உலக சாம்பியனை வீழ்த்திய சாம்பியன்
இந்திய சதுரங்கத்தின் பொற்காலத்தில் இருக்கிறோம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. தவிர, உலகில் நடக்கும் அனைத்துவிதமான சதுரங்க போட்டிகளிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்தான். ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/28.jpg) சமீபத்தில் நெதர்லாந்தில் புகழ்பெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடந்தது. இதில் உலகின் முன்னணி செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். நடப்பு உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா போன்ற இந்திய வீரர்களும் போட்டி போட்டனர்.
இந்தப் போட்டியில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார் பிரக்ஞானந்தா என்பதுதான் இதில் ஹைலைட். 13ம் சுற்று மற்றும் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் குகேஷும், பிரக்ஞானந்தாவும் 8.5 புள்ளிகள் பெற்று சமநிலையுடன் இருந்தனர்.
இருவருக்குமிடையே டை பிரேக்கர் ஆனது. டை பிரேக்கர் சுற்றில் யார் வெற்றி பெறுவது என்று கடுமையான போட்டி நிலவியது. சற்றும் எதிர்பாராத நிலையில் குகேஷை வீழ்த்தி சாம்பியனாகியிருக்கிறார் பிரக்ஞானந்தா. அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|