தத்துவம் மச்சி தத்துவம்





என்னதான் ‘காதல்’ வயப்பட்டாலும் காஜல் அகர்வாலை ‘காதல் அகர்வால்’ என்றெல்லாம் கூப்பிட மாட்டாங்க.
- காதல் தத்துவ முடிச்சுப்போட்டுவிட்டு, அவிழ்க்க படாத பாடுபடுவோர் சங்கம்
- அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

‘‘அது என்னய்யா ‘செல் பிச்சை’ன்னு பேர் வச்சிருக்கே..?’’
‘‘மிஸ்டு கால் கொடுத்தே பிழைப்பு நடத்துறேன் சாமி..!’’
- செல்.பச்சமுத்து,பெரம்பலூர்.

‘‘பெட்ரோல் விலை ஏறினதால மக்கள் மாறிட்டாங்க
தலைவரே...’’‘‘என்னய்யா பண்றாங்க..?’’‘‘உங்க உருவ பொம்மையை எரிக்காம, புதைக்கற போராட்டம் நடத்தறாங்க..!’’
- பா.விஜயராமன்,வடபாதிமங்கலம்.

என்னதான் ஒவ்வொரு நாளும் பசிக்கு சோறு தேவைன்னாலும், நாளைய வாழ்க்கைக்கு யாரும் ‘சோத்தை’ சேர்த்து வைக்க மாட்டாங்க. ‘சொத்தைதான்’ சேர்த்து வைப்பாங்க!
- அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்காதோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த தொண்டர்கள் வர மாட்டாங்களாம் தலைவரே...’’
‘‘வேற என்ன செய்யணுமாம்..?’’
‘‘வேணும்னா டாஸ்மாக் உள்ள இருந்தபடியே உள்ளிருப்பு போராட்டம் மட்டும் நடத்தத் தயார்னு சொல்றாங்க!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘எதையும் இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் சொல்ல முடியும்...’’
‘‘ஐயோ டாக்டர்... அடுத்த பேஷன்ட்டை உள்ளே அனுப்பட்டுமான்னு கேட்டேன்..!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

மலை உச்சிக்குச் செல்லும் பாதையில் ‘கொண்டை ஊசி’ வளைவு இருக்கும். ஆனால் குண்டூசி, தையல் ஊசி, எம்ப்ராய்டரிங் ஊசி வளைவுகள் எல்லாம் இருக்காது!
- லிஃப்ட் இல்லாமலே மேலே போக யோசனை சொல்வோர்
சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம்,ஔவையார்பாளையம்.