வென்றார்...சாதிக்கிறார்..!
உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் இந்தியாவின் முதல் ஃபார்முலா-4 இரவுப் பந்தயம் போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்தியுள்ளார். இது தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத் தலைநகராக மாற்றும் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாகும் .
 அதேபோல் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை சென்னை, மதுரை, திருச்சி கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் வெற்றிகரமாக நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டிகளில் தமிழ்நாடு ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள், குறிப்பாக மினி ஸ்டேடியங்களை நிறுவுதல் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கங்களை (செயற்கை தடகள தடங்கள்) அமைத்தல் போன்ற பணிகளைத் தொடங்கி வைத்துள்ளார். இதன்வழியாக எண்ணற்ற தமிழக மாணவர்கள் முத்திரை பதிக்க பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். மட்டுமல்ல; தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க வழிவகை செய்திருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கான 3% அரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டைப் புதுப்பித்து, 100க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியிடங்களைப் பெற வழிவகை செய்துள்ளார். சிலம்பம் மற்றும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகளில் சேர்த்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல்பூர்வமான பயிற்சிகளை வழங்க, சென்னை, மதுரை, நீலகிரி போன்ற இடங்களில் விளையாட்டு அறிவியல் மையங்களைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், மக்கள் குறைகளைத் தீர்த்து வருகிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக திமுக இளைஞரணியை 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலுவான அமைப்பாக மாற்றியமைத்துள்ளார்.
ஹரிகுகன்
|