நயம்பட பேசு

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் எப்படி ஒரு முறையாவது அமைச்சராகி விடுவார்களோ, அதுபோல கர்நாடக பா.ஜ கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரு முறையாவது முதல்வராகி விடுவார்கள் போல! எடியூரப்பாவுக்கு ‘எனிமி’ ஆனதால் சதானந்த கவுடா விலக, இப்போது முதல்வராக (போர்க்)களம் காண்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர். கிடைத்த பதவியை பிரச்னையில்லாமல் ஓட்ட அண்ணன் ‘பணிவு செல்வத்திடம்’ அவர் கேட்ட ஐடியாக்களுக்கு, அண்ணன் ‘ஓஹோ’பிஎஸ் அனுப்பிய கடிதம் நமக்கு லீக்கானது...
அன்புத் தம்பி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அடிக்கடி குனிந்தும் பணிந்தும் கும்பிடு போடுவதால் கடந்த 3 நாட்களாக முதுகு புடிச்சுக்குச்சு. வயசாயிடுச்சுல்ல. முன்ன மாதிரி இல்ல தம்பி, இப்பல்லாம் போட்டிக்கு புதுசு புதுசா இளவட்ட பயலுவ வந்துட்டாங்க. படக்படக்னு மைனஸ் 30 டிகிரில கூட கால்ல விழுந்துடுறாங்க.
செய்யற தொழில்ல பொறுமைதான் முக்கியம். நல்ல nationalised bankகா பார்த்து இந்த வெட்கம், கூச்சம் எல்லாத்தையும் நல்ல விலைக்கு அடமானம் வச்சிடுங்க. நானெல்லாம் முதல்வரா இருந்தப்ப, டிவிகாரங்க ஆரம்பிச்சு பேப்பர்காரங்க வரை வண்டி வண்டியா கிண்டல் பண்ணுவாங்க. ஏன், இந்த கத்திகுத்து கந்தன் முன்னால விட்டு பின்னால வண்டவண்டையா திட்டுவான். அதையெல்லாம் நமக்கு ‘ஹேப்பி பொங்கல்’ சொல்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு ‘சேம் டூ யூ’ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போயிடணும்.
அம்மா, பெரியம்மா, சின்னம்மா, மனோரமா, வீடு கூட்டுற பொன்னம்மா, சட்டசபை கூட்டுற ஆயா அம்மா வரை யார பார்த்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழுந்திடணும். ‘நாமதான் முதல்வர்’ங்கிற நினைப்பு ஒருநாளைக்கும் வரப்படாது. யாராவது அதிகாரிங்க ஞாபகப்படுத்தினா கூட, ‘அப்படியா’ன்னு ஒரு ஜெர்க் விடணும். என்ன நாஞ்சொல்றது? அரசியல் ஒரு யுத்த பூமி, அதுலயும் கர்நாடகா ஒரு ரத்த பூமி!
இந்த பில்லா பய மாதிரி, நானும் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுதான். ஒவ்வொரு நொடியும் பாயா பணிந்து மடங்குறேன்.
இப்பல்லாம் யாருகிட்டயும் திட்டு வாங்காட்டி அன்னைக்குத் தூக்கமே வர மாட்டேங்குது. சில சமயம் விடியக்காலை மூணு மணிக்கெல்லாம் யாராவது ராங் நம்பருக்கு போன் பண்ணி, ‘ஹலோ, பிரபா ஒயின்ஸ் ஓனரா?’ன்னு கேட்டாவது ரெண்டு திட்டு வாங்கிக்கிறேன். பாருங்க தம்பி... நம்ம தொழில்ல திட்டு வாங்குறது, லட்டு சாப்பிடுற மாதிரி. நான் சொன்ன மேட்டரையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நடந்தா, ஓராண்டு அல்ல... நூறாண்டும் நீங்கதான் கர்நாடக முதல்வர்!
ஒரு ஈயை வைத்து எடுக்கப்பட்ட ‘நான் ஈ’ படம் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது. நம்மாளுங்க மட்டும் என்ன கற்பனையும் திறமையும் குறைந்தவங்களா? ஹீரோவ ஒரு கிராஃபிக்ஸ் மிருகமா மாத்தி படம் எடுக்க மாட்டாங்களா? இதோ நமது திறமைமிகு படைப்பாளிகள் யோசித்து வைத்திருக்கும் ஸ்க்ரிப்ட்களின் திமிஸி (சிரிக்க மட்டுமே!)
இயக்குனர் ‘சரி’: ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர் சினம் கொண்ட பூனையா மாறி வில்லன்களை நோண்டி நொங்கெடுக்கும் கதை. ‘நான் போலீஸ் இல்ல, பூனை’, ‘ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டு, பூனையோட யானை கொஞ்சம்தான் ஹயிட்டு’ போன்ற பலப்பல பன்ச் டயலாக்குகள் படம் முழுக்க உண்டாம். உருட்டுக்கட்டை, அரிவாள், டாடா சுமோ என்று வரும் வில்லன் பெருச்சாளிகளும், ‘ஏய்ய்ய்ய்ய்ய்ய்யா’ என அலறும் அப்பத்தா பூனைகளும், 20003500 பூனைகள் ஒண்ணா வாழும் கூட்டுக் குடும்பமுமாக பக்காவான படம்.
