மணிரத்னம் படத்திலேந்து விலகிய சமந்தா, இப்ப ஷங்கரோட படத்துலயும் இல்லாமப் போக, அந்தப் படத்துல விக்ரமோட நடிக்கப் போறது ‘தாண்டவ’த்துல அவரோட ஜோடி போட்ட எமி ஜாக்ஸன். ச்சீயானோட உறவுகள் விட்டுப் போறதேயில்லை.
சூர்யாவோட ‘மாற்றான்’ முடிவுக்கட்டத்துக்கு வந்துட, ‘சிங்க’ வேலைகள் ஜரூராகுது. அதுல சூர்யாவோட சேர்ந்து நடிக்கறவங்களுக்கு சமீபத்துல ஆடிஷன் நடத்தினார் டைரக்டர் ஹரி. சில பல கேரக்டர் தேவைக்கு 1000 பேருக்கு மேல குவிஞ்சுட்டாங்களாம்.
சிங்கம்’ல..?
கமல், ரஜினியோட முதல் தலைமுறை ஹிட் படங்களான ‘மன்மத லீலை’யையும், ‘தில்லுமுல்லு’வையும் ரீமேக் பண்ண ரெடியாகிக்கிட்டிருக்கு கவிதாலயா. யாருக்கு வாய்ச்சிருக்கோ காலத்தை வென்ற கேரக்டர்கள்..?
தனுஷோட அடுத்த படம் ‘சொட்டவாளக்குட்டி’. வேற ரெண்டு படங்களுக்கு கமிட் ஆகியிருந்த டைரக்டர் சற்குணம் இதை டைரக்ட் பண்றார். நேஷனல் அவார்ட் பட டைரக்டரும், நேஷனல் அவார்ட் ஆர்ட்டிஸ்ட்டும் கைகோர்க்கிறது இன்னொரு அவார்டுக்கா..?

அடுத்து ரவி கே.சந்திரன் டைரக்ஷன்ல நடிக்கப் போற ஜீவா, அதுக்கடுத்து ஞானவேல் ராஜாவோட ஸ்டூடியோ கிரீனுக்கும் ஒரு படம் நடிக்க
விருக்கார். அதை டைரக்ட் பண்ணப்போறது சுராஜ்.
சந்தானத்தோட ராம.நாராயணன் சேர்ந்து தயாரிக்கிற படத்துக்கு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. சந்தானமே ஹீரோவாகிற அந்தப் படத்துலதான் பவர் ஸ்டாரும் ஒரு கேரக்டர்ல நடிக்கவிருக்கார். கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?
அஜ்மல் ஹீரோவாகிற ‘கருப்பம்பட்டி’ படப் பாடல்கள் இன்னும் வெளியாகாத நிலையில, அதுல ஒண்ணு நெட் வழியா போய் துபாயில ஹிட் ஆகிடுச்சாம். எந்த நெட்ல எந்தப் பாட்டு இருக்கும்னு யாருக்குத் தெரியும்..?

தங்கர் பச்சானோட ‘அம்மாவின் கைப்பேசி’ விளம்பரங்கள் வர ஆரம்பிச்சதும், அவர் ஏற்கனவே டைரக்ட் பண்ணி ஐங்கரன் தயாரிச்ச ‘களவாடிய பொழுதுகளு’ம் சென்சாராகிடுச்சு. ஒரு கட்டும் இல்லாம ‘யு’ வாங்கியிருக்க படம், சீக்கிரமே ரிலீஸ் ஆகவிருக்கு.
‘சிங்கக்குட்டி’ல அறிமுகமான சிவாஜி தேவ் நடிக்கிற ரெண்டாவது படம் ‘புதுமுகங்கள் தேவை’. பானு, விஷ்ணுப்ரியா அவருக்கு ஜோடியாகிற படத்துல பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் இரண்டாவது ஹீரோவா அறிமுகமாகிறார்.
- கோலிவுட் கோயிந்து
சைலன்ஸ்தலை வழுக்கையாகிப் போன முன்னாள் ‘ஹேண்ட்சம்’ சாமி ஹீரோவை ‘தல’யாய படத்துக்காக ஒப்பந்தம் செய்ய நினைச்சாங்க. ஆனா அவர் கேட்ட சம்பளம் இப்ப இருக்கிற ஹீரோக்களை விட பெரிசா இருக்கவே, ‘‘உங்களுக்குத்தான் வேற பிஸினஸ் இருக்குமே... நீங்க சினிமாவை நம்பியா இருக்கீங்க..?’’ங்கிற அவரோட பழைய டயலாக்கை அவருக்கே சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்.
சமீபத்துல நடந்த ‘பார்ட்டி’ மோதல்ல ஒரு நடிகரை தெலுங்கு ஹீரோ மொக்கிட்டு வெளிநாடு ‘எஸ்’ ஆன கதை தெரிஞ்சிருக்கும். மோதலுக்குக் காரணமான சென்டர் ஃபிகரான ‘தபசு’ நடிகை, தன் பக்கம் இப்ப எல்லாரோட கவனமும் பதிஞ்சிருக்கிறதால, அந்த சிக்கல்ல தன்னை சம்பந்தப்படுத்த வேண்டாம்னு தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட ரெக்வஸ்ட் வச்சிருக்காம். ஊரு விட்டு ஊரு வந்து...