‘ஓ’ போடலாம் வாசகர் கடிதங்கள்



தியேட்டர்களை அதிரச் செய்த சூப்பர்ஸ்டாரின் ‘பஞ்ச்’ டயலாக்குகள் பிசினஸ் வெற்றிக்குப் பயன்படுகிறது என்கிற சேதி ஆச்சர்யப்படுத்துகிறது. புத்தகமாக்கியவர்களின் வித்தியாச சிந்தனைக்கு ஒரு ‘ஓ’ போடலாம்.
 அ.குணசேகரன், புவனகிரி.

பட்டிமன்றப் புலி பாப்பையாவின் பழைய வாழ்க்கைப் பருவம் சிக்கலான மேடு பள்ளங்களைக் கொண்டதாகத் தெரிகிறது. அந்தக் காலங்கள்தான் பாப்பையாவைச் செதுக்கியிருக்குமோ?
பொ.குணசீலன், விசயமங்கலம்.

சுவாமி ஜாலியானந்தாவின் லொள்ளும் ஜொள்ளும் பார்த்ததும் கொல்லுனு வந்த சிரிப்பை அடக்க ஆச்சு அரைமணி நேரம்.
சூ.ம.மதுவந்திகா, திருவண்ணாமலை.

இயற்கை தந்த அழகு போதும்னு இருக்காம எதை எதையோ தேடிப் போறவங்க முட்டைக்கருவையும், பன்றிக் கொழுப்பையும்தான் பூச வேண்டியிருக்கும், வேறென்ன சொல்ல?
லக்ஷ்மி செங்குட்டுவன், வேலூர்.

தேங்காய் என்கிற பொருளில் ஏன் மதத்தைக் காண வேண்டும்? றசூல் திருமேனியின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.
ஜெ.பார்வதி, கோயம்புத்தூர்.

‘கசக்கும் கணக்கு’ கட்டுரை படித்தோம். ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதும் மாணவர்கள் எப்படி திறமை காட்ட முடியும்? பள்ளிகள் ரிசல்ட் காட்ட வேண்டும் என்கிற வேட்கையில் திரிகிறவரை இந்த நிலை மாறாது.
பி.ராகவன், சென்னை44.

‘அப்பா மாதிரி ஆகிவிடுவோமோ’ என்று பயந்திருப்பார் சரண். அதனால்தான் மெனக்கெட்டு ஏகத்துக்கும் இளைத்திருக்கிறார்.
இ.டி.ஹேமமாலினி, திருவள்ளூர்.

ஒருபக்கச் சிறுகதைகள் அனைத்தும் சுவாரஸ்யம் மிகுந்தவையாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளன. தேர்வு செய்கிற நேர்த்தி அழகு.
வ.பழனி, புதுச்சேரி.

மருதமலைக்குப் போய் முருகனைத் தரிசித்து வந்த ஒரு உணர்வைத் தந்தது இந்த வார ‘ராசிக்கோயில்கள்’ பகுதி.
தி.மகேஸ்வரன், பெங்களூரிலிருந்து தொலைபேசியில்...

போஸ்ட் கார்டில் கடிதம் எழுதிய பழைய ஞாபகங்களை நினைவில் கொண்டு வந்தது ‘எனப்படுவது’ பகுதி. கடிதம் காலாவதியாகி வருவதைப் பார்க்கும்போது உள்ளபடியே வருத்தமாகத்தான் இருக்கிறது.
புவனேஸ்வரி, உறையூரிலிருந்து தொலைபேசியில்...

கேத்ரினா கைஃப் மதுரை பக்கத்துல அநாதை இல்லம் நடத்தறாரா? உம்ம நியூஸ் வே மூலமாத்தான் கேள்விப்படுறோம் தகவலை.
ம.அசோக்குமார், காரைக்குடியிலிருந்து தொலைநகலில்...

தலையாட்டினா காரியம் சாதிக்கலாம்னு பட்டுன்னு சொன்ன கடைசிப்பக்க கருத்து நச்சுன்னு இருந்திச்சு நைனா. இப்ப அதைத்தானே பண்ணிட்டிருக்கோம்யா.
ராசு.செல்வக்குமார், விருதுநகரிலிருந்து மின்னஞ்சலில்...