நயம்பட பேசு





ரம்பா தொடை போல மிக வலுவாக இருந்த இந்தியப் பொருளாதாரமும், ரூபாயின் மதிப்பும், பாட்டி சுட்ட வடையாகக் குறுகிப் போனதற்குக் காரணம் தமிழர் உதயகுமார் கண்டுபிடித்த புதிய ரூபாய்க்கான சின்னத்தில் இருக்கும் வாஸ்து கோளாறு தான் என்று வட இந்தியாவில் ஒரு கும்பல் கூவ ஆரம்பித்திருக்கிறது. இவங்கள சும்மா விடலாமா? அதான் நம்ம பங்குக்கு வாஸ்து, நியூமராலஜி, நேமாலிஜி, ராசிக்கல் ஜோசியர்களைத் தோண்டி துருவி, நோண்டி நொங்கெடுத்து சில பல ஐடியாக்களை அள்ளி வந்திருக்கிறோம்.

இப்போ ஸ்டார்ட் மூஜிக்.
க்ஷ முதல்ல, ரூபாய் நோட்டுல கடவுள் போன்ற காந்தி தாத்தாவ அச்சடிக்கிறதே தப்பாம்! என்னாதான் அரைகுறையா அவரு டிரஸ் பண்ணியிருந்தாலும், ஒரு கவர்ச்சி மிஸ்ஸிங்காம். அதனால அம்பது ரூபாய் நோட்டுகளில் அமலா பாலையும், நூறு, ஐநூறு நோட்டுகளில் ஐஸ்வர்யா ராயையும், ஆயிரம் ரூபா நோட்டில் அனுஷ்கா போட்டோவையும் அச்சடிக்கணுமாம். அப்புறம் ரூபாயின் மதிப்பு தாறுமாறா ஏறிடுமாம்.

க்ஷ நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேருல மிகப்பெரும் தவறு இருக்காம். நியூமராலஜிப்படி அவரு பேர முரணாப் ஃபிகர்ஜின்னு மாத்திட்டா, ஆட்டோமேட்டிக்கா ரூபாயின் மதிப்பு எகிறி, இந்தியப் பொருளாதாரம் கெட்ட குத்தாட்டம் போடுமாம்.

க்ஷ பிரபல வாஸ்து நிபுணர் வயலூர் வாய்க்காவாயன் கூற்றுப்படி, ரிசர்வ் பேங்க் கவர்னருக்கும் இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பங்கு இருக்காம். அடுத்து வரும் ஆறு மாசத்துக்கு அவரு வாஸ்துபடி உள்பனியன சட்டைக்கு மேலே அணிந்து வாழ்ந்தா, ‘ஆசை’ அஜித் மாதிரி இருக்கும் ரூபாய் மதிப்பு ‘அட்டகாசம்’ அஜித் மாதிரி ஆயிடுமாம்.

க்ஷ நம்ம ரூபாயை அச்சடிக்கற நாசிக் நகரத்து பேரே சரியில்லையாம். ஒண்ணு ‘நாசிக்’ங்குற பேர ‘கிளாசிக்’ன்னோ, ‘மியூசிக்’ன்னோ மாத்தணுமாம். இல்லை, அந்த நேஷனல் செக்யூரிட்டி     அச்சகத்த அலேக்கா தூக்கி மதுரை ஆதீனத்துக்குள்ள வைக்கணுமாம். அப்புறம் காத்து கருப்பு அண்டாம ரூபாயின் மதிப்பு நட்டகுத்தலா நிக்குமாம்..!

க்ஷ எண்ணூர்வாழ் நியூமராலஜி நிபுணர் நம்பர்நாதன் இன்னோர் ஐடியா சொல்றாரு. எல்லா ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களும் கூட்டுத்தொகை 9 வருவது மாதிரி அமைத்து அச்சடித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்.

க்ஷ ‘திட்டக் கமிஷன்’ பேரையும் மாத்தியாகணுமாம். ‘வாழ்த்து கமிஷன்’னு சொல்றதுதான் நல்லதாம்! அதன் துணைத்தலைவர் அலுவாலியா தன் பெயரை ‘சிரிப்புவாலியா’ன்னு மாத்திக்கிட்டு தினம் 1000 தடவையென ஒரு மண்டலம் தொடர்ந்து எழுதிவந்தால், ரூபாய் மதிப்பு எவரெஸ்ட்டின் உயரத்திற்கு போகுமாம்.

க்ஷ இதையெல்லாம் விட சூப்பரான குறுக்கு வழி, ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவை பண்ணும்’ சூப்பர்ஸ்டார் படத்தை நோட்டுகளில் அச்சடித்தால், ஒரே நாளில் நூறு மடங்கு ரூபாயின் மதிப்பை உயர்த்திடலாம்.

