Brain Storage
நீங்கள் பார்லிமெண்டில் அமர ஆசைப்படுகிறீர்களா? எனில், உங்களைச் சுற்றி ஆந்தைகள் மட்டுமே இருக்கும். சம்மதமா? ஆமாம். ஆந்தைகள் கூட்டத்திற்கு Parliament என்று பெயர்.
 கடவுள் சாராத, மனித வாழ்வைப் பேசும் பழம்பெரும் வரலாறு கொண்ட இலக்கியமாக தமிழ் சங்க இலக்கியம் இன்றும் பொலிகிறது. சங்க இலக்கியப் புலவர்கள் (கி.மு 300 - 200) மொத்தம் சுமார் 473 பேர்களில், 27 பேர் பெண்கள். சமூகத்தில் அந்தஸ்தும், சிறந்த கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்கள் இருந்தனர்.
தேன்சிட்டு, தாரிச்சிட்டு, தும்பிச்சிட்டு, ரீங்காரச்சிட்டு, ஓசனிச்சிட்டு என்று பல பெயர்களில் தமிழில் அடையாள அட்டை வைத்திருக்கும் hummingbird பறவைக்கு ஒரு சிறப்பு உண்டு. பறவை இனங்களில் பின்னோக்கிப் பறக்கும் சக்தி கொண்ட ஒரே பறவை அது.
வெள்ளி (சுக்கிரன்) கிரகத்தில் அதன் ஒரு நாள், அதன் ஒரு வருடத்தை விட குறைந்த நீளம் கொண்டது. அதாவது, நமது பூமி நாட்களின் கணக்கில், வெள்ளியின் ஒரு நாள் 243 பூமி நாட்கள்; வெள்ளியின் ஒரு வருடம் 225 பூமி நாட்கள்.
மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னர், ஃபிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிதான். 73 ஆண்டுகளுக்கு சற்று அதிகமாக அவரது ஆட்சி நீடித்தது (1643 -1715).
ஒவ்வொரு வகை பயத்திற்கும் ஆங்கிலத்தில் ஒரு பெயர் உண்டு அல் லவா? நீண்ட வார்த்தைகள் பற்றிய பயத்திற்கும் ஓரு பெயர் உண்டு - அது - hippopoto monstrosesquippedaliophobia. கேட்கவே பயமாக இருக்கிறதா?!
நமது மூளை தன்னைத் தானே தின்கிறது. என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மை. தனது செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்ள, மூளையின் ஒரு பகுதி, செயலிழந்த, இறந்த மற்றும் தேவையற்ற மூளைச் செல்களை அழித்தவாறே இருக்கிறது. குறிப்பாக, தூங்கும் நேரத்தில். மூளையின் இந்த செயல்பாட்டிற்கு phagocytosis என்று பெயர்.l
ராஜேஷ் சுப்ரமணியன்
|