தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவர் போதையிலதான் உளறினார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 180 மி.லி குவார்ட்டர் என்று இருப்பதை 250 மி.லியாக உயர்த்துவோம்னு சொன்னாரே..!’’
- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

டூவீலர்னா கையில் கிளட்சு, காலில் கியர்; 4 வீலர்னா காலில் கிளட்சு, கையில் கியர்... மனுஷ வாழ்க்கையும் இப்படித்தான் மக்கா. கையின் அணைப்பும் காலின் உதைப்பும் தவிர்க்க முடியாதது.
- மோட்டார் சைக்கிளில் போகும்போதும் மோடுமுட்டித்தனமாக யோசிப்போர் சங்கம்
- முஹம்மது தவ்ஃபீக், திருமங்கலக்குடி.

‘‘தலைவர் அப்பாவியா இருக்கறாருன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘அவர் மேல போட்ட குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு, ‘நான் செஞ்ச தப்பெல்லாம் அந்தப் பத்திரிகைக்காரனுக்கு எப்படிய்யா தெரிஞ்சது’ன்னு கேக்கறாரே..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘அந்த இன்ஸ்பெக்டர் மோசம்னு சொல்றியே... என்ன விஷயம் கபாலி?’’
‘‘பின்னே... மாமூல் கொடுக்கும்போது சேவை வரியும் சேர்த்து கொடுங்கன்னு கேக்கறார்!’’
- வண்ணை கணேசன், சென்னை-110.

இந்த வருஷம் மின்னல் கூட அதிகமா இல்லை... ஒருவேளை அதுக்கும் பவர்கட் காரணமா இருக்குமோ!?
- மின்னலைக் கண்டாலே மின்னல் வேகத்தில் ஓடி ஒளிவோர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ்,கோவிலாம்பூண்டி.

இந்த வருஷம் மின்னல் கூட அதிகமா இல்லை... ஒருவேளை அதுக்கும் பவர்கட் காரணமா இருக்குமோ!?
- மின்னலைக் கண்டாலே மின்னல் வேகத்தில் ஓடி ஒளிவோர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ்,கோவிலாம்பூண்டி.

பெண்ணோட பர்ஸைக் கிளறு, மனசைக்கூட கிளறு. ஆனா கோபத்தைக் கிளறிடாதே! அப்புறம் தாடி வைக்க வேண்டியிருக்கும்...
- பீச்சில் தனியாக சுண்டல் சாப்பிடுவோர் சங்கம்
- சுரா.மாணிக்கம்,கந்தர்வகோட்டை.