‘‘நம்ம டாக்டர் போற போக்கு சரியில்ல...’’
‘‘என்ன பண்றார்..?’’
‘‘உறுப்புதானம் பண்ண கடைசி வாய்ப்புன்னு ஆபரேஷன் தியேட்டர்ல எழுதிப் போட்டிருக்கார்!’’
- அம்பை தேவா, சேரன்மகாதேவி.
‘‘பையனுக்கு ரயில்ல வேலையாம்...’’
‘‘அதனால என்ன..?’’
‘‘வழக்கமான சீரோட, அஞ்சு பவுன்ல அபாயச் சங்கிலியும் போடச் சொல்றாங்க..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
‘‘பையனுக்கு ரயில்ல வேலையாம்...’’
‘‘அதனால என்ன..?’’
‘‘வழக்கமான சீரோட, அஞ்சு பவுன்ல அபாயச் சங்கிலியும் போடச் சொல்றாங்க..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.
‘‘தலைவர் புத்தகக் கண்காட்சியில எதைத் தேடறார்..?’’
‘‘முப்பதே நாளில் முன்ஜாமீன் பெறுவது எப்படிங்கிற புத்தகத்தைத்தான்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘பல மன்னர்களுக்கு எங்கள் மன்னர் முன்னுதாரணமாக உள்ளார்... உங்கள் மன்னர்?’’
‘‘ரன் உதாரணமாகவும், புண் உதாரணமாகவும் உள்ளார்..!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.
‘‘படத்துக்கு இந்த கிளைமாக்ஸைத்தான் வைக்கணும்னு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க..?’’
‘‘ஒரிஜினல்லயே அதுதான் சார் இருந்தது...!’’
- கே.ஆனந்தன்,
பி.பள்ளிப்பட்டி.
ஸ்பீக்கரு...
‘‘தலைவரின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த உதவியது சி.பி.ஐ. வழங்கிய குற்றப்பத்திரிகைகள்தாம் என்பதை இங்கே மறுப்பதற்கில்லை...’’
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.