வலைப் பேச்சு






கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை குறையும்
: ஜி.கே.வாசன்
# நீங்க வருஷத்துக்கு ஒரு ஆணிதான் புடுங்குறீங்க. அதுவும் தேவையில்லாத ஆணியா பாத்துத்தான் புடுங்குறீங்க.
ஏண்ணே இப்டி?
- சக்தி யுவர்ஸ்

அம்மா கொடுத்தனுப்பிய
இஞ்சி பூண்டு கலவையின்
வாசனையுடன்
அம்மாவின் வாசனையும்
- அயல்தேசத்திலிருந்து அலிமா

யாருக்கோ ரசிக்கத் தெரியவில்லை என்பதற்காக, நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை!
- ஈரோடு கதிர்

டெண்டுல்கர் எம்.பி., தோனி
கர்னல்... கங்குலிக்கு ஒன்றுமில்லையா? ஓவர் டு மம்தா!
# ஏதோ நம்மால முடிஞ்சது!
- ராகவன் ராகவன்

இந்த உலகில் குறையில்லாதவர்கள் எவருமே இல்லை... மீறி குறையில்லாதவர்கள் யாராவது உங்கள் ஞாபகத்துக்கு வந்தால், அவங்கள நீங்க காதலிக்கிறீங்க!
- தடாகம் வெப்

சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீசிய காங்கிரஸார்.
# காங்கிரஸ்காரங்களுக்கு கை சின்னத்திற்குப் பதிலா கால் சின்னம் ஒதுக்கிடுங்கப்பா!
- ஈரோடு கதிர்

பாசிட்டிவ் நெகட்டிவ் ரத்த வகைகள் பார்ப்பதில்லை கொசு
# சமச்சீர் கடி
- தமிழ் க.செந்தில்


@sweetsudha1
  அம்மாவால் ஆபத்து - வீரப்பன் மகள்கள் புகார்
# எந்த ‘அம்மா’ன்னு சரியா சொல்லுங்க
@arattaigirl
  நமக்குத் தேவையில்லாததை நாமே வாங்குவதற்கும், தேவையானவற்றை பெற்றோர் வாங்கித் தருவதற்கும் இடையில் ‘விருப்பம்’ அரசியல் செய்கிறது.
@ArasuTweets
  வரிசையில் நிற்கப் பொறுமை இல்லாத நம் மக்கள், அவ்விடத்தில் ஒரு டி.வியை வைத்துவிட்டால், தனக்கான முறை வந்தால்கூட கவனிப்பதில்லை.
@naiyaandinaina
  மின்சாரம் தராம வாரி விடுறதாலேதான் மின்சார வாரியம்.
# பேரு வச்சவன் மகா தீர்க்கதரிசி
@minimeens
  ‘டாஸ்மாக் பாட்டில்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் இருக்கும் கோபுரமா இது?’ என்று கேட்கிறார் டிரைவர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பார்த்து!
@win010win
  கிழங்குக்குக்கூட கருணை என்று பெயர் வைத்தான் தமிழன்... அவனைக் கொன்றவர்களை என்னவென்று அழைப்பது?
@thoatta
  ஐந்திலக்க சம்பளம், இருவருக்கும் வேலை, புழங்கக்கூடிய ஜாதி, சுமாரான அழகிருந்தால், இந்திய வீடுகளில் காதல்கள் தப்பில்லை :)
@marmadesam 
பசங்க லவ் பண்ண மாட்டாங்கன்னு பொண்ணுங்க பழகுறதும், பொண்ணுங்க லவ் பண்ணிடுவாங்கன்னு பசங்க பழகுறதும் எப்பவும் மாறியே நடக்குது.
@krpthiru     
நம்மாளு சிகரெட் பிடிக்கிற பழக்கத்தக்கூட விட்டுடுவான்... ஆனா ஓசில லைட்டர் கேட்கும் பழக்கத்த மட்டும்... ஹ்ம்ம்கும்... நெவர்!
@Elanthenral  
  நாம் வாங்கிய மொபைலைப் பற்றிப் பெருமை பேசிய அளவுக்கு நம் வாழ்க்கைத்துணையைப் பற்றி பெருமை பேசுவதில்லை.
@GaneshVasanth
  ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில் மட்டுமல்ல, ஒரு பைக்குக்கும் அடுத்த பைக்குக்கும் கூட இடைவெளி தேவை
# எடுக்க முடியலடா!
@kanavey  
எக்சிக்யூட்டிவ்>ஆபீசர்>மேனேஜர்>சீனியர் மேனேஜர்>ஏவிபி>வி.பி>சிஇஒ>எம்டி>அவர் பொண்டாட்டி!
# ரிப்போர்ட்டிங் ஹையரார்க்கி!
@erode_kathir 
மதிப்பெண்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றதென்பதை குழந்தைகளுக்கு மறக்கடிக்கச் செய்வதை வெகு நேர்த்தியாகச் செய்து வருகிறோம்.
@Kutty_Twits
  ராணுவத்தை வலுப்படுத்துவேன்:
பிக்ராம்சிங்
# சிங் இன் த ரெயின்; ஐ ஆம் சொயிங்
இன் த ரெயின்
@Kaniyen
  லோக்பால் பிரச்னைக்கு டெண்டுல்கர் ஆதரவாக இருப்பார்: ஹசாரே
# கிரிக்கெட் பாலுக்கு ஆதரவா இருந்தவருக்கு லோக்பாலை ஆதரிக்கவேண்டிய நிலைமையா!
@Evercome
டியர் என்ஜினியரிங் காலேஜஸ்! டைட்ரேசன் செய்றத பெரிய ஆராய்ச்சி பண்ற மாதிரி ஸ்டில் போடுவதை எப்போதான் நிறுத்தப் போறீங்க?
@vedhalam
  உலகில் இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்: ஒருவர் சுவிஸ் பேங்க்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவர், மற்றொருவர் நாயர் கடையில்.
@marmadesam
  சென்னையில்
மட்டும் தென்மேற்குப் பருவ வெயில் ஆரம்பிச்சிருக்கு போல...
#பொளக்குது

@minimeens
காதலை தவறவிட்டவர்களுக்கு கடைசி வாய்ப்பு, மனைவி!

@devaseema
‘ஆமிர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’
- இந்திய மருத்துவ சங்கம்!
# ஏன் டாக்டர்ஸ்,
அவரு முழுசா
சொல்லலியா..?

@devaseema
ஒரு மௌனம் மேலும் அழகாகிறது, அது ஒரு குழந்தையின் சிரிப்பில் உடைபடும்போது!

@writercsk
  புறாக்களாய் எளிதில் வாழ்ந்து விட முடிகிறது; புலிகளாய்ப் பிழைத்திருப்பதுதான் சிரமமாய் இருக்கிறது.