ரஷ்யாவில் உள்ள ஸ்ரீரங்கநாதரின் கண்கள்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கண்களில் விலை மதிப்பில்லாத ஆர்லொவ் வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. இவை சுமார் 190 காரட் - அதாவது 38 கிராம் எடை உடையன. கோஹினூர் வைரமே 105 காரட்தான் என்பதை நினைவில் கொள்க. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், ஒரு ஃபிரான்சு வீரன் கருவறைக்குள் நுழைந்து அவ்வைரங்களைத் திருடி, பின்னர் மதராசில் (சென்னை) ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றான்.  கி.பி 1750லிருந்து பல அயல்நாட்டு வணிகர்களின் கைமாறி, ஆம்ஸ்டர்டாமில் ஒரு ரஷியரால் 400,000 கில்டருக்கு ( இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரைக் கோடி. அன்று ஒன்றரை கோடி ரூபாய் என்றால் இன்று அது எத்தனை கோடி என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்!) வாங்கப்பட்டு, ரஷ்ய அரசி இரண்டாம் கேத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ரஷ்யாவின் ராஜாங்க கருவூலத்தில் காக்கப்பட்டு, இன்றளவும் ரஷ்யாவின் மாஸ்கோ, கிரெம்ளினிலுள்ள வைர நிதியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது!
|