‘‘நம்ம வீட்டு வாசப்படியில எப்பவும் ஒரு பிச்சைக்காரன் இருக்கானே மாமா..?’’
‘‘ஆமா மாப்பிள்ளே! நீங்க வீட்டோட மாப்பிள்ளை... அவன் வீட்டோட பிச்சைக்காரன்.’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
எவ்வளவு பெரிய கார்பென்ட்டரா இருந்தாலும், அவரால டிவிஷன்
பெஞ்ச்சை எல்லாம் செய்ய முடியாது!
- கோர்ட் வாசலில் அமர்ந்து கோக்குமாக்காக யோசிப்போர் சங்கம்
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
‘‘தலைவருடைய பிள்ளைக்கு எப்படி மார்க் குறைஞ்சது..?’’
‘‘பரீட்சையில சில கேள்விகள் அவனுக்கு ஆதரவாகச் செயல்படவில்லையாம்...’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.
ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம்...
எப்போதும் கூட இருக்கும் ஃபிரண்டை நம்பு... எப்போதாவது வரும் கரன்ட்டை நம்பாதே!
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘தலைவர் ஏன் கோபமா இருக்கார்..?’’
‘‘அவருக்கு யாரோ ‘தமிழகத்தின் நிரந்தர வருங்கால முதல்வரே’ன்னு ஃப்ளக்ஸ் வச்சிட்டாங்களாம்..!’’
- எஸ்.அறிவழகன், சென்னை-91.
‘‘நர்ஸ், நீங்க ஆபரேஷனுக்கு வேண்டியதை எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?’’
‘‘நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே ரெடி பண்ணிட்டேன் டாக்டர். நீங்கதான் இன்னும் ஆபரேஷன் பண்ண பேஷன்ட்டை ரெடி பண்ணலை..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
என்னதான் ஒருத்தர் பவர்ஃபுல்லா பேசினாலும், அதிலிருந்து ஒரு யூனிட் கரன்ட் கூட எடுக்க முடியாது!
- கரன்ட் இன்றி தூங்காமல் விடிய விடிய மிரண்டு போனோர் சங்கம்
- நா.கி.பிரசாத், கோவை.