நையாண்டி





இந்த வார சிந்தனையே ‘எப்படி குட்டிச்சுவராவது’ என்பது பற்றித்தான். பயலாஜி, ஜுவாலஜி, சைக்காலஜி போல ‘லவ்வாலஜி’யும் ஒரு சப்ஜெக்ட்தான். பல இயக்குனர்கள் தங்கள் படங்களைப் பத்தி பேசறப்போ ‘‘இது காதல் சப்ஜெக்ட்’’னு சொல்றதுல இருந்தே இதைப் புரிஞ்சுக்கலாம். எல்லா பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் இருக்கிறப்ப, காதல் பாடத்துக்கு வேணாமா? அதான் ரெடி பண்ணிட்டோம்...

மொத்த மதிப்பெண்கள் 50
மி. பொருத்துக (5ஜ்1 மதிப்பெண்கள்)
காதலுக்காக இவர்கள் எதைக் கொடுத்தார்கள் என சரியாக பொருத்துக.
1. புரட்சித்தமிழன் சத்யராஜ்    -    நாக்கு
2. ‘அஞ்சாதே’ நரேன்    -    உயிர்
3. லிவிங்ஸ்டன்    -    கிட்னி
4. வாகை சந்திரசேகர்    -    அல்வா
5. இளையதளபதி விஜய்    -    இதயம்

மிமி. சரியான விடையைத் தேர்ந்தெடு (5ஜ்1 மதிப்பெண்கள்)
6. தமிழ் சினிமாவில் ஹீரோ தன் காதலைத் தியாகம் செய்ய காரணமாக இருக்கும் நோய் எது?
ணீ) காசநோய் தீ) புற்றுநோய் நீ) வயித்துவலி பீ) முழங்கால் வலி
7. கீழ்க்கண்டவற்றுள் காதலுக்கு அதிகமாகத் தரப்படும் அன்பளிப்பு எது?
ணீ) கிரீட்டிங் கார்டு தீ) வாட்ச் நீ) கர்ச்சீப் பீ) கரடி பொம்மை
8. காதலிக்க பாதுகாப்பான இடம் எது?
ணீ) பீச் தீ) பார்க் நீ) சினிமா தியேட்டர் பீ) மொட்டை மாடி
9. தமிழ் சினிமாவில் அதிகமாக காதல் தோல்வி அடைந்தவர் யார்?
ணீ) மைக் மோகன் தீ) டி.ராஜேந்தர் நீ) முரளி பீ) பிரசாந்த்
10. காதலிக்கும் பெண்கள் எஸ்.எம்.எஸ் டைப் செய்யும் வேகம் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு?
ணீ) 140 கி.மீ தீ) 110 கி.மீ நீ) 160 கி.மீ பீ) 120 கி.மீ

மிமிமி. ஓரிரு வரிகளில் விடையளி (10ஜ்1 மதிப்பெண்கள்)
11. காதலுக்கான மிகச் சிறந்த தண்டனை எது?
காதலித்தவரையே கல்யாணம் செய்துகொள்வதுதான்.
12. நல்ல காதல் - கள்ளக் காதல், வித்தியாசம் என்ன?
நல்ல காதல் பால்பாயின்ட் பேனா போல, தீரும் வரை எழுதலாம். கள்ளக் காதல் இங்க் பேனா போல, எப்படியும் லீக் ஆகி காட்டிக் கொடுத்துடும்.
13. காதல் எது எது பார்க்காது? எது எது பார்க்கும்?
காதல் ஜாதி பார்க்காது. அதைத் தவிர எல்லாத்தையும் பார்க்கும்.
14. இன்றைய காதலின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம்?
500 ரூபாய்க்கு கூவி விற்கப்படும் மொபைலும், இலவச மெசேஜ்களும்
15. காதலின் அவஸ்தையை விளக்குக:
கண்டக்டரிடம் மீதி சில்லறைக்கு காத்திருக்கும் அவஸ்தையை விட கொடுமையானது காதலின் அவஸ்தை.
16. காதலில் நட்பின் பங்களிப்பை கூறுக:
காதல் திருமணத்திற்கு ஒத்துக்கிட்டா பெற்றோர்கள் பிரண்ட்ஸ் ஆகிடுறாங்க; பெற்றோர்கள் இல்லாம நடக்கும் திருமணத்தில், பிரண்ட்ஸ் பெற்றோர் ஆகிடுறாங்க.
17. காதல்கள் உருவாகக் காரணம் என்ன?
காரணமே இல்லாமல் உருவாவதுதான் காதல்.
18. காதலின் தோல்வி முடிவைப் பற்றி விவரிக்க:
காதல் ஆரம்பிக்கும்வரை பெண்களுக்கு ஆண்கள் அவுட் ஆஃப் ஃபோகஸ்; காதல் முடிந்த பின் ஆண்களுக்கு பெண்கள் அவுட் ஆஃப் சிலபஸ்.
19. காதல் சொல்வது எப்படி?
மனதில் உள்ளதை ஒளிவுமறைவு இன்றி சொல்வதற்கு சரக்கடித்துப் போக வேண்டும்.
20. காதல் - போதை, இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
காதல், போதை இரண்டும் அளவுக்கு அதிகமானால் வாந்தியில் முடியும்.

