2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்



ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார். கிட்டத்தட்ட 2,000 டேட்டிங்குகளுக்கு சென்றுள்ளார். அவரது பல டேட்டிங்குகள் வெற்றிபெறவில்லை என்றாலும், டேட்டிங் அனுபவங்களை வைத்து மற்றவர்களுக்கு உதவலாம் எனப் புதிய டேட்டிங் ஏஜென்ஸி ஒன்றைத் தொடங்க தீர்மானித்துள்ளார்.

யோஷியோ என்ற அந்த நபர் அறிவியல் முதுகலை படித்துள்ளார். ஆண்டுக்கு 20 லட்சம் சம்பாதிக்கும் வேலையில் உள்ளார். பல டேட்டிங்குகளுக்குப் பிறகு அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. 

கடைசியாக நடந்த வெற்றிகரமான டேட்டிங்கும், பல டேட்டிங் தந்த தோல்வியால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு ‘Yoshio Marriage Laboratory’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.இந்த நிறுவனம் இலவசமாக டேட்டிங் ஆலோசனைகளை வழங்குமாம். டேட்டிங்கில் ஏற்படும் சிக்கல்களைக் கடக்கவும், உற்ற துணையைத் தேர்ந்தெடுக்கவும் வழிநடத்துமாம். நம் ஊரில் இப்படியொரு ஏஜென்சி எப்பொழுது தொடங்கப்படும்?!

காம்ஸ் பாப்பா