காதல் என்று உலகில் இருக்கிறதா என்று தெரியவில்லை; ஆனால் அதை காதலிப்பவர்கள் எல்லோரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்! செல்போன்களும் சிறு சிறு பொய்களும் பெருகிவிட்ட இன்றைய கணினி யுகத்தில் கண்ணன்களும் கன்னிகளும் காதலுக்கான வரையறைகளை மாற்றிவிட்டனர்.

காதலை பாதியில் முறிக்கும் ஆண்கள் தியாகியாகிறார்கள்! காதலை பாதியில் முறிக்கும் பெண்கள் பாவியாகிறார்கள். காதல் மெழுகுவர்த்தி உருகி உருகி எரிந்து தீரும் தருவாயில், அந்த நெருப்பிலிருந்தே அடுத்ததை பற்ற வைத்துக் கொள்கிறார்கள். ஆயிரம் பொய் சொல்லி காதலிக்கிறார்கள்; ஒரே ஒரு உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிரிந்து போகிறார்கள். காதலைச் சொல்வது என்பது பத்து மார்க் கொஸ்டீன் போல ஆகிவிட்டது, எப்பவுமே பசங்க பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்; பொண்ணுங்க சாய்ஸில் விடுகிறார்கள். இன்றைய தேதியில் காதல் ஒரு கர்ச்சீப்பாகி விட்டது; சிலர் முகம் துடைக்கிறார்கள், சிலர் கை துடைக்கிறார்கள், சிலர் மடித்து கடைசிவரை ஒளித்தே வைத்திருக்கிறார்கள்.

காதலை ஒரு கெட்ட வார்த்தை போல மாற்றிவிட்டதும் காதலர்கள்தான். அதனால்தான் பல பெண்கள் அதை மனசுக்குள் மட்டும் சொல்லிப் பார்க்கிறார்கள். ‘பொண்ணோட மனசு பொண்ணுக்குத் தெரியும், ஆணோட மனசு ஆல்கஹாலுக்கு தெரியும்’ என்கிற லெவலுக்கு காதலைக் கொண்டு வந்து விட்டார்கள். நம் இளைஞர்கள், காதலர்களைத் தெரிந்து வைத்திருக்கும் அளவு, காதலைத் தெரிந்து வைத்திருக்கவில்லை. கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல இந்தியா காதலின் தேசம்தான்; காதலர்கள் தேசமல்ல!

கீச்சு கீச்சு

ஹசாரே சொல்வது போல சச்சினால் ஊழலை ஒழிக்க முடிந்தால், நிச்சயம் கவாஸ்கரால் வறுமையை ஒழிக்க முடியும்!
# ஜெய்ஹிந்த்

மதிப்பெண்கள்
பக்கத்து வீட்டு பசங்களை பாகிஸ்தானியராக்கி விடுகின்றன.

அதிமுக அரசு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை
- ஜி.ராமகிருஷ்ணன்
# பாஸ், நீங்க இன்னமும் வெளியதான் இருக்கீங்களா, அப்போ செஞ்சுடுவாங்க!

ஒலிம்பிக் போட்டிகள் ஒருவழியாக வந்துவிட்டன. இந்தியாவிலிருந்து யாரை எதற்கு அனுப்பலாம் என்று ஒரு யோசனை, அம்புட்டுதான்...
    துப்பாக்கி சுடும் போட்டி    ‘பரமக்குடி’ புகழ் தமிழக காவல்துறை
    ஜூடோ சண்டை    ‘வேட்டி உருவு’ புகழ் தமிழக காங்கிரஸார்
    பளு தூக்குதல்    நமீதாவோடு நடித்த கதாநாயகர்கள்
    தட்டு எறிதல்    கோவக்கார தமிழக மனைவிகள்
    கத்திச்சண்டை    ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள்
    ஜிம்னாஸ்டிக்ஸ்    ‘மல்டி லெவல் பல்டி’ பா.ம.க குரூப்ஸ்
    நீச்சல் போட்டி    பண்ருட்டியார் தலைமையில் தேமுதிகவினர்
    நடைப்போட்டி    அண்ணன் வைகோவை விட்டா வேறு யாரு?
    குத்துச்சண்டை    ‘பத்ரி’ விஜய்
    தடகளம்    தமிழக தெருக்களின் டீடெய்ல்ஸ் தெரிந்து
        வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள்
    குதிரையேற்றம்    சூப்பர் சானிக் விமானத்திலேயே போன பிரதீபா பாட்டீல்
    வில் வித்தை    சின்ன ஆதீனம், பெரிய ஆதீனம்
    பீச் வாலிபால்    நடிகை சோனா
    கால்பந்து    தமிழக ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் அதிகாரிகள்