நையாண்டி





சினிமாவுல பஞ்சாயத்து சீனையெல்லாம் ஆரம்பிச்சு விடுறதுக்குன்னே ரெண்டு மூணு பெருசு இருக்குங்க... எதையாவது சம்பந்தமில்லாம ரைமிங்கா பேசி, பிரச்னைய பட்டன் ஸ்டார்ட் பண்ணி விடும்ங்க. அப்படி சில பஞ்ச் டயலாக்குகளையும் சீரியஸான பிரச்னைகளையும் பார்ப்போம்... கமான், ஃபாலோ மீ!

*  ஆக்ஷன் படம்னா ஆரம்பத்துலேயே பாட்டு போடுறதும், அரசாங்க விழான்னா கடைசில பாட்டு போடுறதும் சகஜந்தானேப்பா! நாய் கடிச்சதுக்கு, நாயவே கடிச்சிருக்கியே நல்லசிவம்?

*  பொண்ணுங்கன்னா பேசிக்கிட்டே இருக்கிறதும், பொண்டாட்டிங்கன்னா ஏசிக்கிட்டே இருக்கிறதும் சகஜந்தானேப்பா! இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி? இந்த வருஷம் திருவிழாவுல திண்டுக்கல் ரீட்டா ரிக்கார்ட் டான்ஸ் இருக்கா, இல்லையாப்பா?

*  பீர் குடிச்சா அடிக்கடி யூரின் போறதும், ஃபிகர் கிடைச்சா பாட்டு பாட ஹீரோ ஃபாரீன் போறதும் சகஜந்தானேப்பா! இப்ப அவன் என்ன பெரிய தப்பு பண்ணிட்டான், பழைய பாவாடையைத்தானே திருடினான்?

*  கல்யாணம்னு ஒண்ணு ஆச்சுன்னா, ஆம்பளைங்க லீuறீளீ ஆவறதும், பொண்ணுங்க தீuறீளீ ஆவறதும் சகஜம்தானேப்பா! இப்போ ராமசாமி பொண்டாட்டி காணாமப் போனாத்தான் என்ன, அதான் அவன் மச்சினி இருக்காளே?

*  ஆயுத பூஜைன்னா சுண்டல் செய்யறதும், மெகா சீரியல் ஹீரோயின்னா மெண்டல் ஆகுறதும் சகஜம்தானேப்பா! அவியல் இல்லன்னா துவையல தொட்டுக்கிட்டு திங்க வேண்டியதுதானே!

*  இளைச்சிப் போனா ஓமக்குச்சின்னு சொல்லுவதும், இடைத்தேர்தல்னா ஆளுங்கட்சி வெல்லுவதும் சகஜம்தானேப்பா! பொண்ணு ஓடிப்போனா, நீ தேடிப் போகணும்ல மாயாண்டி?

*  சொகுசு பங்களான்னா நாயும், காட்டு பங்களான்னா பேயும் இருக்கறது சகஜம்தானேப்பா! முதுகு தேய்ச்சு விட்டது தப்பில்ல முருகேசா... அது மச்சினின்னாகூட பரவாயில்ல, மாமியாருக்குல்ல தேய்ச்சிருக்க?

*  பரீட்சைன்னா பத்துப்பாட்டு வர்றதும், க்ளைமாக்ஸ்னா குத்துப்பாட்டு வர்றதும் சகஜம்தானேப்பா! மஞ்சத்தண்ணி விளையாட்டுல மொளகாப்பொடி கலந்தது தப்புதானே மருதமுத்து?

அரவுடின்னா குவாலீஸ்ல வர்றதும், க்ளைமேக்ஸ்ன்னா போலீஸ் வர்றதும் சகஜந்தானேப்பா! அதுக்காக ஆத்தாளோட சுருக்குப் பைய இப்படி ஆட்டயப் போடலாமா?

*  வில்லன் தங்கச்சின்னா ஹீரோ லவ்வுறதும், ஹீரோ தங்கச்சின்னா வில்லன் கவ்வுறதும் சகஜந்தானேப்பா! இதுக்கு போயி இலந்தைவடைய எச்சி பண்ணலாமா?

*  பசங்க மனசு தில்லா இருக்கறதும், பொண்ணுங்க மனசு கல்லா இருக்கிறதும் சகஜந்தானேப்பா! உன் சைக்கிள் பஞ்சர் ஆச்சுன்னு, அவன் சைக்கிள் டயரையும் கொத்திவிட்டு இருக்கியேப்பா?

