ஜி.டி.நாயுடுவாக மாதவன்!
தமிழகத்தைச் சேர்ந்த ‘கண்டுபிடிப்பு’ விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் சாதனைகள், சேவைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. 1893ல் பிறந்து 1974ல் காலமான அவரின் சாதனைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் வந்துள்ளன.  இப்போது அவரது வரலாறு திரைப்படமாக உள்ளது. இதில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார்.கடந்த 2022ல் வெளியான தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்’ படத்தில், ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. தேசிய விருதும் பெற்றது. அந்த தயாரிப்பு குழு இப்படத்தில் இணைகிறது. ‘இந்தியாவின் எடிசன்’ மற்றும் ‘கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படம், இந்திய சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என மாதவன் நம்புகிறார்.ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஜெர்மனியிலும் படப்பிடிப்பு நடக்கிறது.
ஜி.டி. நாயுடு படத்தை இயக்கும் கிருஷ்ணகுமார் வேறு யாருமல்ல... சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தவர். பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர்.
காம்ஸ் பாப்பா
|