நியூஸ் வே*





*  இன்றைய சிக்ஸ்பேக் ஹீரோக்களுக்கு முன்னோடியான தாரா சிங், கடந்த வியாழனன்று மறைந்தார். தொழில்முறை மல்யுத்த வீரரான அவர், கிட்டத்தட்ட 500 போட்டிகளில் பங்கேற்று, எதிலும் தோல்வியை சந்திக்காதவர். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவிலும் நடித்தார். அவரது உடல் வலிமைக்கு ஏற்ற ‘கிங்காங்’, ‘தாரா சிங் - இரும்பு மனிதர்’ போன்ற படங்களில் தன் உடற்கட்டைக் காட்டினார். சினிமாவின் சூட்சுமம் புரிந்துகொண்டு டைரக்டராகவும் மாறினார். தமிழில் ‘மாவீரன்’ படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். டி.வி. ராமாயணத்தில் அனுமனாக நடித்தது, அவரை கிட்டத்தட்ட கடவுளாகவே இந்தியக் குடும்பங்களில் கொண்டு சேர்த்தது.

*  பிரிட்டிஷ் டி.வி. நிகழ்ச்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷில்பா ஷெட்டி இனவெறியோடு அவமானம் செய்யப்பட்டார். அப்படி ஒரு விஷயம் மறுபடியும் நிகழ்ந்திருக்கிறது. ‘மிஸ் இண்டியா யு.கே.’ பட்டம் வென்ற மாடல் அழகி டீனா உப்பால். ஒரு ரியாலிட்டி ஷோவில், கானோர் மக்கின்டயர் என்ற நடிகர் மூன்று வாரங்கள் டீனாவை டார்ச்சர் செய்திருக்கிறார். ‘‘கழிவுப் பொருள் போல என்னை நடத்தினார்’’ என்று கண்ணீரோடு டீனா புகார் செய்ய, மீண்டும் எழுந்திருக்கிறது இனவெறி சர்ச்சை!