனைத்தையும் உணர்ந்தவனுக்கு கறுப்பு - வெள்ளைக்கு இடையில் இருக்கும் சகல வண்ணங்களும் தெரியும்...’’ ‘‘மிக்க மகிழ்ச்சி. தங்களைப் போல் எல்லாம் தெரிந்தவரை சந்தித்தது என் பாக்கியம்...’’

‘‘இந்தக் குசும்பை மற்றவர்களிடம் வைத்துக் கொள் கிருஷ்ணா. உனது வார்த்தை ஜாலங்களில் மயங்குபவன் நான் அல்ல. க்ஷத்திரியர்களால் வேளாண் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி அந்தணர்களுடன் சேர்ந்து அவர்கள் நடத்தும் ஹோமங்களால் யாதவர்கள் அவதிப்படுகிறார்கள். அசுவமேத யாகத்தில் கால்நடைகள் பலி கொடுக்கப்படுகின்றன. இதனால் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் உழைக்கும் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள். இதனைத் தடுக்கவும், அவர்களைக் காக்கவும் உன்னால் முடியும் என்று முன்னால் வந்து நிற்கிறாய்...’’
‘‘உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கிறது சார்வாகனரே...’’

‘‘ஆனால், உன்னைப் போல் கேட்பவனின் மனதை ஈர்க்கும் அளவுக்கு உபதேசம் செய்ய என்னால் முடியாது கிருஷ்ணா. அந்த அளவுக்கு நான் நடிகனல்ல. மனிதன். சாதாரண மனிதன். க்ஷத்திரியர்களை விட வேளாண் மக்கள் ஒரு படி உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்ட பாண்டவர்களை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறாய். இதற்காக வேள்வி செய்யும் அந்தணர்களுடன் நீ கூட்டணி அமைத்திருக்கிறாய் பார்... அதுதான் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வித்திடப் போகிறது. ஏன் தெரியுமா?’’
‘‘தெரியவில்லை. சொல்லுங்கள்...’’

‘‘உனக்கா தெரியாது? பரவாயில்லை. நானே சொல்கிறேன். க்ஷத்திரியர்களுக்கான தர்மம் என்பதையே வகுத்தவர்கள் அந்தணர்கள்தான். இது உனக்கும் தெரியும். ஆனாலும் இப்போது அவர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் கசப்பை உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறாய். இதற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அந்தணர்களுடன் கைகோர்த்திருக்கிறாய். இதன் மூலம் யாதவர்களை - வேளாண் மக்களை மொத்தமாக நீ அவர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறாய். காரணம்...’’
‘‘என்னை அவதார புருஷனாக ஏற்க அந்தணர்கள் சம்மதித்து விட்டார்கள்... அதனால் இப்படிச் செய்கிறேன்... இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?’’

‘‘நீ என்னதான் மூடி மறைத்தாலும் உண்மை அதுதான் கிருஷ்ணா. ஒன்றைப் புரிந்து கொள். அந்தணர்களின் மொழியான சமஸ்கிருதம், பல அர்த்தங்களைக் கொண்ட சொற்களை தன்னகத்தே கொண்டது. எனவே தேவையான இடத்தில் தங்களுக்கு சாதகமான அர்த்தத்தைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிடுவார்கள். இதற்கு உதாரணம், ‘அத’ என்னும் சொல். இதற்கு ‘மங்கலம், பிறகு, ஆரம்பம், கேள்வி, முற்றிலும்’ என ஐந்து அர்த்தங்கள் உண்டு.

இந்த ஐந்து பொருளுமே வெவ்வேறானவை என்பதில்தான் அவர்களது ஆதிக்கமே அடங்கியிருக்கிறது. இந்த உண்மையை மூடிமறைக்கவே தங்கள் மொழியை ‘தேவ பாஷை’ என்று அழைத்து மக்களை தங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வைக்கிறார்கள். இறுதியாக உன்னை எச்சரிக்கிறேன். தனது சுயநலத்துக்காக கௌரவர்களை அழிக்க சகுனி தாயம் உருட்டுகிறான். இதற்கு நீ துணை நிற்காதே. அவதார பதவியை அடைந்து நீ சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. உண்மையிலேயே யாதவர்களையும், வேளாண் மக்களையும் காக்க நீ முடிவு செய்திருந்தால் அந்தணர்களை எதிர்த்துப் போராடு. அதற்கு சார்வாகனர்களான நாங்களும் துணை நிற்கிறோம். இல்லையெனில், உன் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தும் முதல் குழுவாக நாங்களே இருப்போம். இது இறுதி எச்சரிக்கை...’’

சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்து சென்றார் சார்வாகனர். அவர் செல்வதையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். அவரது வலது கையில் இருந்த சக்கரம் சுழல ஆரம்பித்தது. காலமும் அதற்கு ஏற்ப அசைந்தது. “காட்ஸில்லா...’’ என்று அலறத்தான் மகேஷ் நினைத்தான். ஆனால், சிலந்தியால் அவன் வாய் மூடியிருந்ததால் அந்தச் சொல் வெளியே வரவேயில்லை.

தரையை பிளந்து எழுந்த காட்ஸில்லா, தன் தலையை சிலுப்பியபடி நிமிர முற்பட்டது. முடியவில்லை. இத்தனைக்கும் குகையின் உயரம் அதிகம்தான். ஆனாலும் அதற்கு அது போதவில்லை. எனவே இடுப்பு வரை மட்டுமே நிமிர்ந்தது. அப்படியும் தலை இடித்ததால் தோளை குறுக்கியது.

அதன் பார்வையில் சிலந்தி வலையில் சிறை செய்யப்பட்டிருந்த மகேஷ், எறும்பை போல் தெரிந்தான். அலட்சியமாக வாயைத் திறந்து சிரித்தது. அந்த சிரிப்பே இடி போல் குகையில் எதிரொலித்தது. பாறைகள் எல்லாம் நிலநடுக்கத்தால் நடுங்குவது போல் அதிர்ந்தன.

வாலை பின் பக்கம் இழுத்த காட்ஸில்லா, தரையோடு தரையாகப் படுத்தது. இதனால் அதன் தலையும், அவன் தலையும் நேருக்கு நேர் வந்து நின்றன. மகேஷ் மிரண்டான். அவன் பார்வைக்கு நேராக இரண்டு பெரிய நெருப்புக் கோளங்கள் போல் அதன் கருவிழிகள் ஜொலித்தன. பயந்து போய் முகத்தைத் திருப்ப முயற்சி செய்தான். சிலந்தியால் கட்டப்பட்டிருந்ததால் அசையக் கூட முடியவில்லை.

அவனது அவஸ்தையை புரிந்து கொண்ட காட்ஸில்லா, மெல்ல தனது ஒரு காலை உயர்த்தியது. அவனது வாயை மூடியிருந்த சிலந்தியை விலக்கியது.
‘‘ஹ... ஹ...’’ என வாயினால் மூச்சு விட்டான்.
‘‘பயமா இருக்கா மகேஷ்?’’ காட்ஸில்லா கேட்டது.
மூக்கெல்லாம் துடிக்க பதில் பேசாமல் மவுனமாக நின்றான்.

‘‘நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும். இல்லைன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்...’’
‘‘என்னன்னு சொல்லச் சொல்ற காட்ஸில்லா? சின்னதா ஒரு பல்லியை பார்த்தாலே அந்த இடத்தை விட்டு ஓடிடுவேன். அந்தளவுக்கு பயந்தாங்கொள்ளி. அப்படிப்பட்டவன் முன்னாடி ராட்சத பல்லியா நீ வந்து நிக்கற. பயப்படாம வேற என்ன செய்வேன்..?’’

‘‘அதுவும் சரிதான். உன்னைப் பார்த்தா எனக்கும் பாவமாத்தான் இருக்கு...’’
‘‘அப்ப என்னை விட்டுடறியா?’’
‘‘அது முடியாதே. உன்னை சாப்பிடச் சொல்லி ஸ்பைடர் மேனும், ஹாரி பார்ட்டரும் ஆர்டர் போட்டிருக்காங்களே...’’
‘‘அவங்க பேச்சை நீ கேட்கலாமா?’’
‘‘கேட்டுத்தானே ஆகணும்...’’

‘‘ஏன்?’’
‘‘ஏன்னா அவங்க என் ஃப்ரெண்ட்ஸ்...’’
‘‘இல்லை காட்ஸில்லா. அவங்க நம்ப எனிமீஸ்...’’
‘‘நீ சொல்றது புரியலையே...’’

‘‘இங்க பாரு. நீயும் நானும் ஆசியாவை சேர்ந்தவங்க. உன்னோட மதர் கன்ட்ரி ஜப்பான்தானே?’’
‘‘ஆமா...’’
‘‘நான் இந்தியன். தமிழ்நாட்டை சேர்ந்தவன்...’’
‘‘தெரியும்...’’

‘‘ஆனா, ஹாரி பார்ட்டரும், ஸ்பைடர் மேனும் ஹாலிவுட்டை சேர்ந்தவங்க...’’
‘‘ம்...’’
‘‘உண்மைல நீ ரொம்ப நல்லவன். சின்னப் பசங்களோட தோழன். அப்படித்தான் ஜப்பான் காமிக்ஸ் முழுக்க நீ இருக்க. அது மட்டுமில்ல. நீ உருவானதே நியூக்ளியர் ரியாக்ஷனால. அது கிழக்குக்கு எதிரா அமெரிக்காவும், மேற்கும் செய்த சதி...’’

