சாமி... யாமிக்கு காமி!

‘நான் தேடும் காதலன்’ என குவாலிபிகேஷனை சொல்லி ஜொள்ஸ் இளைஞர்களின் பல்ஸை எகிற வைத்துவிட்டார் யாமி கௌதம். யாமிக்கு ஏற்றவனை சாமி... நீ காமி! - இரா.சந்தோஷ்குமார், கோயமுத்தூர்.
நீருக்காக வெட்டும் போர்வெல் குழிகள், குழந்தைகளை விழுங்கி கண்ணீர் தந்துவிடுகின்றன. வருங்காலங்களில் இது தொடராதிருக்க ‘குங்கும’த்தில் கூறப்பட்ட ஆலோசனைகள், அசட்டை மனிதர்களுக்கு சாட்டை அடி! - எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
தமிழக மீனவர்களின் உயிர், ஜீவாதாரமான படகு என அனைத்தையும் பறிக்கிறது இலங்கை கடற்படை. இனியும் இதை வேடிக்கை பார்ப்பது ராஜதந்திரம் அல்ல... இயலாமை என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்! - எம்.சம்பத், கரூர்.
‘ராஜா ராணி’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களின் விமர்சனங்கள் மா, பலா, வாழை போல் முச்சுவையாக இனித்தன. உங்கள் நியாயத் தராசில் ஐ.எஸ்.ஐ முத்திரை! - ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.
அறிவிக்கப்படாத மின்வெட்டுகளின் ஆட்சியில் அனல்மின் நிலையம் அமைப்பது தேவைதான். ஆனால், அதற்காக விளைச்சல் நிலங்களை அழிக்கப் பார்ப்பது கொஞ்சமும் ஏற்கக்கூடியதல்ல! - எம்.குணசேகரன், வேலாயுதம்பாளையம்.
வழிவழியாய் வந்த கலை அழிவதைத் தடுத்து, தன் இனத்தவரின் பழங்கால ஓவியங்களை மீட்டெடுத்த கிருஷ்ணனின் பணி மகத்தானது. அவற்றின் உயிரோட்டத்துக்கு தேன் எடுக்கும் ஓவியம் ஒன்றே சான்று! - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
புத்தியை பேதலிக்கச் செய்யும் கருமங்கள் எவை என்பதை ஷீரடி பாபா சுட்டிக் காட்டியது பக்தர்களின் ஆணவ மலத்தை வேரறுப்பதாக அமைந்தது! - எஸ்.கல்யாணராமன், கிருஷ்ணகிரி.
‘ஊட்டிக்கு 3வது பாதை தேவையா?’ கட்டுரை சிறப்பு. ஒரு நாட்டின் அடிநாதமே அதன் இயற்கை வளங்கள்தான். அதை அழித்துப் போடும் பாதை நம்மை அழிவுக்குத்தானே இட்டுச் செல்லும்! - கே.கலையரசி, தருமபுரி.
இமான் அன்ணாச்சியின் கட்டுரைதான் கலக்கல் என்றால் அண்ணாச்சியின் புகைப்படங்களும் கலகல. சிக்ஸ் பேக்ஸ் உடம்போடு காட்சி தருகிற படம் படு ஜோர் தலைவா! - த.சத்தியநாராயணன், அயன்புரம்
‘நேற்றைய பொழுதில்...’ பகுதியில் இயக்குநர் காரைக்குடி நாராயணன், தன் படத்தின் ஹீரோ தேங்காய் சீனிவாசன் பற்றி கூடச் சொல்லாமல், நாகேஷ் சாப்பிட்ட தோசை பற்றிச் சொன்ன விதம் அருமை! - லட்சுமி செங்குட்டுவன்,வேலூர்.
|