ஸ்மைல் ப்ளீஸ்!
 நான் பாங்க் மேனேஜர் பேசறேன். வணக்கம் சார். என்ன பண்றீங்க? விவசாயம்.
பேங்கிலே வரவு செலவு வைக்கறது உண்டா? உண்டே. உங்க கிட்டே ATM கார்டு இருக்கா? இருக்கு.
அதிலே மேலே 16 நம்பர் பெரிய எழுத்திலே இருக்குமே? அதை சொல்லுங்க. 16ம் நம்பரை காணும்ங்கோ? 16ம் நம்பரில்லை, 16 இலக்க நம்பர்.
நம்பர்லே என்ன இலக்கணம் வரும் சாமி? என் வேலையெல்லாம் விட்டுப் போட்டு உங்க அக்கவுண்ட் பக்கத்தை கம்பியூட்டர்லே ஓபன் பண்ணி உட்காந்து இருக்கேன். நம்பர் சொல்லுங்க. அது வந்துங்க... எம் மவன்தான் இந்த ஏடிஎம் விவகாரமெல்லாம் பார்ப்பான்.
மவன் எங்க?
டவுன்ல படிக்கிறாருங்க.
நீங்க எங்க இருக்கீங்க? தோட்டத்திலே தண்ணி பாய்ச்சிட்டு இருக்கேன் சாமி. பக்கத்திலே யாரும் இல்லையா? எருமை மாடு இருக்குங்கோ.
படிச்சு சொல்ல யாருமில்லையானு கேட்டேன். ஏங்க... நான் எவ்வளவு விவரமா பதில் சொல்றேன். அது மாதிரி நீங்க கேட்க வேண்டாமா?
வெவரமா பேசறீங்க. 16 நம்பரை படிச்சு சொல்ல மாட்டேங்கறீங்க? நீங்கதானே களவாணிப் பயலுக போன் போட்டு உன் பேங்க் ஏடிஎம் நம்பர் கேட்பான் சொல்லிடாதீங்கன்னு சொல்லிக் கொடுத்தீங்க... இப்ப நீங்களே கேட்டா?!
நெட்டிசன்
|