‘சட்டம் ஒரு இருட்டறை’
அடப்பாவிகளா... கோர்ட்லயும் பவர் கட்டா?
- சிவில் ‘லா’,
கிரிமினல் ‘லா’, இவற்றோடு ஷகீலாவையும் தெரிந்து வைத்திருப்போர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘உங்க தொகுதி எம்.எல்.ஏவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்னு கேக்கறீங்களே... ஏன்?’’
‘‘அடிக்கடி காணாமப் போயிடுறாருங்க..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
‘‘இந்தப் படம் டைரக்டரோட
கனவுப் படமாம்...’’
‘‘அதான் படத்துல நிறைய இடத்துல தூங்கிட்டாரா..?’’
- அம்பை தேவா, சென்னை-116.
கடி
‘‘நான் ஆபீசுக்கு போகும்போது பஸ்ல டிக்கெட்டே எடுக்க மாட்டேன்...’’
‘‘செக்கிங் ஸ்குவாட் வந்தா பிடிக்க மாட்டாங்களா?’’
‘‘நடந்து போறவனை எதுக்கு செக்கிங் ஸ்குவாட் பிடிக்கும்?’’
- பாளை பசும்பொன், நெல்லை.
‘‘வாங்க... வாங்க... கட்சியில சேர வரும்போது இப்படி கோட் சூட்ல வரக்கூடாது! வேட்டி சட்டைல வந்திருக்கணும்...’’
‘‘ஐயோ தலைவரே... இவங்கள்லாம் சி.பி.ஐ. ஆபீசர்ஸ். உங்க வீட்ல ரெய்டுக்கு வந்திருக்காங்க!’’
- சரவணன், கொளக்குடி.
‘‘நூத்தி எட்டு சுத்து சுத்தினவரை ஏன் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாங்க..?’’
‘‘கோயில் உண்டியலைச் சுத்தினாராம்..!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.
‘‘ஞாபகமறதி வியாதிக்கு எதுக்கு டாக்டர் முதுகுல எக்ஸ்ரே எடுக்கச் சொல்றீங்க..?’’
‘‘அப்பதான் நீங்க ஞாபகமறதியா கரெக்டா தலையில எடுப்பீங்க..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.