ஜோக்ஸ்





‘‘தலைவர் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவர்ங்கறதை நிரூபிச்சுட்டாரா... எப்படி?’’
‘‘சுயசரிதை எழுதக்கூட ‘ஸ்டோரி டிஸ்கஷன்’ பண்றதுக்கு ரூம் போட்டிருக்காரே!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவருக்கு என்ன குழப்பம்?’’
‘‘கூடியிருக்கற கூட்டத்தைவிட செருப்பு அதிகமாக எப்படி வந்து விழுதுன்னு யோசிக்கிறார்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘காசிக்குப் போற தலைவர், ஏன் சரக்கு ரயில்ல ஏறிப் போறார்..?’’
‘‘எக்கச்சக்க பாவமூட்டைகளை கொண்டு போறாரே..!’’
- சரவணன்,கொளக்குடி.

‘‘ஆச்சரியமாக இருக்கிறதே அமைச்சரே... இன்று இத்தனை புலவர்கள் ஏன் அரண்மனையில் வரிசையாக நிற்கிறார்கள்..?’’
‘‘தங்களை இகழ்ந்து பாட வேண்டும் என்று தவறுதலாக அறிவிப்பு செய்துவிட்டோம் மன்னா!’’
- அ.ரியாஸ், சேலம்.

டெய்லி ஷீட் காலண்டர்ல தினமும் தேதியைக் கிழிக்கிறவங்க, மன்த்லி ஷீட் காலண்டர்ல ஏன் மாசா மாசம் மாதத்தைக் கிழிக்கிறதில்ல?
- தேதியைக் கிழிப்போரை தத்துவத்தால் கிழிகிழி என்று கிழிப்போர் சங்கம்
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

என்னதான் டயர் டியூப்ல ‘மவுத்’ இருந்தாலும், அதனால வாய் பேச எல்லாம் முடியாது!
- டயர் டியூபை வச்சு தத்துவம் சொல்லும் ஆல் இன் ஆல் அழகு
ராஜாக்கள் சங்கம்
- குமார், மதுரை.

‘‘கபாலி ரொம்ப உயர்ந்த சிந்தனை கொண்டவன்னு எப்படிச் சொல்ற..?’’
‘‘ஏட்டுகளால நலிந்துபோன திருடர்கள் வீடுகள்ல உள்ள குழந்தைகளை ‘ஏட்டிஸம்’ பாதிச்சவங்களா கருதி அவங்களுக்கு உதவப் போறானாம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.