கலைஞர்... Top 5
பக்கங்கள் போதாது. ஆம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கலைஞர் செய்த சாதனைகளை பட்டியலிட பக்கங்கள் போதவே போதாது. அந்தளவுக்கு சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர். நாள்தோறும் சாதனைகளை நிகழ்த்தியபடியே வாழ்ந்த அபூர்வ மனிதர் அவர்.எனவே, அவரது சாதனைகளில் இருந்து டாப் 5 என தேர்வு செய்வது என்பது வைரச் சுரங்கத்தில் வைரங்களைத் தேர்வு செய்வது போன்றது!
 என்றாலும் பட்டியலிட்டுத்தானே ஆகவேண்டும்? அந்த வகையில் இன்று மட்டுமல்ல... என்றும் கலைஞரின் பெயரை இந்த ஐந்து சாதனைகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
 அவை: 1) இலவச மின்சாரம், 2) விவசாயக் கடன் தள்ளுபடி, 3) சமத்துவபுரம் திட்டம், 4) இலவச அரிசி, 5) பெண்கள் இட ஒதுக்கீடு.
1. இலவச மின்சாரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாய பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது. இன்று தமிழ்நாட்டு விவசாயிகள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு விதை போட்டவர் கலைஞர்தான்.
 2. விவசாயக் கடன் தள்ளுபடி
வறட்சி மற்றும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக சற்று நிம்மதி அடைந்தனர். அடுத்தடுத்த பருவங்களில் வேளாண்மை செய்ய நம்பிக்கையுடன் களம் இறங்கினர்.
 3. சமத்துவபுரம் திட்டம்
அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் கூடி வாழும் வகையில் சமத்துவபுரங்களை உருவாக்கினார். இதன் மூலம் சாதி வேறுபாடுகளைக் களைந்து, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்தது. கலைஞர் எடுத்து வைத்த இந்த முதல் அடி, நம்பிக்கையானது; அழுத்தமானது என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள்.
4. இலவச அரிசி
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தை கலைஞர் செயல்படுத்தினார். இதனால் உணவுப் பற்றாக்குறை ஓரளவு குறைந்தது. சொல்லப்போனால் பசி என்னும் சொல்லே தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அகன்றது.
5. பெண்கள் இட ஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். இதன்மூலம் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்தது. இவை தவிர, குடிசை மாற்று வாரியம், புதிய தொழில் நுட்ப பூங்காக்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற பல முக்கியமான திட்டங்களையும் கலைஞர் செயல் படுத்தியுள்ளார். அதனால்தான் அவர் கலைஞர். தமிழ்நாட்டின் தலைவர்.
|