ஜோக்ஸ்





தத்துவம் மச்சி தத்துவம்

ஃபேன் சுத்தினா காத்து வரும்;
தலை சுத்தினா காத்து வருமா?
- காற்று வாங்க கடற்கரைக்கு வருவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘எதுக்கு கபாலி அந்த வீட்டுல
திருடுறதுக்கு முன்னாடி ரிப்பன்
கட் பண்ணினே..?’’
‘‘அந்த ஏரியாவுல எனக்கு அதுதான் முதல் திருட்டு ஏட்டய்யா..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய பெரிய ஆறுகளில் தண்ணீர் ஓடின சுவடு இருக்காம்...’’
‘‘அங்கே மணலாவது இருக்கா... அள்ளிட்டாங்களா?’’
- என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.

‘‘தலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கமா அலையறாரே... ஏன்?’’
‘‘நீதிபதி கேட்கற கேள்விகள் அவுட் ஆகுமான்னு பாக்கறார்...’’
- அம்பை தேவா, சென்னை.

நமக்கு வேண்டியவங்க இறந்து போனா அஞ்சலி போஸ்டர் ஒட்டலாம். ஆனா அதுல நடிகை அஞ்சலி படத்தையெல்லாம் போட முடியுமா?
- சுடுகாட்டுத் தீயில் சுருட்டு பிடிப்போர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

‘‘ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?’’
‘‘மூதேவி, காலங்காத்தால குடிச்சிட்டு பாட்டைப் பாரு... இது மஞ்சள் கலர் ரிப்பன்!’’
- சரவணன், கொளக்குடி.