ஆண்கள்ள மீசை வச்ச குழந்தை இல்லையா? இல்ல, பெண்கள்ளதான் புடவை கட்டுன பாப்பா இல்லையா? அப்புறம் ஏன் இந்தக் குழந்தைப் பசங்களுக்கு மட்டும் ரைம்ஸ் பாட்டு இருக்கு, வளர்ந்த பெரியவங்களுக்கு இல்லையேன்னு ரொம்ப நாளா வருத்தமா இருந்துச்சு. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துல ஒண்ணு ரெண்டு ரைம்ஸ் போட்டாலும், அது பெரியவங்களுக்கு ஏத்த மாதிரி இல்ல! அதான் குட்டிச்சுவர்லையே மெட்ட போட்டுட்டோம்.

*  இது ஆஃப் அடித்து ஆஃபாகும் அங்கிள்களுக்காக, ‘டிங் டாங் பெல்’...
டிங்கு டாங்கு பெல்லு
மாமா தந்தார் ஃபுல்லு
சைடுடிஷ் கொஞ்சம் அள்ளு
அடிச்சுட்டு ஆடாம நில்லு

*  இது புரணி பேசும் ஆன்ட்டிகளுக்கான, ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’...
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
பத்மா பட்டுப்புடவைய கொஞ்சம் பார்
பட்டுப்புடவைய வாங்கித் தந்தது யார்
அது பக்கத்து வீட்டு பல்ராம் சார்

*  இது பொண்ணுங்களுக்கு நூல் விடும் பசங்களுக்கான, ‘ஜானி ஜானி எஸ் பாப்பா’...
ஜானி ஜானி?
எஸ் பாப்பா
பார்த்து சிரிச்சாளா?
நோ பாப்பா
போன் பண்ணினாளா?
நோ பாப்பா
அண்ணன்னு சொன்னாளா?
அட ஆமாம்ப்பா!

*  இது பசங்களை டீலில் விடும் பொண்ணுங்களுக்கான, ‘ரெயின் ரெயின் கோ அவே’...
அன்பே அன்பே போய்விடு
எங்க அப்பா வரார் போய்விடு
அம்பது ரூவாய்க்கு ரீசார்ஜ் பண்ணிவிடு
அப்புறம் மிஸ்ட் கால் தரேன், நீணீறீறீ விடு

“யோவ் ஏட்டு, யாருய்யா இவிங்க?’’
‘‘யாரோ நாசா விஞ்ஞானி நாராயணசாமி நற்பணி இயக்கமாம் சார், 9 நாள் நவராத்திரி கொலுவ 15 நாள் நடத்தணும்னு பிராது கொடுக்க வந்திருக்காங்க!’’
‘‘அப்போ இப்போ வந்துட்டு போனவங்க?’’
‘‘அவங்க அம்மா மெஸ்ல அக்கவுன்ட் வச்சு திங்கிறவங்க சார். அம்மாவுக்கு புடிச்ச அமாவாசை அன்னைக்கு ஒரு நாள்தான் நவராத்திரி கொலு வைக்கணும்னு சொல்லிட்டுப் போறாங்க!’’
‘‘அப்போ வெளிய காத்திருக்கிறவங்க?’’
‘‘அவங்க காட்டு மரத்த ரோட்டுல போடுற குரூப் சார். கொலுவுல ஆம்பள பொம்மையும், பொம்பள பொம்மையும் ஒண்ணா இருக்கக்கூடாதுன்னு தெருவுக்கு தெரு பிரசாரம் பண்றப்ப புடிச்சுக்கிட்டு வந்தேன்...’’
‘‘அங்க யார்யா மூலைல? அவங்களுக்குள்ளயே அடிச்சிக்கிட்டும் வேட்டிய கிழிச்சுக்கிட்டும்?’’
‘‘அவங்க நொந்தபாலு, பானதேசிகன் குரூப் சார். கொலு படிக்கட்டுல அவங்கவங்க பொம்மையதான் வைக்கணும்னு ஒரே சண்டை சார்!’’
‘‘இத்தன பிரச்னைக்கு இடையில, யாருய்யா அது கொழுக் கட்டைய தின்னுக்கிட்டு?’’
‘‘அவரு த.போண்டியன் சார், கேப்புல கெடா வெட்டுறதுல பெரிய ஆளு!’’
‘‘அது யாருய்யா அது... செவுரு ஓரமா நின்னுக்கிட்டு அழுவறது?’’
‘‘அவர் நம்ம நடைப்பயண...’’
‘‘வேணாம், துண்ட பார்த்தாவே தெரியுது...’’

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்(ஸ்)!

நமீதா தொப்புள், நயன்தாரா தொப்புள் எல்லாம் இருக்கும்போது, பாவம் ஸ்கூல் பொண்ணாட்டம் இருக்கிற நஸ்ரியா தொப்புளுக்கு டூப்போட்டதாக சிக்கி சின்னாபின்னமான ‘நையாண்டி’ படக்குழு!