ஒரு குடும்பஸ்தனின் டைரியிலிருந்து...
 * குடும்பம் நடத்துறதும் வானிலை மாதிரிதான்... வீட்டம்மணி சலசலன்னு பேசிட்டிருந்தா வீடு நார்மலா இருக்குன்னு அர்த்தம். * நாம பெத்ததுங்க, ‘அம்மா... அப்பா இல்ல அப்பா... அவரு உனக்குத் தெரியாம’ன்னு எதுனா போட்டுக் கொடுத்து... ‘பிலீவ்மா நா அப்படிப் பண்ணல’ன்னு சொல்லியும் அம்மணி நம்பலைன்னா அங்க புயல் ஒண்ணுஉருவாகுதுன்னு அர்த்தம்.
* அப்புறம் வீட்டம்மணி அதையே காரணமா வச்சி ஜாடமாடையா புள்ளங்களை திட்டற மாதிரி நம்மள திட்றாங்கன்னா லோ பிரஷர் ஒன்னு உருவாகிடுச்சின்னு அர்த்தம்.
* அப்புறம் வீட்டம்மணி ‘ம்... ம்ம்... ஹும்...’ இப்படி ரெண்டொரு வார்த்தையிலயே பேச்ச முடிச்சிக்கிறாங்கன்னா லோ பிரஷர் ஸ்ட்ராங்காகி நம்மள நோக்கி நகருதுன்னு அர்த்தம்.
* அதுக்கப்புறம் நாமளும் கடுப்பாகி வீட்ல சாப்பிடாம ஹோட்டல்லயே சாப்பிட்டு வந்துட்டு நம்ம வீராப்ப காட்டுனோம்னா புயல தவிர்க்கவே முடியாது... ரொம்ப நெருங்கிடுச்சின்னு அர்த்தம்.
* அப்புறம் வீட்ல தட்டு டம்ளர்லாம் தடால் புடால்ன்னு உருளும். புள்ளங்களுக்கு நல்லா கும்மாங்குத்து விழும். (போட்டுக் கொடுத்ததுகள்ல, நல்லா வேணும்... வெஷம்... வெஷம்... வெஷம்...) நமக்கும் ‘மம்மி பாவம் டாடி பாவம்’ ரேஞ்சுக்கு திட்டு விழும். இது புயல் கரையை கடந்துட்டிருக்குன்னு அர்த்தம்.
* அப்புறம் வீட்ல சமையல் கூட நடக்காம வீடே அமைதியா இருக்கும்... இதை அப்படியே விட மனசில்லாம நாம ஹோட்டல்ல எல்லாருக்கும் டிபன் பார்சல் வாங்கிட்டு வந்து வச்சிட்டு முகத்த பரிதாபமா வச்சிட்டு உக்காந்திருப்போம். அம்மணி ரொம்ப பிகு பண்ணி டிபனை எடுப்பாங்க. அது புயலுக்குப்பின் அமைதி திரும்புதுன்னு அர்த்தம்.
* அப்புறம் ஒரு லீவு நாள்ல ஷாப்பிங்ல நம்ம பர்ஸ் கிழியும். அது புயலுக்கான சேதாரம்னு அர்த்தம்.
* அப்புறம் ஷாப்பிங்ல ஃபைனல் டச்சா ஃபேமிலி மொத்தமும் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடும். அது அந்தப் புயல் மொத்தமாக முடிவுக்கு வந்ததா அர்த்தம்.
* அப்புறம் ஒரு நல்ல நாள்ல நம்ம பெத்ததுங்க, ‘அம்மா... நீ அந்தப் பக்கம் திரும்பி நின்னப்ப அப்பா உனக்கு பழிப்பு காட்டுனாரும்மா’ன்னு ஒரு புயல உருவாக்கும்ங்க... வாழ்க்கை ஒரு வட்டம்டா சாமி.
பொம்மையா முருகன்
|