கவிதைக்காரர்கள் வீதி





நானும் நீயும்
உடனே உன்னைப்
பார்க்க வேண்டும்.
பார்க்கும்போது
என்னவெல்லாம்
செய்வேனென்று
பித்துப் பிடித்தவனைப் போல்
எத்தனை நாளைக்கு
எதை எதையோ
எழுதிக்கொண்டிருப்பது.
பார்த்த பின்னும்
பித்தம் தெளியுமென்று
தோன்றவில்லை.
‘பார்த்தபின்’
என்று எதையாவது
எழுதிக்கொண்டிருப்பேன்.
இப்படி வைத்துக் கொள்வோம்...
நானும் நீயும் பார்த்ததே இல்லை.
இல்லை... இல்லை...
நானும் இல்லை நீயும் இல்லை.

அகத்தின் அழகு

இன்னொரு நாளின்
தொடக்கம்.
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை  ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.
உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்
செல்வராஜ் ஜெகதீசன்