மிக்ஷி. சுருக்கமாக விடையளி (5ஜ்2 மதிப்பெண்கள்)
21. இதயத்தின் படம் வரைந்து உள்ளே இருப்பவர்களை குறி:

22. காதல் என்று ஆரம்பிக்கும் 5 திரைப்படங்களை பட்டியலிடு:
காதல் பரிசு, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, காதல் மன்னன், காதலில் விழுந்தேன்
23. இலக்கணப் பிழையின்றி இரண்டு கள்ளக்காதல் கவிதைகள் எழுதவும்:
 காதல்
அது உணர்ச்சிக் குற்றம்,
கள்ளக்காதல்
அது குற்ற உணர்ச்சி.
 அடியே அன்பே,
உன் புருஷனாக நான் வரட்டா?
இல்லை,
உன் புருஷன் போன பிறகு வரட்டா?
24. காதல் எப்போது சரி?
நல்ல ஐந்திலக்க சம்பளம் இருந்தால், அல்லது லட்சங்களில் லாபம் தரும் தொழில் இருந்தால், முகம் சுளிக்காமல் புழங்கக்கூடிய ஜாதியாக இருந்தால், சொந்த வீடு வைத்திருந்தால், இந்திய வீடுகளில் காதல்கள் தப்பில்லை.
25. அன்றைய காதல் - இன்றைய காதல்: ஒப்பிடுக:
அன்றைய காதல்களில் affection அதிகம்; இன்றைய காதல்களில் அபார்ஷன் அதிகம். அன்றைக்கு காதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காதலித்தார்கள்; இன்றைக்கு காதல் வெற்றி பெறாது என்ற நம்பிக்கையில் காதலிக்கிறார்கள்.  

க்ஷி. விளக்கமாக விடை தருக (2ஜ்5 மதிப்பெண்கள்)
26. முதல் காதலின் பெருமைகளை விரிவாக விளக்குக:
முதல் காதல் ஞாபகத்தில் இருப்பதைப் போல பலருக்கு முதலிரவு கூட ஞாபகத்தில் இருப்பது இல்லை. முதல் காதலில் எழுதும் கடிதத்தை ஒரு ஆண் முன்னூறு தடவை எழுதிப் பார்க்கிறான்; ஒரு பெண் மூவாயிரம் தடவை படித்துப் பார்க்கிறாள். முதலாவது காதலில், காதலர்களை ஏமாற்றுகிறது காதல்; அடுத்துவரும் காதல்களில் காதலை ஏமாற்றுகிறார்கள் காதலர்கள். முதல் காதல் முற்றுப்பெறும் நிமிடங்களில், ஆண்களும் பிரசவ வேதனையைக் கடக்கிறார்கள்.
27. காதலுக்கும் நட்புக்கும் இருக்கும் வேற்றுமைகளை விளக்குக:
நட்பு என்பது ஜட்டி போல, ஓட்டை இருந்தாலும் போட்டுக்குவோம்; காதல் என்பது பேன்ட் போல, டைட் ஆனா கழட்டி விட்டுடுவோம். முட்டி போட்டாலும் கிழியாது ஜட்டி; எட்டித் தாவினாலே கிழியும் பேன்ட்.
காதல் ஸ்வெட்டர், நட்பு சட்டை. எப்பவுமே சட்டைக்கு அப்புறம்தான் ஸ்வெட்டர் போடணும்; வெறும் ஸ்வெட்டர் போட்டா அவஸ்தைதான். இதுல கவனிக்க வேண்டிய விஷயம்... காதல் ஆரம்பிக்கறப்பவும் ‘நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்’னு சொல்லிக்கிறாங்க. காதல் புட்டுக்கிறப்பவும் ‘நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்’னு சொல்லிக்கிறாங்க.

க்ஷிமி. பத்து வரிக்கு மிகாமல் விரிவாக விடையளி (1ஜ்10 மதிப்பெண்கள்)
காதல் என்பது என்ன என உவமை உருவகத்துடன் விளக்கவும்:
கொஞ்சிக் கொஞ்சி கொல்லப்படும் குழந்தை, காதல். கெஞ்சிக் கெஞ்சி வளர்க்கப்படும் குழந்தை, காதல். காதல் என்பது மழை போல, எல்லோருக்கும் நனைய ஆசையிருந்தும் பலர் தயக்கத்தோடு தள்ளி நிற்கிறார்கள்; ரசனையானவர்கள் நனைகிறார்கள். ஆண்கள் பர்ஸ் வைத்திருப்பது ஊருக்கே தெரியும்; பெண்கள் வைத்திருப்பது அவர்கள் நெஞ்சுக்கு மட்டுமே தெரியும். கிட்டத்தட்ட காதல் கூட பர்ஸ் போலத்தான்.
காதல் ஒரு பபிள் கம். எவ்வளவு வேணாலும் மெல்லலாம், ஆனா முழுங்கக் கூடாது. காதல் கிரிக்கெட் விளையாட்டு போல. ஆண்கள் அதிகமா ரன் அவுட் ஆகறாங்க, பெண்கள் அதிகமா ஹிட் அவுட் ஆகறாங்க. காதல் ஒரு கெட்ட வார்த்தை. அதனால்தான் பல பெண்கள் அதை மனசுக்குள் மட்டும் சொல்லிப் பார்க்கிறார்கள். காதல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. அதில் பெண்கள் ஓரக்கண்ணால் பார்த்து ஏமாத்துவதில் எக்ஸ்பர்ட். காதல் ஒரு கர்ச்சீப்... சிலர் முகம் துடைக்கிறார்கள், சிலர் கை துடைக்கிறார்கள், சிலர் மடித்து கடைசிவரை ஒளித்தே வைத்திருக்கிறார்கள்.