கரன்ட் கபாலி





‘‘ஏன் ஏட்டய்யா! முனியனை விட நான் ஆயிரம் ரூபா அதிகமா மாமூல் தர்றேன். அவனுக்கும் டீ; எனக்கும் டீயா? எனக்கு ஸ்பெஷலா ஜில் பீர் வாங்கித் தந்தா என்ன?’’

‘‘ஆமாம் ஏட்டய்யா! திருட்டுக்கு இடையில எங்களை குஷிப்படுத்திக்க இப்படி சியர் கேர்ள்ஸ் ஆட்டம் நடத்தறது வழக்கம்...’’

‘‘இன்ஸ்பெக்டர் ஐயா வர்ற வரைக்கும் இப்படி திருடன் - போலீஸ் விளையாட்டு விளையாடலாம். எப்பவுமே நீங்க போலீஸா இருந்து என்னைத் துரத்தறது நல்லாவா இருக்கு?’’

‘‘சார்! மாசா மாசம் நான் தர்ற மாமூல் பணத்துல கொஞ்சத்தை பென்ஷன் அக்கவுன்ட்ல போட்டு வைங்க... வயசான காலத்துல நமக்கு யூஸ் ஆகும் பாருங்க!’’

‘‘எசமான்! இந்தக் கேசுல எப்படியாச்சும் எனக்கு எதிராவே தீர்ப்பு எழுதிடுங்க... வக்கீல் கேக்கற ஃபீஸை கொடுக்க நம்மால ஆகலை!’’