தத்துவம் மச்சி தத்துவம்





நம்ம நாடாளுமன்றத்தைவிட பெட்ரோலுக்கு மவுசு அதிகம். எப்படி தெரியுமா?
ஒரு வருஷத்துல நாடாளுமன்றம் சில தடவைதான் கூடுது; ஆனா, பெட்ரோல் விலை பல தடவை கூடுது!
- அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.

செயின் திருடனைப் பிடிச்சா செயினை மீட்கலாம்; ஆனா திருட்டுத்தனமா வயர் போட்டு கரன்ட் திருடுனவனைப் பிடிச்சா ‘கரன்ட்’டை மீட்க முடியுமா?
- இருட்டுக்குள்ளேயே கிடந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக யோசிப்போர் சங்கம்
- க.சஞ்சீவி, கும்பகோணம்.


‘‘நீங்க வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்கீங்க...’’
‘‘உங்களுக்குத் தெரியுது... ஆனா என் சம்சாரத்துக்குத் தெரியலையே!’’
- எஸ்.கோபாலன், சென்னை-61.

‘‘நான் போட்ட  மார்க்கை உங்கம்மா கிட்ட காட்டினியே... என்ன சொன்னாங்க?’’
‘‘நீங்க இன்னும் இம்ப்ரூவ் ஆகலன்னு சொன்னாங்க டீச்சர்...’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘பொண்ணு வீட்ல ‘எங்க அப்பா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி’ன்னு சொன்னது தப்பா போச்சா... ஏன் தரகரே?’’
‘‘வசதியில்லாத வீட்ல பொண்ணக் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர்,
வில்லியனூர்.

ஸ்பீக்கரு...

‘‘தலைவரின் உடல் தகுதி இன்று இருபது ஜோடி செருப்புகள் வரை தாங்கும். அதற்கு மேல் தொண்டர்கள் அவர் மேல் எதையும் வீசிவிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம்!’’
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.



‘‘மகளிர் அணித் தலைவி ஏன் வருத்தமா இருக்காங்க..?’’
‘‘மேக்கப் இல்லாம அவங்களைப் பார்த்ததும், முதியோர் அணித் தலைவியா நியமிச்சுட்டாரே நம்ம தலைவர்!’’
- அம்பை தேவா, சென்னை-116.