கனவு கந்தசாமி





‘‘வேணாம் சார்! உங்க தலை கட்டிங்குக்கு இருபது ரூபா கொடுங்க... போதும்! முடி பின்னாடி மட்டும்தானே கொஞ்சமா இருக்கு?’’

‘‘அடப் போங்க சார்! ராசிப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தமெல்லாம் கிடக்கட்டும். மொதல்ல ரெண்டு பேருக்கும் மனப் பொருத்தம் இருக்கான்னு பாருங்க...
கல்யாணத்தை முடிங்க!’’

‘‘ஸ்கூலுக்குக் கிளம்பற நேரத்துல ஏம்பா தொந்தரவு பண்றே? பழைய ஷூவே நல்லா இருக்கு... புதுசு அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்!’’

‘‘உள்ளே சத்தமா? தலைவரைப் பத்தி பத்திரிகையில கிண்டலடிச்சு எழுதினதைப் படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டு இருக்காரு!’’

‘‘சொன்னா நம்புங்க சார்! சிட்டியில இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம். சுத்தியிலும் ஸ்கூல், காலேஜ்னு டெவலப் ஆயிருச்சு.
இந்த சைட் மட்டும்தான் காலி. கிரவுண்ட் வெறும் மூணு லட்ச ரூபாதான்!’’

‘‘சார்! பையனுக்கு நல்ல கட் ஆஃப் மார்க் இருக்கு.
கவுன்சிலிங்ல டாட் ஒன் காலேஜ்ல சீட் கிடைக்குது. உண்மையைச் சொல்றேன்... இதனால எல்லாம் வேலை கிடைக்கும்னு உறுதியா
சொல்ல முடியாது!’’