வெங்கட்பிரபு கிண்டும் பிரியாணி...





ஷங்கர் டைரக்ஷன்ல விக்ரம் நடிக்க இருக்கற படத்துக்கு ஹீரோயின் தேடல் நடந்ததுல, இப்போ கோலிவுட்ல ஹாட் ஹீரோயினாகியிருக்கிற சமந்தாவை முடிவு பண்ணியிருக்காங்க. சமத்தான முடிவு..!

கமலோட 'விஸ்வரூபம்’ முன்னோட்டக் காட்சி சிங்கப்பூர்ல நடக்கவிருக்க ‘ஐஐஎஃப்ஏ’ ஆசியப்பட விழாவில திரையிடப்படுது. தமிழ், இந்தில வெளியாகப் போற படத்தை ரெண்டு பாகமா வெளியிட திட்டம் இருக்காம்.

சூர்யா ‘சிங்க’த்துக்குத் தயாராகிட, வெங்கட்பிரபுவோ கார்த்திக்காக ஒரு படம் பண்ண இருக்கார். தன் ஸ்டைல்லயே அமைஞ்ச ட்ரீட்மென்ட் கொண்ட படத்துக்கு ‘பிரியாணி’ன்னு டைட்டில் வச்சிருக்காராம் பிரபு.


‘தல’க்கு வில்லன் ஆனாலும் ஆர்யாவுக்கும் தன் படத்துல ஒரு ஜோடி வச்சிருக்கார் டைரக்டர் விஷ்ணுவர்தன். தப்ஸிதான் அது. வில்லனுக்கு ஜோடின்னா வில்லியோ..?

‘டெல்லி பெல்லி’யோட ரீமேக்கான ‘சேட்டை’ல ஆர்யா, சந்தானம், ஹன்சிகாவோட அஞ்சலியும் நடிக்கிறது தெரிஞ்ச விஷயம். இப்போ இன்னும் ஒரு அட்ராக்ஷனா சுஜா வாருணீயும் நடிக்குது. நடிகையாவே படத்துல வருதாம் சுஜா...

எல்லா டைரக்டருக்குள்ளும் ஒரு நடிகன் வாய்ப்பு தேடிக்கிட்டுதான் இருப்பான் போலிருக்கு. ‘வீரமும் ஈரமும்’ உள்பட பல படங்களை டைரக்ட் செய்திருக்க சஞ்சய்ராம் இப்போ டைரக்ட் பண்ற ‘ரோசா’வில நடிகராகிறார். ரோசாவுக்கேத்த ராசாவா..?

‘ஜக்கம்மா’வில ஆக்ரோஷமா நடிச்சாலும் நடிச்சுது மேக்னா ராஜ், இப்ப அடுத்து மலையாளத்துல தயாராகிற ‘பேங்கிங் ஹவர்ஸ் 9 டூ 4’ல ஆக்ஷன் ஹீரோயினாவே அவதாரம் எடுக்குது. அடி வாங்கப்போறவங்க கொடுத்து வச்சவங்க..!

இதுவரை கண்ணாடி போட்டிருந்த தம்பி ராமையா, நவீன லேசிக் சர்ஜரி பண்ணிக்கிட்டு கண்ணாடியைத் தூர எறிஞ்சிட்டாராம். தேங்க்ஸ் டூ வாசன்
ஐ கேர்..?


‘சிந்துசமவெளி’, ‘அரிது அரிது’ ஹீரோ ஹரிஷ் கல்யாண் இப்ப எஸ்.ஏ.சியோட ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக்லயும், டைட்டில் வைக்காத ஒரு படத்துலயும் நடிக்கிறார். பாடணும்னும் ஆசை, இசை தெரிஞ்ச ஹரிஷுக்கு. அது இசையமைப்பாளர்கள் பாடு..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்

டைட்டிலை ‘டெய்ல்’னு வச்சாலும், தலை போற செய்திதான் இது. அந்தப் படத்துக்கு ஹீரோவாகியிருக்கவர் சம்பளமா ‘விரலு’க்கு ஒரு ‘கோ’ன்ற கவுன்ட்டிங்ல கையோட பத்து விரல்களும் போதாதுன்னு கால் கட்டை விரலையும் சேத்து காண்பிச்சுருக்கார். படத்தோட வினியோக உரிமையும் சேத்த இந்த பேமன்ட்டுக்கு புரட்யூசரும் ஓகே சொல்லிட்டாராம். ‘வாலு’ போயி, கத்தி வந்தது கதையா ஆகாம இருந்தா சரி..!

அதென்னவோ... எப்பவும் பத்திரிகைகளுக்கும், மேனன் டைரக்டருக்கும் பிரச்னையாகிக்கிட்டே இருக்கு. சமீபத்துல வந்த அவரோட பேட்டி பிரச்னையாகிட, இனிமே கொஞ்ச நாளைக்கு எந்த மீடியாகிட்டயும் பேசறதில்லைன்னு உறுதி எடுத்துக்கிட்டிருக்காராம். ரிலீஸ் டைம்ல எப்படியும் பேசித்தானே ஆகணும் சாரே..?