வலைப்பேச்சு





@ravan181
  நான் இறந்தவுடன் உடனே எடுத்துச்சென்று கொளுத்திவிடாதீர்கள். என் நண்பர்கள் அனைவரும் தாமதமாக வந்தே பழக்கப்பட்டவர்கள்!

@naiyandi  
பிறர் ஆதரவைத் தேடிப் போகிறோம்! நம் ஆதரவாளர்களை மிதித்துக்கொண்டு!!

 @vasanthen
  நமக்காக கேள்வி கேட்கவும் போராடவும் எங்கிருந்தாவது ஒருவன் வருவான் என்று எதிர்பார்க்கும் நம் மன நிலையே நமக்கான சாபம்.

@arivucs
  பள்ளிக்கூண்டில் அடைபட்டு, பெற்றோர் எனும் பெயருக்குச் சீட்டெடுக்கும் ஜோசியக்கிளிகளாய்த் தெரிகிறார்கள், கோடை விடுமுறைக் குழந்தைகள்!

@rajakumaari
  காதல் புனிதமானது என்பதும் ஒருவிதமான மூடநம்பிக்கைதான்!

@Koothaadi  
யாரைக் காதலிக்கிறோம் என தனக்கும் தெரியாமல் மற்றவர்களுக்கும் புரியாமல் சுத்த விடுவதே பல பெண்களின் வேலை.

@iyyanars
  மெட்ரிகுலேஷன் ஸ்கூல் நடத்துறவங்க, ஒருகாலத்தில் ‘கரும்பு ஜூஸ் கடை’ வச்சிருந்து இருப்பாங்களோ... இப்புடிப் புழிஞ்சு எடுக்குறாய்ங்க!

@gurupprasath
  இந்த நாள் என் கடைசி நாள். இன்று இது பொய்யாய் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் மெய்யாகும்.

@Rajarath
  கடையில் இருந்த இரண்டு பொம்மைகள் பேசிக்கொண்டன, ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’!
# பிரதமர் - ஜனாதிபதி பேச்சு!

@gowridash 
  காதலை காதலிக்க காதலிக்க விரும்புகிறேன்.

@altappu
சதுரங்க தமிழன்... படிச்ச உடனே லைட்டா சிரிப்பு வந்திடுச்சு. பச்ச மஞ்ச ஆரஞ்சு தமிழன்டா:))

@NVaanathi
  ஆட்டோ, லாரி டிரைவர்களை எல்லாம் முந்திச் சென்றுவிட்டனர்   Tata Ace, Magic   ஓட்டுனர்கள்.
# கொல்றாங்க
 
@kalavani420  
பேருந்தில் அமர்ந்துகொண்டு, ஜன்னல் வழியாக சாலையில் செல்வோர் மீது துப்புவதே எச்சிக்‘கலை’!
 
@Rocket_Rajesh  
இறுக்கியபடி இருக்கும் ஆடை, ஷூ, சாக்ஸ் என்று தினம் தினம் ஒரு மினி ஜெயிலில் அடைபட்டு விடுதலையடைகிறோம்!
# வேலைத்தளம்!

@sweetsudha1    
மொதல்ல எல்லாம் எனக்கு இருட்டுன்னா பயம். ஆனா, இப்ப எலெக்ட்ரிசிடி பில் பார்த்தாதான் பயமா இருக்கு!

@Tottodaing
  அதிக ‘விலை’ கொடுக்க வேண்டும்!
# ‘நல்ல பெயர்’ வாங்க!
 
@kalasal     
மரங்களை வெட்டுவதும் ஒரு வகையில் தற்கொலை முயற்சியே!

@iLoosu
  கொல்கத்தா அணிக்கு பிரபுதேவா விருந்து கொடுக்கலாமா?
- இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
# உங்கள் தமிழுணர்வைக் கண்டு நான் வியக்கேன்

 @vandavaalam  
சாலையில் ஒலிக்கும் ஹாரன் சத்தத்தின் அலைவரிசைகளை வார்த்தையாக மாற்றினால், பல புதிய கெட்ட வார்த்தைகளை அறியலாம்.

@devaseema    
பெண்களின் மிகச்சிறந்த தற்காப்பு ஆயுதம் நகமுமல்ல, பல்லுமல்ல... நாக்குதான்!

@kolaaru  
பெண்களுக்கே ஒரு ஆணாதிக்கப் பார்வை இருக்கிறது, தன்னைவிட அழகான பெண்கள் மீது!



இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியத்தால் 10 லட்சம் டன் தானியம் ‘வண்டு’ ஆனதை விட, ஐஸ்வர்யா ராய் ‘குண்டு’ ஆனது தான் ஒவ்வொரு இந்தியக்குடிமக னுக்கும் பேரதிர்ச்சி.
- பூபதி முருகேஷ்

பலவீனங்களின் மீது பலத்தைப் பிரயோகிப்பதாலேயே வீரங்கள் மீசையை முறுக்கிக்கொள்கின்றன...
- தெய்வ கார்த்திகேயன்

ஆயிரம் ரூபாய் நோட்டையும் அலட்சியமாகக் கசக்கி வீசும் குழந்தைகளே, இந்த உலகின் ஆகச்சிறந்த கடவுள்கள்!
- நிர்மல் குமார்

எடைக்குப் போட்டா தமிழ் பேப்பரைவிட ஆங்கில பேப்பருக்கு அதிகமா காசு கிடைக்குதே... இது தமிழுக்கு பெரிய அவமானம்தானே?
# டவுட்டு பாலு
- குமரன் சிந்தனைகள்

தோளுல மாட்டிக்கிறீங்க...
ஆனா ஏன் ஹேண்ட் பேக்னு சொல்றீங்க?
- தீசன் ராமநாதன்

இரண்டு குவளை மது இருந்தால் இரவை மொழிபெயர்த்து விடுவேன்.
- டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

ஏதோ ஓர் உயிரின் துடிப்பை
உணர்த்திவிட்டுப் போகிறது
விரையும் ஆம்புலன்ஸ் வண்டி
கடந்து பல நொடிகள் தாண்டியும்
உள்ளே அதிர்கிறது உயிர்...
- ஜானு ராசநாயகம்


பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை
- ஞானதேசிகன்

# திரும்பத் திரும்ப உங்க பேருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நிரூபிக்கிறீங்க பாஸு!
- வேல்குமார்

குடிச்சுப் போட்ட பாட்டில எல்லாம் எடைக்குப் போட்டானாம்... எடைக்குப் போட்ட காச வச்சிக் குடிச்சுப் போட்டானாம்.
# இதான்டா வாழ்க்கை
- ஹரிசுதன் சிவசுப்ரமணியன்