‘‘பெட்ரோல் விக்கற விலையில, லீவ் நாள்ல வெட்டியா டி.வி. பாக்கறீங்களா? போயி பக்கத்து வீட்டு மாமாவை நைஸ் பண்ணிட்டு வாங்க... நாளையில இருந்து பைக் எடுக்காம அவர்கூட போயி ஆபீஸ்ல இறங்கிக்கலாம்!’’
‘‘பையனுக்கு டிரஸ் எதுவும் எடுக்கப் போறதில்ல! அவன் ஒவ்வொரு டிரஸ்ஸா போட்டு செக் பண்ணும்போதும், செல்லுல ஒரு போட்டோ எடுத்துக்குங்க... போதும்!’’
‘‘பழைய பவுடர் பஃப்தான்... தூக்கிப் போடறதுக்குப் பதிலா தோசைக்கல்லுல எண்ணெய் தேய்க்க வச்சிருக்கேன்!’’
‘‘உஷ்! அமைதியா பின்னாடி வாங்க... இந்த தாதாவைப் பார்த்து எல்லாரும் நடுங்கும்போது, பின்னாடியே போய் காய்கறி வாங்கினா சீப்பா முடிச்சுக்கலாம்!’’

‘‘இன்வெர்ட்டர் போடறீங்களா மாமி? அப்பப்ப என்கிட்ட காபி பொடி கடன் வாங்கறீங்க இல்ல... அதுக்கு பதிலா எங்க வீட்லயும் ஒரே ஒரு ஃபேன் ஓடறாப்பல சேர்த்து கனெக்ஷன் குடுத்துடுங்களேன்!’’
‘‘ஏங்க! பக்கத்து வீட்டு விண்டோ ஏ.சி. கூலிங் லீக் ஆகுதுன்னு சொன்னாங்க... சத்தமில்லாம பேக் சைடுல பாயை விரிச்சுப் படுத்தா, கொஞ்ச நாளைக்கு நமக்கு கரன்ட் செலவு மிச்சமாகும் இல்ல..!’’