‘‘மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கலாமா... இல்லை, மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கலாமா?’’
‘‘ரெண்டு பேரும் ஆளை மாத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘காதலிக்கிறதா சொல்லி என் லவ்வர் என்னை மோசம் பண்ணப் பார்க்கறான்னு நெனைக்கிறேன்..!’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘என்னைப் பார்த்து, ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு கேக்கறானே..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
‘‘காதலர் தினத்துக்கும், அந்த ஆஸ்பத்திரியில இன்னிக்கு பேஷன்ட்டுங்க கூட்டம் அதிகமா இருக்கறதுக்கும் என்ன
சம்பந்தம்..?’’
‘‘இன்னிக்கு ஒருநாள் மட்டும் நர்சுங்கள வச்சு கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்களாம்... அதான்!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
கா தல் போயின் சாதல்... அது ஹிஸ்டரி; காதல் போயின் இன்னொரு காதல்... இது கெமிஸ்ட்ரி!
- தியரி கிளாஸிலும் ப்ராக்டிகலா திங் பண்ணும் ஸ்டூடன்ட்ஸ் சங்கம்
- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
‘‘மகளிரணித் தலைவிக்கு போன் போட்ட தலைவர், ஏன் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறொரு ‘நினைப்பில்’ உள்ளார்னு பதில் வந்ததாம்... அதான்!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
‘‘காதலர் தினம் அன்னிக்கு மட்டும் தலைவர் பெண்கள்கிட்ட மனு வாங்கறாரே... ஏன்?’’
‘‘அதுல ஏதாவது காதல் கடுதாசியா இருக்காதாங்கற நப்பாசையிலதான்..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
‘‘காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன
வித்தியாசம்..?’’
‘‘பவருக்கும் பவர்கட்டுக்கும் இருக்கற வித்தியாசம்தான்..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.