ஜாலி புதிர் உலகம்



அ.எது அந்தப் பழமொழி?

பழமொழிகளில் இடம் பெற்றிருக்கும் சில விலங்குகளைக் கீழே பார்க்கலாம். அந்தப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள். ஒரு நிபந்தனை... ஒவ்வொரு பழமொழியிலும் நான்கு வார்த்தைகள்தான் இருக்க வேண்டும்.     

ஆ.எலுமிச்சையா? அன்னாசியா?

இரண்டு பாட்டில்கள். ஒன்றில் எலுமிச்சை ஜூஸ். இன்னொன்றில் அன்னாசி ஜூஸ். இரண்டும் சம அளவில் உள்ளன. ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை எடுத்து அன்னாசி ஜூஸ் உள்ள பாட்டிலில் விடுகிறீர்கள். அடுத்ததாக இரண்டு ஜூஸும் கலந்துள்ள பாட்டிலில் இருந்து ஒரு ஸ்பூனை எடுத்து எலுமிச்சை ஜூஸ் உள்ள பாட்டிலில் விடுகிறீர்கள். இப்போது எது அதிக அளவில் இருக்கும்... எலுமிச்சை ஜூஸ் உள்ள பாட்டிலில் அன்னாசி ஜூஸா? அன்னாசி ஜூஸ் உள்ள பாட்டிலில் எலுமிச்சை ஜூஸா?

இ.கட்டங்களை நிரப்புங்கள்!

கீழே சில குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு குறிப்பும் உணர்த்தும் விடையை சரியான விதத்தில் கட்டங்களில் நிரப்பினால் மொத்த கட்டங்களும் முழுமை அடையும்.

    பழமைக்கு எதிர்ச் சொல்
    மனோரமா
    அறிவு
    சீதையின் இன்னொரு பெயர்
    ராதிகாவின் பிரபல தொலைக்காட்சித் தொடர்
    உலகம் கின்னஸ். இந்தியா?

ஈ.அந்த மூவர்!

பாடல் வரியில் விடுபட்ட வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்துகளை சரியான வரிசையில் அமைத்தால் ரஜினி நடித்த மூன்று கதாபாத்திரங்களின் பெயர்கள் வரும்.

1    ........ நிலாவே தேன் கவிதை பூ மலர
2    ........ இருக்குது முத்து இருக்குது திறந்து பார்க்க
3    ........ ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு
4    ........ காற்று வந்ததோ? நில்லென்று கேட்கச் சொன்னதோ?
5    ........ ஞாபகம் இல்லையோ? பருவ நாடகத் தொல்லையோ?
6    ........ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
7    ........ கையத் தட்டு புதுராகத்தில் மெட்டுக் கட்டு

விடைகள்


அ.எது அந்தப் பழமொழி?

1.    கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா?
2.    துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
3.    பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன்.
4.    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
5.    விடியவிடிய பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
6.    சிவபூஜையில் கரடி புகுந்த மாதிரி.

ஆ.எலுமிச்சையா? அன்னாசியா?

அன்னாசி ஜூஸ் உள்ள பாட்டிலில் எலுமிச்சை ஜூஸ்தான் அதிகமாக இருக்கும். அன்னாசி ஜூஸ் பாட்டிலிலிருந்து கலவை ஜூஸைத்தானே எடுத்து எலுமிச்சை ஜூஸில் ஊற்றுகிறோம். அதிலும் எலுமிச்சை கலந்திருப்பதால், அன்னாசி அதிகமாக இருக்க முடியாது!

இ. கட்டங்களை நிரப்புக


ஈ. அந்த மூவர்
1. பாடு
2. சிப்பி
3. ஜாம்பஜார்
4. ஜில்லென்று
5. பார்த்த
6. வாராயோ
7. ராக்கம்மா
மூன்று பாத்திரங்கள்: சிவாஜி, பாபா, ராஜா