‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்துவிட்டு நிறைய ஹீரோக்கள் மிஷ்கினுக்கு போன் போட்டு பாராட்டியிருக்கிறார்கள். அவர் டைரக்ஷனில் நடிக்கவும் ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். ‘‘கைவசம் எந்த ஸ்கிரிப்ட்டும் ரெடியாக இல்லை, ஆரம்பித்தால்தான் யார் ஹீரோவாக வரமுடியும்னு தெரியும்’’ என சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.
கமலின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதிய சில பத்திகள் எல்லாம் சேர்ந்து மொத்தத் தொகுப்பாக புத்தக வடிவில் வருகிறது. ‘விஸ்வரூபம் 2’ முடிந்தவுடன் இந்த வேலையில் கவனம் செலுத்தி முடிப்பார் என்கிறார்கள். எழுத்தாளர் கமலின் முழுரூபம் இதில் விஸ்வரூபம் எடுக்கும்.
‘சாட்டை’ படத்தில் நடித்த மகிமா கைவசம் நான்கு படங்கள் இருக்கிறது. பி.ஏ ஆங்கிலம் படித்து வரும் மகிமா அடிப்படையில் மலையாளி என்றாலும், தமிழ் மொழி மீது தீரா காதல் கொண்டு திருக்குறள் படித்து வருகிறார்.
‘தலைமுறை’ படத்தை தன் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் போட்டுக் காட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா. அவரது நடிப்புதான் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது. வெறும் 50 லட்சம் ரூபாயில் படத்தை முடித்திருக்கிறார்கள். பெயருக்குப் பெயர், பணத்துக்குப் பணம், விருதுக்கு விருது!
மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பூசியை இதுவரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துவந்தது இந்தியா. ‘ஜென்வாக்’ என்ற பெயரில் இந்தியாவே முதல்முறையாக தடுப்பூசி தயாரித்துள்ளது. உலகத்தரமான இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கியது. வெளி மார்க்கெட்டில் 160 ரூபாய் விலையில் விரைவில் கிடைக்கும். அரசு மருத்துவமனைக்கு இது குறைந்த விலையில் சப்ளை செய்யப்படுமாம்!

அனேகமாக 2015ல் சித்தார்த் - சமந்தா கல்யாணம் நடக்கும். அதற்காக ஒப்புக்கொண்ட நாலே நாலு படங்களை முடிக்கும் அவசரத்தில் இருக்கிறார் சமந்தா.
கடந்த வாரம் இந்தியா வந்த ‘மிஸ் யூனிவர்ஸ்’ ஒலிவியா கல்போ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தாஜ்மகாலைப் பின்னணியாக வைத்து விளம்பரப் படங்களோ, டிசைன்களோ செய்ய அனுமதி இல்லை. தாஜ்மகால் முன்பாக ஒலிவியா ஒரு காலணி விளம்பரத்துக்கு போஸ் கொடுக்க, விவகாரம் போலீஸ் வரை போய்விட்டது. பதறிப் போய் மன்னிப்பு கேட்டிருக்கிறார் பிரபஞ்ச அழகி!
‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் ராய், தனக்கு இவ்வளவு சீக்கிரம் நல்ல நேரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லையாம். யெஸ்! இரண்டாவது படமே இவருக்கு இந்தி வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
எங்கேயாவது விஜய் ஆன்டனி ஜாடையில் யாராவது இரவில் படுத்துக் கிடந்தால் ஆச்சர்யப்படாதீர்கள். அது அவரேதான்! 40 நாட்களாக ‘சலீம்’ படத்திற்காக தொடர்ந்து இரவில் சென்னையெங்கும் ஷூட்டிங் நடப்பதால், லைட்டிங் செட் பண்ணுகிறவரை ஒரு ஓரத்திலேயே தூங்கி விடுகிறார் ஆன்டனி.
தெலுங்குப் படத்தில் வாய்ப்புகளைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் டூ விட்டுக்கொண்ட நயன்தாராவும் த்ரிஷாவும் இப்போது பரஸ்பரம் பழம் சொல்லிக்கொண்டுள்ளார்கள். சமாதானத்தின் அடையாளமாக கன்னத்தோடு கன்னம் வைத்து போட்டோ எடுத்துள்ளனர்.
‘அத்தரிண்டிக்கு தாராதி’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் ப்ரணிதாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் அவர் ஏற்கனவே ஒப்பந்தமான கன்னடப் படங்களுக்கு கால்ஷீட் சொதப்புவதாக புகார்கள் எழுகின்றன.
முதல் தடவை பெண் குழந்தைக்குத் தந்தையான செல்வராகவன், இந்தத் தடவை ஆண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார். இப்போது அவர் சிகரெட் கூட தொடாத அப்பா.
அசசிகுமார் வெளிநாடுகளுக்குப் போய் டூயட் போட்டதில்லை. இப்போ முதல் தடவையாக ‘பிரம்மன்’ படத்திற்காக புது ஹீரோயின் லாவண்யா திரிபாதியுடன் டூயட் போட சுவிட்சர்லாந்து போகிறார். குளிருக்கு ‘சுள்’ன்னு ஆட்டம் போடுங்க குட்டிப்புலி!
சைலன்ஸ்
கதாநாயகிகளின் நாயகனாக இருக்கும் கடவுள் நடிகரின் பாச்சா ‘டைம்’ நடிகையிடம் மட்டும் பலிக்கவில்லை. நடிகையிடம் என்ன குறும்பு செய்தாரோ தெரியவில்லை... ஹீரோ பேரைச் சொன்னாலே நறநறக்கிறார் நடிகை. ஹீரோவும் தன் நட்பு வட்டத்தில், ‘‘அந்தப் பொண்ணு சரியான முசுடுங்க’’ என்று வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறாராம்.
திடீரென்று நடிகை முறுக்கிக்கொண்டு கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போனது வெற்றி நடிகரின் தூண்டுதலால்தானாம். அவரேதான் பின்னணியில் இருந்து இந்தக் காரியத்தைச் செய்கிறாராம். நாயகி மனதில் இப்போது வெகு தூரம் உயர்ந்து விட்டாராம் நடிகர். இப்படியெல்லாமா காதலை டெவலப் பண்ணுவீங்க தம்பி?