தத்துவம் மச்சி தத்துவம்





‘‘கட்சிக்குள்ள கோஷ்டி உருவாகிடுச்சுன்னு எப்படிச் சொல்றீங்க தலைவரே..?’’
‘‘என்மேல செருப்பு வீசினவனைக் கூப்பிட்டு பாராட்டுக் கூட்டம் நடத்தறாங்களே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘சட்டம் ஒரு இருட்
டறைன்னு கபாலி சொல்றானே... ஏன்?’’
‘‘கோர்ட்லயும் அடிக்கடி பவர் கட் ஆகுதே...
அதனாலதான்!’’
- அம்பை தேவா, சேரன்மகாதேவி.

‘‘இது மோசமான குடும்பமா இருக்கும் போலிருக்கே...’’
‘‘ஏன் அப்படிச் சொல்றே..?’’
‘‘பொண்ணு பாக்க எப்ப வரட்டும்னு கேட்டா, ‘சாயந்திரம் ஆறு மணிக்கு பீச்சுக்கு வந்தீங்கன்னா லவ்வரோடவே பாக்கலாம்’னு சொல்றாங்களே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவரே... உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோட சைக்காலஜியே தெரியல...’’
‘‘அந்தக் காலேஜ் எங்கேய்யா இருக்கு..?’’
 - வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.


‘‘தலைவரோட விளம்பர மோகத்துக்கு அளவே இல்லாமப் போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘குற்றப் பத்திரிகையில இருந்து வர்றேன்னு சொல்லிட்டு ஒரு நிருபர் வந்திருக்கார். தலைவரும் அவருக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கார்...’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

வண்டி ஸ்பீடா போனாலும், ஸ்லோவா போனாலும், வேகத்தைக் காட்டும் கருவியை ‘ஸ்பீடாமீட்டர்’னுதான் சொல்ல முடியும்; வண்டி மெதுவாகப் போகும்போது அதை ‘ஸ்லோவாமீட்டர்’னு சொல்ல முடியாது.

- பெட்ரோலை மிச்சப்படுத்த, வண்டியில் ஸ்லோவான வேகத்தில் செல்வோர் சங்கம்
- ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.