‘‘இது உலகத்துக்கே தெரிஞ்ச உண்மை... ’’
‘‘ஆனா, யாருக்கும் தெரியாத விஷயமும் இருக்கு. நல்லவனான உன்னை ஏமாத்தி அமெரிக்காவைச் சேர்ந்தவங்க தூக்கிட்டு போயிட்டாங்க. மெல்ல மெல்ல உன்னை கெட்டவனா மாத்திட்டாங்க. அதனாலதான் இப்ப நீ நியூயார்க்கை அழிக்கிற. உன் மூலமா ‘ஆசியாவை சேர்ந்தவங்க பூரா கெட்டவங்க. அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் அழிக்கிறவங்க’ன்னு எல்லார் மனசுலயும் பதிய வைக்கிறாங்க. இப்படி ஒரு கெட்ட பெயர் உனக்குத் தேவையா?’’

ஹாரி பார்ட்டர் போட்ட வட்டத்தினுள் செய்வதறியாமல் தலை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்த வேதாளம், சட்டென்று நிமிர்ந்தது. மகேஷ் பேசியதை எல்லாம் அதுவும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. அவன் இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுவான் என்று துளியும் வேதாளம் எதிர்பார்க்கவில்லை.

‘அஷ்டமா சித்திகளை கற்கத் தயாரான உடனேயே இப்படி தைரியசாலியாக மாறிவிட்டான் என்றால், அவன் மட்டும் விக்கிரமாதித்த மகாராஜாவின் சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தால் எப்படிப்பட்ட சூப்பர் மேன் ஆக மாறுவான்?’ நினைக்கும்போதே வேதாளத்தின் உடல் சிலிர்த்தது. மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று அறிய ஆவலுடன் கவனித்தது.
தலையைக் கவிழ்த்து சில விநாடிகள் யோசித்த காட்ஸில்லா, தாடையை ஒரு பக்கம் உயர்த்தியது. ‘‘நீ சொல்றதெல்லாம் சரிதான் மகேஷ். எனக்கும் அந்த கெட்ட பெயர் பிடிக்கலை...’’
‘‘அப்புறம் என்ன? இந்த சிலந்தி வலைலேந்து என்னை விடுவிச்சுடு...’’
‘‘அது மட்டும் என்னால முடியாது...’’

‘‘ஏன்?’’
‘‘ஏன்னா, உன்னை அழிக்கிறதா அவங்க ரெண்டு பேருக்கும் பிராமிஸ் பண்ணிட்டேன். அதை என்னால மீற முடியாது...’’
‘‘நோ காட்ஸில்லா... அவங்க உன்னை மிஸ் யூஸ் பண்ணறாங்க. உன்னோட நல்ல குணத்தை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க. இதுக்கெல்லாம் நீ பலியாகக் கூடாது...’’
‘‘சாரி மகேஷ். ‘கொடுத்த வாக்கை காட்ஸில்லா மீறிடுச்சு’ன்னு வரலாற்றுல என் பெயர் பதிவாகறதை நான் விரும்பலை. அது ஏஷியன் கன்ட்ரீஸுக்கே அவமானம். ஸோ...’’
எச்சிலை விழுங்கியபடி அதன் முகத்தையே மகேஷ் கவனித்தான்.

‘‘உன்னைக் கொல்லப் போறேன்...’’ என்றபடி காட்ஸில்லா ஓரடி பின்னால் நகர்ந்து தன் வாயை அகலமாக திறந்தது. மகேஷை சிலந்தியுடன் சேர்த்து விழுங்கியது. இதைக் கண்ட வேதாளம் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தது.
ஆனால் -குகையின் மறுகோடியில் இருந்த தங்கப் பதுமை மட்டும் புன்னகைத்தது...

சுரங்கத்தினுள் பெருக்கெடுத்த காவிரியில் முதலைகள் நீந்தி வரும் வேகத்தை இளமாறன் கணக்கிட்டான். தாங்கள் இருக்கும் இடத்தை அவை இரண்டும் அடைய எத்தனை கணங்கள் பிடிக்கும் என்று ஆராய்ந்தான். அதன் பின்னர் செயலில் இறங்கினான். யவன ராணியை சுமந்தபடி இரண்டு முதலைகளை எதிர்கொள்ள முடியாது. எனவே தன் வலது கையை ராணியின் கழுத்துக்கு அருகில் கொண்டு சென்றவன், அங்கிருந்த ஒரு நரம்பை சுண்டினான். அடுத்த கணம், ராணி மயக்கமானாள்.

அவளை அப்படியே சற்றே உயரமாக இருந்த பாறையின் புடைப்பில் படுக்க வைத்தான். சுரங்கத்தினுள் பாய்ந்த பொன்னி, அந்தப் பாறையை மூழ்கடிக்கவில்லை என்பதையும், அவனது இடுப்பு உயரத்தை நீரின் போக்கு தாண்டவில்லை என்பதையும் கவனித்தவன், முதலைகளை எதிர்கொள்ளத் தயாரானான்.

அவை இரண்டும் வாயைத் திறந்தபடி அருகருகே நீந்தி வந்தன. பற்களின் கூர்மை குறுவாள் நுனிக்கு சமமாக இருந்தன. அவற்றின் உடல்கள் ஒன்றுடன் ஒன்று உராயவில்லை. அதே நேரம் ஒரே சமயத்தில் அவைகளால் திரும்பவும் முடியாது. ஒன்று வழிவிட்டால்தான் மற்றது வளையும். அந்தளவுக்குத்தான் சுரங்கத்தின் அகலம் இருந்தது. இதையெல்லாம் மனதில் பதிய வைத்தவன், சுரங்கத்தின் இரு பக்கங்களையும் கணத்துக்கு குறைவான நேரத்தில் ஆராய்ந்தான். பாறைகளில் பாசி படிந்திருக்கவில்லை. பாதங்களை ஊன்ற முடியும். வழுக்காது.

இது போதும். செயலில் இறங்கினான். இரு முதலைகளும் ஐந்தடி தொலைவு வந்ததும் தன் இரு கைகளையும் விரித்தான். சுரங்கத்தின் இரு பக்கங்களையும் பிடித்தான். சுவாசத்தை கட்டுப்படுத்தியபடி எம்பினான். உயர்ந்த இரு கால்களையும் நீருக்கு மேலிருந்த இரு பக்க பாறைகளிலும் ஊன்றினான். முதலைகளுக்கு அந்தப் பக்கம் செல்ல முயன்றான்.

இதை அவைகளும் எதிர்பார்த்திருக்க வேண்டும். திறந்த வாய்களுடன் அவையும் அவன் கால்களைக் கவ்வ எம்பின. உடனே இரு கைகளையும் நீட்டியபடி நீருக்குள் பாய்ந்தான். இரு முதலைகளின் வால்களுக்கு அந்தப் பக்கம் சென்றவன், இரண்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சட்டென்று புகுந்தான். இரு முதலைகளின் இடுப்பையும் பிடித்து சுரங்கத்தின் இரு பக்கங்களிலும் அழுத்தினான்.

அவற்றால் அசைய முடியவில்லை. திமிறின. உடற்பயிற்சி மூலம் வைரம் பாய்ந்திருந்த அவன் மார்புகளும், கைகளும் அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்தின.இரண்டு முதலைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்க முடியாது. எனவே உடலின் மொத்த வலுவையும் தன் வலது கைக்கு கொண்டு வந்து, இடது கையை தளரவிட்டான். பிடி நழுவியதும் அந்தப் பக்கம் இருந்த முதலை முன்னோக்கி நகர்ந்தது. ஆனால், சுரங்கம் குறுகலாக இருந்ததால் அதனால் உடனடியாகத் திரும்ப முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வலது பக்கம் இருந்த முதலையின் மீது ஏறியவன், தன் இரு கைகளாலும் திறந்திருந்த அதன் வாயை அகலமாகக் கிழித்தான்... ஆனால், முதலைகளை தவறாக எடை போட்டு விட்டோம் என்பதே அவனுக்கு பிறகுதான் இருந்தது. அதற்குள் அந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டது. ரங்கராஜனும், தேன்மொழியும் கவனிக்க, தமிழரசன் பேச ஆரம்பித்தார். ‘‘1990ம் வருஷம் நமக்கெல்லாம் ஒரு பாடம். அப்பத்தான் இந்தியாவுல உலகமயமாக்கல் அறிமுகமாச்சு. ஆனா, நம்மை திசை திருப்ப ராம ஜென்ம பூமியை ஆளும் தரப்பு கைல எடுத்தது...’’

‘‘போருக்காக நாம் அமைத்த வியூகம் சரியில்லை என்று மன்னர் கருதுகிறார்...’’
‘‘ஏன்?’’
‘‘ஓடி வர வழி விடவில்லையாமே!’’

‘‘பெண் பார்க்க சாயந்திரம் நாலு மணிக்குள்ளே வந்துடணும்...’’
‘‘ஏன்?’’
‘‘நாலரை மணிக்கு பாய் ஃபிரண்டோட அவ சினிமாவுக்குக் கிளம்பிடுவா!’’

‘‘கிராஸ் டாக் வருதுன்னு தலைவர் பேசவே தயங்கறார்...’’
‘‘எதிலே கிராஸ் டாக் வருது... டெலிபோன்லயா?’’
‘‘மேடையேறிப் பேசும்போது வருதாம்!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

(தொடரும்)