‘மினி’ரத்னம்: உள்ளூரில் ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கிளி, கல்யாணமாகி, காஷ்மீருக்கு ஹனிமூன் போகும்போது கடத்தப்படும் அருமையான கதை. ‘கீ... கீ...’ என்ற வார்த்தைகள் மட்டுமே கிளி பேசும் என்பதால், டயலாக் எழுதுவது ரொம்ப ஈசியாகி விட்டதாம். எனக்கு ஒரு நாளைக்கு வர்ற மொத்த எஸ்.எம்.எஸ்.தான் அவரு மொத்த படத்துலேயும் டயலாக்கா இருக்கும் என்பது வேறு விஷயம்! (பேசுவோம்)
கே.எஸ்.கவிகுமார்: ஒரு ஊருல ஒரு குளம். அதில் குளமே மதிக்கும் ஆமையின் குடும்பத்தைப் பற்றிய கதைதான் இந்த ஹைடெக் ழிளிஜிஆமை படம். வழக்கம் போல நண்டு பிராது கொடுப்பதும், குளத்தை விட்டு மீனை ஒதுக்கி வைப்பதுமென கிராஃபிக்ஸ் ஜாலங்கள் நிறைய உண்டு. ஆமை வெத்தலை போட்டு துப்பும்போது மட்டும் ‘3 டி’யில் வெற்றிலை சாறு நம்ம மேல விழுவது போல இருக்கும்; வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு படம் பார்க்கப் போயிடாதீங்க.
செலவுராகவன்: இந்த சமூகத்தால் ஒரு சராசரி பையன் எப்படி மனப்பிறழ்வு கொண்டு தெருநாயாக ஆனது என்பதைப் பற்றிய கதை. பக்கத்து அபார்ட்மென்ட் பொமரேனியன் நாயோடு ஆரம்பித்த காதலின் தோல்வியும், வறுக்கி, பிஸ்கெட் கிடைக்காத ஏமாற்றமும் இந்த நாயகனின் வாழ்க்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதைச் சொல்கிறார். வழக்கம் போல நாய்க்குட்டிகள் ஒன்று சேர்ந்து தீ மூட்டி சுற்றி டான்ஸ் ஆடுவதும், நாயகி நாய்க்குட்டி நாயகன் நாய்க்குட்டியை நெஞ்சில் உதைப்பதும் என செம ஸ்டோரி.
ஷிங்கர்: சமூக அவலங்களைக் கண்டு கொதித்து, ஒரு மண்புழு பிரமாண்ட அனகோண்டா அவதாரம் எடுக்கும் வொண்டர்ஃபுல் ஸ்க்ரிப்ட். ஹீரோயின் பட்டுப்புழுவை ஹீரோ மண்புழு சைட்டடிப்பது தனி டிராக். பாடல் காட்சிகளில் ஹீரோயின் பட்டுப்புழுவின் கலருக்கு ஏற்ப தாஜ்மகால் கலர் மாறுவது, சீனப் பெருஞ்சுவர் முழுவதும் மண்புழுவின் போஸ்டர் ஒட்டப்படுவது என பிரமாண்ட கிராஃபிக்ஸ்கள் ஏராளம். இந்தியாவில் அனைவருக்கும் மொட்டையடித்து ஒரு பாடல் எடுக்க திட்டமிருந்தது. ஆனால் அதை மத்திய, மாநில அரசுகளே செய்வதால், திட்டம் கைவிடப்பட்டதாம்.
மாலா: ‘எவன் அவன்’ படத்துக்குப் பிறகு நீண்ட நாள் யோசித்து மாலா எடுக்கும் படம். நிஜக் கொசுவை வைத்தே எடுக்க நினைத்து இருந்தார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கொசு இவர் சொல்வதைப் புரிந்து கொள்ளாததால், முதன்முறையாக அனிமேஷனுக்குப் போயிருக்கிறார். கையகல திருவோட்டை ஏந்தியபடி கங்கைக் கரையில் கொசு பிச்சை எடுக்கும் காட்சி கல் நெஞ்சையும் உருக்கி விடும் என்கிறார்கள். க்ளைமாக்சில் கஞ்சா தோட்ட அதிபரை கொசு கடித்துக் கொல்லும் காட்சியில் தியேட்டரே அதிரும் என்கிறார்கள்.
ஙிஷீக்ஷீமீரரசு: ஹீரோ வெட்டுக்கிளியின் பேரு மதுரை; ஊரு சேலம். ஹீரோயின் மூட்டப்பூச்சியின் பேரு வந்தவாசி, ஊரு நாமக்கல். வில்லன் கரப்பான்பூச்சியின் பேரு புதுக்கோட்டை; ஊரு சங்கரன்கோவில். சேலத்தில் இருக்கும் மதுரை, நாமக்கல் வந்தவாசிய லவ் பண்ண... இது புடிக்காத புதுக்கோட்டை, சங்கரன்கோவில விட்டுக் கிளம்பி நாமக்கல் வர, நாமக்கல் வந்தவாசி சேலம் போய்விட, அந்த நேரம் மதுரை அங்க வர, புதுக்கோட்டைக்கும் மதுரைக்கும் கோவையில க்ளைமாக்ஸ் சண்டை. ‘நான் வெட்டுக்கிளி, படம் பாக்குறவன் சட்டைய கிழி’ என்ற ஓபனிங் சாங்கில் வெட்டுக்கிளியின் கிராஃபிக்ஸ் டான்ஸுக்கு ரூ.10 கோடி செலவு செய்திருக்கிறார்களாம்.
|