அட்வகேட் அனுஷ்கா குங்குமம் டாக்கீஸ்



ஆர்யா ஜோடியா லிங்குசாமி டைரக்ஷன்ல ‘வேட்டை’க்காகப் பேசப்பட்ட அனுஷ்காவுக்கு அது தவறிப்போனாலும், அதே லிங்குசாமி தயாரிக்க மிஷ்கின் டைரக்ஷன்ல அதே ஆர்யாகூட ஜோடியாகற சான்ஸ் கிடைச்சிருக்கு. சினிமா உலகம் ரொம்பச் சின்னது பாஸ்..!

இன்னொரு அனுஷ்கா நியூஸ். விக்ரம் ஜோடியா ‘மதராசப்பட்டினம்’ விஜய் டைரக்ஷன்ல நடிக்க சென்னை வந்திருக்க அனுஷ்காவுக்கு அதில அட்வகேட் கேரக்டராம். நல்லா வாதாடுவாங்களா..?

கண்ணன் டைரக்ஷன்ல ஜீவா நடிக்கிற ‘வந்தான் வென்றான்’ல ஒரு போர்ஷன் மும்பைல நடக்குது. கதைப்படி ஜீவாவோட அண்ணன் மும்பைல இருக்கார். அந்தக் கேரக்டர்ல நடிக்கப்போறது நந்தா.

தமிழ்ல வெற்றியடைஞ்ச ‘மைனா’வை கன்னடத்துக்கும் கொண்டுபோறார் பிரபுசாலமன். கன்னடத்தில உச்சத்தில இருக்க முங்காரமலை ‘கணேஷ்’தான் அதில ஹீரோவாம். கன்னட மைனா யாரு..?

சமீரா ரெட்டி நீச்சல்ல புலி. அதோட ஸ்கூபா டைவிங்கும் சமீராவுக்கு அத்துப்படியாம். இதெல்லாம் கூடப் பரவாயில்லை. மோட்டார் பைக்கை பார்த்தா போதும். ‘ஒரு ரவுண்டு ப்ளீஸ்...’னு ஏறிப் பறந்துடும் பொண்ணு. பைக் ஓட்டும் பைங்கிளி..!

‘அவன் இவன்’ கடைசிக்கட்ட ஃபைட்டும், அதைத் தொடர்ந்த பாட்டும் பெரியகுளத்தில போய்க்கிட்டிருக்கு. ஜனவரி கடைசிக்குள்ள படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்காராம் பாலா. அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருக்காங்க அவரும், இவரும்...

தெலுங்கில ரெண்டு படங்கள் செய்திருந்தும், இன்னொரு டைரக்டரோட ‘விக்ரமார்க்குடு’வை தமிழ்ல ‘சிறுத்தை’யா டைரக்டர் சிவா பண்ண, அவர் தெலுங்கில டைரக்ட் செய்த ‘சௌரியம்’, விஷால் நடிக்க ரீமேக் ஆகிக்கிட்டிருக்கு. ‘ஊரார் பிள்ளை’ பழமொழி இதுக்கு ஒர்க் அவுட் ஆகுமா..?

புது டைரக்டர் சூர்யபிரபாகர் டைரக்ட் பண்ணி புதுமுகங்கள் நடிச்ச ‘தா’, வசூல் வெற்றி அடையாட்டியும் நல்ல படம்னு பேர் வாங்கிடுச்சு. அதனால அதோட குறைகளை நிவர்த்தி பண்ணி மீண்டும் பிப்ரவரில வெளியிடவிருக்காங்களாம். மீண்டும் மீண்டும் தா..!

தம்பி விஜய் முன்னணி டைரக்டராகிட, அப்பாவும் ‘ஈசன்’ல நடிகராகிட, தானும் ஒரு இடத்தைப் பிடிச்சே தீர்றதுன்னு ‘ரா...ரா...’ படத்தை ஆரம்பிச்சு நடிச்சுக்கிட்டிருக்கார் உதயா. ‘ரா ரா’ன்னா ராயயபுரம்... ராயப்பேட்டையாம். ‘லைம் லைட்’டுக்கு ரா... ரா..!


சைலன்ஸ்
அடுத்தடுத்த வெற்றிகள் ‘கபடி டீம்’ டைரக்டரை உச்சத்துக்குத் தூக்கிட்டுப்போனதில, இப்ப ராவண நடிகரோட அடுத்த படத்துக்கு அவரைத்தான் பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா, முன்னால அதுக்கு அக்ரிமென்ட் போட்ட டைரக்டர் சம்பளமா ‘ஆறு’ பேசியிருக்கவே, இவர் ‘ரெண்டு’ கேக்கறாராம். பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. ஆறு, ரெண்டெல்லாம் பெரிய நம்பருங்‘கோ..!’

‘இலி’ நடிகை பேரைக் கேட்டாலே வர வர கோலிவுட் தயாரிப்பாளர்கள் வயித்தில புளி கரைய ஆரம்பிச்சுடுது. அந்த நடிகையைப் பேசற படம் ஒண்ணு நின்னுடும்; இல்லாட்டி படத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துடும். ‘வெடி’ தொடங்கி ‘மூணு ஹீரோ’ படம் வரை இதுக்கு வரிசையான உதாரணங்கள். ‘இலி’யை மாத்தி ‘கிலி’ன்னு வச்சுடலாம்..!
 கோலிவுட் கோயிந்து