‘மனைவி’ங்கறவ ‘சிம்கார்டு’ மாதிரி; ‘சின்ன வீடு’ங்கறது ‘மெமரி கார்டு’ மாதிரி. மெமரி கார்டு இல்லாமல் செல்போனை யூஸ் பண்ணலாம். ஆனா சிம்கார்டு இல்லாம யூஸ் பண்ண முடியாது. அதுதான் ‘கணவன்’ங்கற ‘செல்’லுக்கு மரியாதை! எப்பூடி?
- கணவனை ‘செல்லா’க்காசென கருதும் மனைவியிடம் ‘செல்’லாக இருப்போர் சங்கம்
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.‘‘வீட்டை காலி பண்ணச் சொல்லி நோட்டீஸ் கொடுத்திருக்கேன்...’’
‘‘குடியிருக்கிற ஆசாமிக்கா..?’’
‘‘இல்ல, வீட்டுச் சொந்தக்காரனுக்கு... கூடவே இருந்து போடற சட்ட திட்டம் தாள முடியல!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
‘‘மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை போக்க வழி சொல்லுங்கன்னு தலைவர் கிட்ட கேட்டா...’’
‘‘என்ன சொன்னாரு..?’’
‘‘எல்லோரையும் என் உருவ பொம்மையை எரிக்காம இருக்கச் சொல்லுங்கறார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘குற்றப்பத்திரிகையை எடுத்துக்கிட்டு பஸ்ஸிலே வந்தது தப்பாப் போச்சா... ஏன் தலைவரே?’’
‘‘எவனோ ஒருத்தன் படிச்சிட்டு தர்றேன்னு வாங்கி, அப்படியே எடுத்துக்கிட்டுப் போயிட்டான்..!’’
- மு.மதிவாணன், அரூர்.
‘‘பெண்களும் நிலம் மாதிரிதான்னு தலைவர் சொல்லியிருக்காரே?’’
‘‘எத்தனை பெண்களை அபகரிச்சிருப்பாரு..?’’
- வி.ரேவதி, தஞ்சாவூர்.
‘ஈ மெயில்’ அனுப்பலாம்,
‘ஏர்மெயில்’ அனுப்பலாம். ஆனா, ‘பிளாக்மெயில்’ அனுப்ப முடியுமா?
- பவர்கட்டான இருட்டை பிளாக்கான தத்துவங்களால்
வெளிச்சமாக்குவோர் சங்கம்
- சம்பத் குமாரி, திருச்சி.
மைசூர் போண்டாவுல மட்டும் மைசூர் இருக்கான்னு கேக்கறீங்களே... கல்லீரல்ல கூடத்தான் ‘கல்’ இல்லை. நுரையீரல்ல கூடத்தான் ‘நுரை’ இல்லைங்கறதை கவனிச்சீங்களா?
- பெயர்களை ஆராய்ச்சி செய்து எதிர்க்கேள்வி கேட்போர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை.